என் மலர்
மதுரை
- கோபுரங்கள்-ஆயிரங்கால் மண்டபம் கணினி வரைபடமாக ஆவணப்படுத்தும் அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
- மீனாட்சி அம்மன் கோவிலை வரைபடம் வாயிலாக கண்டு களிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை
உலகப்புகழ் வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இங்குள்ள கோபுரம் மற்றும் சிற்பங்கள் ஆகியவை பல நூறாண்டுகள் பழமையும், சிறப்பும் வாய்ந்தவை.
மதுரை மாநகரின் மையத்தில் 15 ஏக்கர் பரப்ப ளவில் மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள சிறப்பு அம்சங்களை விளக்கும் வகையில், வரைபடம் வெளியிட வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவி லின் கோபுரங்கள் மற்றும் கோவில் வளாகம் முழுவதையும் நவீன கணினி வரைபடம் மூலம் ஆவணப் படுத்துவது என்று கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக கோவில் வளாகத்தில் உள்ள கோபுரங்கள், நுழைவு வாயில்கள், கோவில் விமா னங்கள், பொற்றாமரை குளம், ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த பகுதிகளை கணினி வரைபடமாக உருவாக்கு வதற்காக ரூ.4.5 லட்சம் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி கோரி அறிவிக்கை வெளி யிடப்பட்டு உள்ளது.
இதன் அடிப்படையில் தகுதியான நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, விரை வில் ஒப்பந்தம் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் வரலாற்று பெருமை, ஆன்மீக சிறப்பு வாய்ந்த மீனாட்சி அம்மன் கோவிலை வரைபடம் வாயிலாக கண்டு களிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- மதுரை, திருமங்கலத்தில் காங்கிரசார் திடீர் மறியலில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இதனால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரை
பிரதமர் நரேந்திர மோடி குறித்து கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக குஜராத் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜராத் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து நாடு முழுவதும் காங்கிரசார் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோரிப்பாளையம் பகுதியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.மாவட்டத்தலைவர் கார்த்திகேயன், முன்னாள் நியமனக்குழுத்தலைவர் சிலுவை,செய்யது பாபு, பால் ஜோசப் உள்ளிட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக காங்கிரசார் கோஷம் எழுப்பினர்.

திருமங்கலத்தில் காங்கிரசார் மறியலில் ஈடுபட்டனர்.
இதேபோன்று திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதில் நகர தலைவர் சவுந்தரபாண்டி, மாநில பொதுச் செயலாளர் மகேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பழனிகுமார், வட்டார தலைவர்கள் காசிநாதன், முருகேசன், மகளிரணி பிரவீனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.
- ராணுவ வீரர் மனைவியை மிரட்டி நகை பறித்த கொள்ளையர்களுக்கு போலீசார் தேடி வருகின்றனர்.
- 5 பவுன் தங்கச் சங்கிலி உள்பட மொத்தம் 29 பவுன் நகைகளை பறித்து க்கொண்டு தப்பி விட்டனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி, குராயூரை சேர்ந்தவர் அய்யனார் (வயது32), ராணுவ வீரர். இவரது மனைவி கவுசல்யா(28). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
அய்யனார் காஷ்மீர் ராணுவ முகாமில் தங்கி பணியாற்றி வருகிறார். கவுசல்யா தனது குழந்தை களுடன் குராயூரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அருகில் உள்ள வீட்டில் மாமியார், மாமனார் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் கதவை தட்டி கவுசல்யாவை அழைத்தனர். அவர் வந்து கேட்டபோது உங்கள் மாமனாருக்கு திடீரென உடல்நிலை சரியில்லை என்று கூறினர். அதை உண்மை என்று நம்பிய கவுசல்யா கதவை திறந்தார்.
உடனே வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி கவுசல்யா அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி உள்பட மொத்தம் 29 பவுன் நகைகளை பறித்து க்கொண்டு தப்பி விட்டனர்.
