என் மலர்tooltip icon

    மதுரை

    • ரம்ஜான் பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடுவோம்.
    • பசும்பொன் பாண்டியன் வாழ்த்து தெரிவித்தார்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் நோன்பிருந்து அறநெறியுடன் பிறருக்கு ஈதல் வேண்டும் என்ற அடிப்படையில் நபிகள் நாயகம் போதித்த நன்நெறிகளை கடைபிடித்து ரம்ஜான் பெருநாளை திருநாளாக கொண்டாடி வருகிறார்கள். அனை வருக்கும் எனது சார்பிலும், அ.தி.ம.மு.க. சார்பிலும் ரம்ஜான் வாழ்த்துக்களை உவகையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    திராவிட மண்ணில் மத நல்லிணக்கத்தோடு திராவிட இயக்கம் ரம்ஜான் திருநாளை கொண்டாடி வருகிற சிறுபான்மை மக்களுக்கு என்றைக்கும் உறுதுணையாக திகழ்ந்து வருகிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா வழியில் தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய பெருமக்களோடு இணைந்து சமய நல்லிணக்கத்தை பேணிக்காத்து வருவது திராவிட இயக்கங்களின் தலையாய கடமையாகும்.தமிழ் மண்ணில் திராவிட மாடல் அரசை திறம்பட நடத்தி வருகிற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாத்து வருவதோடு குறிப்பாக சிறுபான்மை மக்களான கிறிஸ்துவ, இஸ்லாமிய, பழங்குடி, பட்டியல் இன மக்களை பாதுகாப்பதில் தி.மு.க. அரசு அரணாக, கேடயமாக, பாதுகாப்பு கவசமாக திகழ்ந்து வருகிறது,

    சாதி, சமய மோதல்களை தவிர்த்து ஒன்றுபட்ட திராவிட சமூகமாக சமத்துவம், சகோதரத்துவம் நிலைத்திட, மனிதநேயம் மலர்ந்திட சபதமேற்று ரம்ஜான் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டா டுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முஸ்லிம்களுக்கு தொழுகை விரிப்பை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • ரம்ஜான் பரிசாக வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க மாவட்ட செயலாளருமான ராஜன்செல்லப்பா, ரம்ஜான் பண்டிகையையொட்டி திருப்பரங்குன்றம் பெரியரதவீதியில் உள்ள சிக்கந்தர்தர்ஹா பள்ளி வாசல் நிர்வாகிகளான சீனியர் ஒஜீர்கான், செயலாளர் ஆரிப்கான், துணைச் செயலாளர் மாபூப்பாட்ஷா, ஆகியோர் உள்ளிட்ட ஜமாத் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தொழுகை விரிப்புகள் மற்றும் மலைமீது அமைந்துள்ள சிக்கந்தர் தர்ஹாவின் புகைப்படத்தை யும் ரம்ஜான் பரிசாக வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றியசெயலாளர் நிலையூர்முருகன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கவிஞர் ப.மோகன்தாஸ், கலைப்பிரிவு இணைச்செய லாளர்கள் பாலகிருஷ்ணன், சவுந்தரம், சிறுபான்மை பிரிவு செயலாளர் அக்பர் அலி மற்றும் சாகுல்ஹமிது, இளைஞரணி சேக்முகமது நஜீர், பைசல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • வருகிற 30-ந் தேதிக்குள் சொத்துவரி செலுத்தும் உரிமையாளர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும்.
    • மாநகராட்சி மேயர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998-க்கு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 13.4.2023 முதல் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் விதிகள் 2023 நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998 பிரிவு 84(1)ல், அரை யாண்டுக்கான சொத்துவரியை முதல் 30 நாட்களுக்குள் செலுத்தும் உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படும்.

    அதன்படி மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள உரிமையாளர்கள் தங்களது 2023-24 ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்துவரியை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை பெற தகுதியுடையவர் ஆகிறார்கள். ஏப்ரல் 30-ந் தேதிக்குள் சொத்துவரி செலுத்தும் உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.

    மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் உள்ள உரிமையாளர்களுக்கு குறுந்தகவல் அனுப்புதல், மாநகராட்சி மைய அலுவ லகம் மற்றும் 5 மண்டல அலுவலகங்களில் அறிவிப்பு பலகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பதாகைகள் வைத்தல், ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தல், ரேடியோ, செய்தித்தாள்கள் மற்றும் உள்ளுர் கேபிள் தொலைக்காட்சி வாயிலாக சொத்துவரியை உரிமையாளர்கள் செலுத்து வதற்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சொத்து உரிமையாளர்கள், சொத்துவரியை மதுரை மாநகராட்சி அனைத்து வரி வசூல் மையங்கள் மற்றும் https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் "TN Urban Esevai" செயலி வாயிலாக வரி செலுத்து வதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத் தொகையை பெற்றிடுமாறும், மதுரை மாநகராட்சி பகுதி களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளில் தங்களது பங்களிப்பை வழங்குமாறு மதுரை மாநகராட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டப்பட்டது.
    • வக்கீல் முத்துராஜா, பழனிச்சாமி, உச்சப்பட்டி செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்

    அ.தி.மு.க.பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்ததற்கு வரவேற்பு தெரிவித்து மதுரை மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருமங்கலம் தேவர் சிலை முன்பு மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்செல்வம் தலைமையிலும் ஒன்றிய செயலாளர் அன்பழகன் முன்னிலையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

    இதில் யூனியன் சேர்மன் லதா ஜெகன், பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன், தகவல் சார்பு அணி நிர்வாகிகள் சிங்கராஜ் பாண்டியன், சதீஷ் சண்முகம், கவிகாசி மாயன், வாகைக்குளம் சிவசக்தி, வக்கீல் முத்துராஜா, பழனிச்சாமி, உச்சப்பட்டி செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி மக்களால் நிராகரிக்கப்பட்டவை.
    • மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டியளித்தார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திரு மங்கலம் தொகுதிக்குட்பட்ட மேல உப்பிலிக்குண்டு, கூடக்கோவில், டி.கொக் குளம், தும்பக்குளம், நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், வளர்ச்சி பணிகள் குறித்து விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    நூறுநாள் வேலை திட்டம் கிராம மக்களுக்கு முக்கியமான திட்டமாகும். மத்திய அரசு ஆண்டுதோறும் இந்த திட்டத்திற்கு நிதியை குறைத்து வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிக்கப் படுவார்கள். கூடக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அ.தி.முக.-பா.ஜ.க. கூட்டணி கட்டாயத்திற்கான கூட்டணி ஆகும். இந்த கூட்டணி தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்டது. தரம் தாழ்ந்த அரசியலை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்து வருகிறார். ராகுல் காந்தி பதவி நீக்கம் தொடர்பான வழக்கில் நிச்சயம் நீதி வெல்லும், நியாயம் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குருவித்துறை குரு பகவான் கோவிலி்ல் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை நடந்தது.
    • சப் இன்ஸ்பெக்டர் குபேந்திரன் உள்பட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரதவல்லப பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் குருப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான குரு பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று காலை லட்சார்ச்சனை நடைபெற்றது.

    இதில் வெளியூர் மற்றும் உள்ளூர் பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் கோவிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு பரிகார யாகங்கள், மகா அபிஷேகம் ஆகியவை நடந்தது.

    சமயநல்லூர் துணை சூப்பிரண்டு பாலசுந்தரம், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன், காடுபட்டி சப் இன்ஸ்பெக்டர் குபேந்திரன் உள்பட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செயது வித்யாபதியை கைது செய்தனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே எஸ்.வி. நத்தம் லட்சுமி புரத்தை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இவரது மனைவி நாகரத்தினம் (வயது 37). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நாகரத்தினம் சாம்பிராணி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொ லை செய்து கொண்டார்.

    இது குறித்து நாகரத்தினத்தின் தாய் பாண்டியம்மாள் கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம் அருகே வேடர் புளியங்கு ளத்தை சேர்ந்தவர் வித்யாபதி (வயது 55). இவரது மனைவி ஆதிலட்சுமி (45). வத்யாபதி சிவில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். நாகர்கோவிலில் வேலை பார்த்து வந்த அவர் வாரத்தில் ஒரு நாள் மட்டும் வீட்டுக்கு வந்து செல்வார்.

    இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த ஆதி லட்சுமி கடந்த 19-ந் தேதி இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது சாவுக்கு கணவர் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்திருந்தார். இதுபற்றிய புகாரின் பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக வித்யாபதியை கைது செய்தனர்.