இது குறித்து கவுசல்யா கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுசல்யாவிடம் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களை வரவழைத்து கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். அருகில் உள்ள கண்காணிப்பு காமி ராக்களில் கொள்ளை யர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்தனர்.
இந்த கொள்ளையில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்க லாம் என்று போலீசார் கருதுகின்றனர். அவர்கள் கவுசல்யா தனியாக இருப்பதை நோட்டமிட்டு கைவரிசை காட்டியுள்ளனர். இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- சோழவந்தான் வட்டார ரெயில் பயணிகள் நல சங்க கூட்டம் நடந்தது.
- ரெயில் பயண கட்டணங்களை பழைய கட்டணத்திற்கு குறைக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சோழவந்தான்
சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் வட்டார ரெயில் பயணிகள் நல சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது. முன்னாள் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கதிரேசன், தங்கராஜ் முன்னிலை வகித்தனர். அய்யனார் வரவேற்றார். சோழவந்தான் ரெயில் நிலையத்தில் ஏற்கனவே நின்று சென்ற ரெயில்களும், புதிதாக ரெயில்கள் நின்று செல்வதற்கும் பாண்டியன், பொதிகை, அந்தியோதயா, திருப்பதி எக்ஸ்பிரஸ் , மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் இரு மார்க்கங்களிலும் சோழவந்தான் ரெயில் நிலையத்தில் தலா ஒரு நிமிடம் நின்று செல்ல வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கொரோனோ காலத்தில் உயர்த்தப்பட்ட ரெயில் பயண கட்டணங்களை பழைய கட்டணத்திற்கு குறைக்க வேண்டும் என்றும் மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக கிருஷ்ணன், துணைத் தலைவராக கண்ணன், செயலாளராக அய்யனார் பொருளாளராக சரவணன், துணைச் செயலாளர்கள் சுப்பிரமணியன், ஆனந்தகுமார், பாலசுப்ரமணியன், முத்துகாமாட்சி, முனியம்மாள் ஆகியோரும் சட்ட ஆலோசர்களாக ராஜேந்திரன், ஜோதிராஜ் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முத்துப்பாண்டி நன்றி கூறினார்.
- கள்ளழகர் கோவில் சுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாணம் வருகிற 5-ந் தேதி நடக்கிறது.
- விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
மதுரை
108 வைணவ தேசங்களில் ஒன்றான அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் திருக்கல்யாண திருவிழா விமரிசையாக நடை பெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான விழா வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று மாலை 6 மணிக்கு கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி- பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுகிறார். விழா நடக்கும் 5 நாட்களும் தினமும் காலை, மாலை சுவாமி -அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர் களுக்கு காட்சியளிக்கின்ற னர்.
சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. அன்றைய நாள் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறு கின்றன. காலை 7 மணி முதல் 7.30 மணிக்குள் கள்ளழகர் தோளுக்கினி யான் அலங்காரத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுகிறார். பின்னர் 9.50 மணியில் இருந்து 10 20 மணிக்குள் சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி -பூதேவி, கல்யாண சுந்தரவல்லி தாயார் மற்றும் ஆண்டாள் ஆகியோரை திருமணம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
அன்று இரவு மணக்கோலத்தில் சுவாமி அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக் கிறார்கள். 6-ந் தேதி மஞ்சள் நீர் சாற்று முறையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
- 26-ந்தேதி பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- ஏப்ரல் 9-ந்தேதி மகா தேரோட்டம் நடக்கிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகின்ற 26-ந்தேதி பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக அடுத்த (ஏப்ரல்) மாதம் 9-ந்தேதி மகா தேரோட்டம் நடக்கிறது. கோவில் வாசலில் இருந்து சுமார் 3 கி.மீ. சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையில் பெரியதேர் வலம் வரும்.லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து தரிசனம் செய்வார்கள்.
தேரோட்டத்திற்கு முதல் நாள் மாலை 6 மணியில் இருந்து விடிய, விடிய கிரிவலத்தில் பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். கிரிவலப்பாதை சுற்றிலுமாக பக்தர்களுக்கு ஏராளமானோர் தங்களது நேர்த்தியாக அன்னதானம் வழங்குவார்கள். .இதனையொட்டி கிரிவலப்பாதை சீராக இருக்க வேண்டும்.
அவனியாபுரம் ரோடு சந்திப்பில் இருந்து கல்வெட்டு குகை கோவில் வரை சுமார் 1 கி.மீ. சுற்றளவு வயல்வெளி சார்ந்த ஒரு பகுதியில் முட்செடிகள் வளர்ந்துள்ளன. மேலும் கிரிவலப்பாதையில் உள்ள மின்கம்பங்களில் மின்விளக்குகள் கண்சிமிட்டுகிறது. அதனால் குறிப்பிட்ட தூரம் இருள் சூழ்ந்துள்ளது. ஒரு சில மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. கிரிவலப் பாதையை சுற்றி உள்ள தொட்டிகளில் குடிதண்ணீர் நிரப்பப்படாத நிலையே இருந்து வருகிறது.
தேரோடும் பகுதியான தென்பரங்குன்றத்தில் உள்ள நவீன கழிப்பறை பராமரிக்கப்படாத நிலையில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாதபடி பூட்டிய நிலையில் உள்ளது. இதனால் பவுர்ணமி தோறும் கிரிவலம் வரக்கூடிய பக்தர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் பங்குனி பெருவிழாவின் மகா தேரோட்டத்திற்கு 2 வாரங்கள் உள்ள நிலையில் கிரிவலப்பாதை முழுமையாக சீரமைக்கப்படாத நிலை இருந்து வருகிறது.
இதுகுறித்து பக்தர்கள் முருகன், மருது ஆகியோர் கூறும்போது, கிரிவலப்பாதையில் வயல் சார்ந்த பகுதியில் முட்செடிகள் முழுமையாக வெட்டுவதோடு கால்களில் நெருஞ்சி முட்கள் குத்தப்படாதபடி எந்திரம் மூலம் குறிப்பிட்ட தூரம் ரோட்டை சமப்படுத்தி செம்மண் பரப்பி பக்தர்கள் சிரமம் இன்றி நடந்து செல்ல வசதி செய்ய வேண்டும்.கடந்த ஆண்டில் விநாயகர் தேரில் சேதமடைந்த மின்கம்பம் சாய்ந்தது. ஆகவே சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும்.தென்பரங்குன்றத்தில் அதிநவீன கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.கிரிவலப் பாதை முழுவதுமாக தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப மாநகராட்சி நிர்வாகம் போர்க்காலநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
- ரோட்டோரம் கிடந்த 2 மாத பெண் குழந்தையை வீசிசென்றது யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண் குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி உணவு விடு திக்கு எதிரில் சாலை யோரம் மெத்தையுடன் கூடிய சிறிய படுக்கையில் 2 மாத பெண் குழந்தை நேற்று இரவு அநாதையாக கிடந்தது.
இதனை கண்ட பொது மக்கள் வாடிப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் முருகேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண் குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதைத்தொடர்ந்து அந்த குழந்தை வீசிச்சென்ற பெண் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலையோரம் பெண் குழந்தையை வீசிச்சென்ற சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- திருக்கல்யாண திருவிழா 5-ந்தேதி நடக்கிறது.
- 6-ந்தேதி மஞ்சள் நீர்சாற்று முறையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் திருக்கல்யாண திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டுக்கான இந்த திருவிழா வருகிற 2-ந்தேதி காலை 9.45 மணிக்கு சாமி புறப்பாடு நிகழ்ச்சியுடன் ெதாடங்குகிறது.
இதை தொடர்ந்து அன்று மாலை 6 மணியளவில் கள்ளழகர் ஸ்ரீதேவி, பூமிதேவியருடன் பல்லக்கில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்கிறார்.பின்னர் இரவு 7.30 மணிக்கு சுவாமி இருப்பிடம் செல்கிறார்.தொடர்ந்து 3-ந்தேதியும், 4-ந்தேதியும் அதே நிகழ்ச்சிகள் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண திருவிழா 5-ந்தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 9.50 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் கள்ளழகர் ஒரே நேரத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவி, கல்யாண சுந்தரவல்லி தாயார், ஆண்டாள் ஆகிய 4 பிராட்டிகளை மணக்கிறார்.
திருக்கல்யாணம் முடிந்ததும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெறும். அதனை தொடர்ந்து இரவு பெருமாள் நான்கு தேவியர்களுடன் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பின்னர் 6-ந்தேதி மஞ்சள் நீர்சாற்று முறையுடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, கண்காணிப்பாளர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- தேர்தல் வாக்குறுதி எதுவும் தி.மு.க. நிறைவேற்றவில்லை.
- மக்கள் நீதி மையம் காங்கிரசுடன் தான் போகப்போகிறது.
மதுரை:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
குஜராத் மாநிலம் சூரத்தில் ஒரு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டப்படி எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு 2 ஆண்டுக்கு மேல் சிறை தண்டனை கிடைக்கிறதோ, அவரது பதவிக்காலம் சஸ்பெண்டு ஆகும். லட்சத்தீவு எம்.பி.க்கு இதே பிரச்சினை உள்ளது. பீகார், உத்தரபிரதேசத்தில் இது போல் சில எம்.பி.க்களுக்கு நடந்துள்ளது. ராகுல் காந்திக்கு வேண்டுமென்றே சூரத் கோர்ட்டு தண்டனை வழங்கியுள்ளதாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் இதனை திசைதிருப்பி வருகிறார்கள். அவருக்கு 30 நாட்கள் அவகாசம் மேல்முறையீடு செய்ய தான் வழங்கப்பட்டுள்ளது.
பா.ஜனதா தேசிய தலைவர் நட்டா, உள்துறை மத்திய மந்திரி அமித்ஷா, அமைப்பு செயலாளர் சந்தோஷ் உள்ளிட்டோரை நேற்று டெல்லியில் சந்தித்தேன். கடந்த ஒரு மாத காலத்தில் 2, 3 முறை கர்நாடக தேர்தல் தொடர்பாக மத்திய மந்திரி அமித்ஷாவை நான் சந்தித்துள்ளேன்.
பா.ஜனதா கட்சியை பொருத்தவரை அகில இந்திய தலைமையில் இருந்து தேசிய தலைவர், பிரதமர், உள்துறை மத்திய மந்திரியில் இருந்து தமிழ்நாட்டில் கடைகோடியில் உள்ள கட்சியில் காரியகர்த்தாவரை அனைவருக்கும் கட்சியை எப்படி வலிமைப்படுத்துவது? தமிழக மக்களின் அன்பை எவ்வாறு பெறுவது, தமிழகத்தை ஆளும் கட்சியாக பா.ஜனதாவை எப்படி கொண்டுவருவது? என்பது தான் எண்ணமாக இருக்கிறது. அதில் அனைவரும் தெளிவாக இருக்கிறோம்.
தமிழகத்தின் அரசியல் களம் பல்வேறு விதமாக உள்ளது. அதில் பா.ஜனதாவின் வளர்ச்சி எவ்வாறு இருக்கிறது? தமிழகத்தின் நிலை என்ன? போன்ற விபரங்கள் தொடர்பாக பேசுவதற்காக தேசிய தலைவர் நட்டா, உள்துறை மத்திய மந்திரி அமித்ஷா, அமைப்பு செயலாளர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்தேன். இது வழக்கமாக நடக்கக்கூடிய ஒரு சந்திப்பு தான்.
கூட்டணியை பொருத்தவரை எங்களுக்குள் எந்த குழப்பமும் இல்லை. பா.ஜனதாவின் மூத்த தலைவர்கள் இடம் பெற்றுள்ள பார்லிமெண்டரி குழு அதுகுறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அந்த குழுவே கூட்டணி தொடர்பான விசயங்களை முன்னெடுத்து செல்கிறது. பாரதிய ஜனதா கட்சிக்கோ, எனக்கோ தனிப்பட்ட முறையில் எந்த ஒரு கட்சியின் மீதும், எந்த ஒரு தலைவரின் மீது கோபமோ, ஆதங்கமோ எதுவும் இல்லை. எல்லா கட்சியினரும் அவரவர் கட்சி வளர்ச்சி வளர வேண்டும் என்று விருப்பப்படுவார்கள். ஒரு கூட்டணியில் இருந்தாலும் அது தான் தர்மம்.
அ.தி.மு.க. என்பது ஒரு பெரிய கட்சி. அவர்கள் வளர வேண்டும் என்று நினைப்பதில் எந்த தவறும் இல்லை. அதே போல் பா.ஜனதா கட்சியும் வேகமாக வளர வேண்டும், தமிழக மக்களின் அன்பை பெற வேண்டும் என்று நினைப்பதும் தவறில்லை. இது போல் நினைக்கும்போது கூட்டணிக்குள் சில சலசலப்பு வருவது சகஜம்.
காங்கிரஸ் கட்சியை பொருத்தவரையில் தங்கள் கட்சி வளர வேண்டும் என அந்த கட்சியில் இருப்பவர்கள் யாரும் இதுவரை கூறவில்லை. தி.மு.க.வுடனான அவர்களது கூட்டணி ஒரு விசித்திரமான கூட்டணி. எங்களது கூட்டணி ஆக்கப்பூர்வமான கூட்டணி.
சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தல், மீம்ஸ் வீடியோ வெளியிடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களை தமிழகத்தில் கைது செய்து அடைக்கிறார்கள். அத்தகைய தமிழகத்தில் முதலமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலினுக்கு ஜனநாயகத்தை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. அமைச்சர் நாசர் கனவுலகத்தில் இருக்கிறார். பால் கொள்முதல் விவகாரத்தில் இல்லாத தகவல்களை தெரிவிக்கிறா்ா. தமிழக பால் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக பா.ஜனதாவின் விவசாய அணி சார்பில் கோட்டையை நோக்கி எடுத்து செல்வோம்.
தேர்தல் வாக்குறுதி எதுவும் தி.மு.க. நிறைவேற்றவில்லை. ஆக்கப்பூர்வமான பணிகள் எதுவும் அவர்கள் செய்யவில்லை. இந்த அரசு மேக்அப் போட்டு அரசியல் நடத்தி வருகிறது.
ஆன்லைன் சூதாட்டத்தில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது. ஆன்லைன் ரம்மி தொடர்பாக கவர்னர் திருப்பி அனுப்பி இருக்கிறார். ஆளுநர் பல்வேறு கேள்விகளை கேட்கிறார். ஆனால் இந்த அரசு திருப்பித் திருப்பி மசோதாவை அனுப்புகிறது.
கவர்னர் மசோதாவிற்கு கையெழுத்து போட்டாலும் 100 சதவீதம் நீதிமன்ற தடை வர வாய்ப்பு உள்ளது எனத் தெரிந்தும் மீண்டும் மீண்டும் அனுப்புவதால் தி.மு.க. அரசுக்கும் சில அமைச்சர்களுக்கும் ஆன்லைன் சூதாட்ட கம்பெனிகளுக்குள் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு வருகிறது.
மக்கள் நீதி மையம் காங்கிரசுடன் தான் போகப்போகிறது. தொடர்ந்து பலமுறை இல்லை என மறுத்தாலும் அதை உறுதிப்படுத்தும் வகையில் கமல்ஹாசன் நடந்து கொள்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மேலையூர் நெடுஞ்சாலையில் மட்டும் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது.
- டாஸ்மாக் கடையினால் மோதல்கள் ஏற்பட்டு, போலீஸ்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன.
மதுரை:
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா வாகைக்குளத்தை சேர்ந்த ஞானதாஸ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் நாம் தமிழர் கட்சியில் உள்ளேன். எங்கள் கிராமத்தை சுற்றி செங்குளம், மேலையூர், புள்ளநாயக்கன்பட்டி, ராஜகோபாலபுரம், பாமாபுரம், செட்டிகுளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இதில் பெரும்பாலான கிராமங்களில் டாஸ்மாக் கடைகள் கிடையாது.
மேலையூர் நெடுஞ்சாலையில் மட்டும் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி தகராறுகள் மற்றும் பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தன. இதனால் அந்த கடையை மூடினர்.
தற்போது எங்கள் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு இடையே டாஸ்மாக் கடையை அமைத்து செயல்படுத்தி வருகின்றனர். 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்களும் இந்த டாஸ்மாக் கடைக்கு வருகின்றனர். இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படுகிறது.
இந்த டாஸ்மாக் கடையினால் மோதல்கள் ஏற்பட்டு, போலீஸ்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன. டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்தியதால், பொதுமக்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த டாஸ்மாக் கடையால் பொதுமக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த கடையை அகற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் கிராமத்தில் செயல்படும் டாஸ்மாக் கடை உரிய அனுமதி பெற்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் 20 கிலோமீட்டர் சுற்றளவுக்கு வேறு டாஸ்மாக் கடை கிடையாது என்றார்.
அதற்கு நீதிபதிகள், 20 கிலோமீட்டர் தொலைவிற்கு ஒரு மதுபான கடை தான் உள்ளது என கூற மதுபானம் பொதுமக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசியப் பொருளா? என கேள்வி எழுப்பினர்.
பின்னர் இந்த வழக்கு குறித்து தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.
- ஜெனக நாராயண பெருமாள் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- விழாவுக்கான ஏற்பாடுகளை முரளிதரன் செய்துள்ளார்.
சோழவந்தான்
சோழவந்தான் ஜெனக நாராயணபெருமாள் கோவில் 47-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று மாலை விஸ்வக்சேனர் புறப்பாடு நடந்தது. உபயதாரர் கோச்சாயி அய்யர் குமாரர் ரவிக்குமார் நேற்று யாகசாலை மண்டபத்தில் ரெகுராமபட்டர் ஸ்ரீபதி பட்டர் ஆகியோர் தலைமையில் யாக பூஜை நடந்தது.
இதைத்தொடர்ந்து 9.30 மணியளவில் திருவிழா கொடி மேளதாளத் துடன் 4 ரத வீதியும் எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் கோவில் முன்புள்ள கொடி மரத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
விழாவை முன்னிட்டு நேற்றுஇரவு அன்ன வாகனத்தில் சுவாமி உலா வருதல் நடைெபற்றது. உபயதார் கன்னியப்பன் முதலியார், செயல் அலுவலர் சுதா, கோவில் பணியாளர்கள் முரளிதரன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
வருகிற 28-ந்தேதி காலை 10 மணியளவில் திருக்கல்யாண விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி உலாவரும் நிகழ்ச்சி, மாலையில் சக்கரத்தாழ்வார் புறப்பாடு நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை முரளிதரன் செய்துள்ளார்.
- தொழிலாளி-வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
- திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆஸ்டின்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கருவேலம்பட்டியை சேர்ந்தவர் காசிகு மார்(வயது 35), தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக ராஜேஸ்வரி தனது குழந்தைகளுடன் தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காசிகுமார் மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த வருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் வர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தியுடன் வீட்டுக்கு வந்த காசிகுமார், பூச்சிமருந்தை குடித்து மயங்கினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே காசிகுமார் இறந்தார். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்தவர் சரவணன்(32). இவரும் கல்லுப்பட்டியை சேர்ந்த அனிதா(30) என்பவரும் கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் திருமங்கலம் ஜவகர்நகர் பகுதியில் வசித்து வந்தனர். அனிதா மதுரை ஐகோர்ட்டில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சரவணன் நேற்று மதியம் வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். மாலையில் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த அனிதா கணவர் தூங்கி இருப்பார் என நினைத்து விட்டார். ஆனால் இரவு 11 மணியளவிலும் சரவணன் எழுந்திருக்காததால் சந்தேகம் அடைந்து பார்த்தபோது விஷம் குடித்தது தெரியவந்தது.
உடனே அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோ தித்தபோது சரவணன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