    • அலங்காநல்லூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் ஸ்டேட் வங்கி முன்பு மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பொருளாளர் நூர் முகமது, மகளிரணி தலைவி செல்லப்பா சரவணன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயமணி, திலகராஜ், வட்டார தலைவர்கள் சுப்பாராயலு, காந்தி, குருநாதன், பழனிவேல், நகர் தலைவர்கள் சசி, முருகானந்தம், முத்து பாண்டி, அமைப்பு சாரா மாவட்ட தலைவர் சோனைமுத்து, இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் வருசை முகமது, பாலமேடு சந்திரசேகர், மனித உரிமை வட்டாரத் தலைவர் சரந்தாங்கி முத்து, முன்னாள் தலைவர் மலைகணி, திரவியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மேலூர் நகராட்சியில் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
    • நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மேலூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய நடப்பு சொத்து வரிகளை நகராட்சி வரி வசூலிப்பாளர்கள் மூலம் மற்றும் நகராட்சி வசூல் மையம் மூலமாகவோ, காசோலை மற்றும் மின்னணு டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாகவோ ஏப்ரல் 30-ந் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு ஊக்கத் தொகையாக 5 சதவீதம், அதாவது அதிகபட்சமாக ரூ.5000 வரை அளிக்கப்படும். எனவே நகராட்சிக்கு சொத்து வரி செலுத்தும் பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி வரும் ஏப்ரல் 30-ந் தேதிக்குள் தங்கள் சொத்து வரிகளை செலுத்தி அதற்கான ஊக்கத்தொகையை பெற்று கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அலங்காநல்லூர், பாலமேட்டில் அ.ம.மு.க. சார்பில் நீர்-மோர் பந்தல் திறக்கப்பட்டது.
    • மகேந்திரன் நீர்-மோர் பந்தலை திறந்து பொதுமக்களுக்கு நீர்-மோர் வழங்கினார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் கோடீஸ்வரன் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் செல்வம், மேற்கு ஒன்றிய செயலாளர் ரகு, நகர செயலாளர் ராஜபிரபு, இணைச் செயலாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக தெற்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் கலந்துகொண்டு நீர்மோர் பந்தலை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு தண்ணீர் பழம், இளநீர், மோர் உள்ளிட்டவைகளை வழங்கினார். முன்னதாக கேட்டுக்கடையில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விவசாய அணி பிச்சை, இளைஞரணி செயலாளர் வக்கீல் சந்திரசேகர், மாணவரணி செயலாளர் அசோக், ஜெயலலிதா பேரவை கணேசன், ஓட்டுனர் அணி திருப்பதி, நீதி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் பாலமேடு பேரூர் கழகம் சார்பில் ஒன்றிய செயலாளர் கழுவம்பாறை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மகேந்திரன் நீர்-மோர் பந்தலை திறந்து பொதுமக்களுக்கு நீர்-மோர் வழங்கினார்.

    • ஓட்டல் மேலாண்மை படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் பி.எஸ்.சி. (ஓட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி), டிப்ளமோ இன் புட் ப்ரொடக்ஷன், உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினைஞர் ஆகிய படிப்புகளுக்கு விண்ண ப்பங்கள் வரவேற்கப்ப டுகின்றன. எனவே 10, 12-ம் வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்ற, குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்கு மிகாத மாணவ மாணவிகள் விண்ணப்பி க்கலாம்.

    படிப்பு முடிந்தவுடன் நட்சத்திர விடுதிகள், விமானம்-கப்பல் மற்றும் உயர்தர உணவக ங்களில் வேலை வாய்ப்பு பெற்று தரப்படும்.

    பி.எஸ்.சி. (ஓட்டல் மேலா ண்மை) பட்டபடிப்புக்கு NCHM JEE பரீட்சையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த நுழைவு தேர்வுக்கான பயிற்சி சென்னையில் தாட்கோ மூலம் வழங்கப்படும். இதற்காக மாணவ- மாணவிகள் வருகிற 27-ம் தேதிக்குள் www.tahdco.com இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். படிப்புக்கான செலவி னத்தை தாட்கோ ஏற்றுக்கொள்ளும். ஓட்டல் மேலாண்மை படிப்பு முடித்தவர்களுக்கு ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25,000 முதல் ரூ.35,000/- வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றபடி ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை பதவி உயர்வு அடிப்படையில் மாத ஊதியம் பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர் தெரிவித்து உள்ளார்.

    • சோழவந்தான் கோவில் மண்டல அபிஷேகம் நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை பன்னிமுட்டி முனியாண்டி சுவாமி கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் பன்னி முட்டி முனியாண்டி கோவில் மண்டல அபிஷேகம் நடைபெற்றது. இந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது. இதையொட்டி மண்டல பூஜை தினசரி நடைபெற்று வந்தது. சிறப்பு மண்டல அபிஷேகம் ஆனந்த் என்ற கற்பூரபட்டர் தலைமையில் யாகபூஜை இன்று காலை நடந்தது இதைத் தொடர்ந்து பன்னி முட்டி முனியாண்டி சுவாமி மற்றும் பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், மண்டல அபிஷேகம் நடைபெற்றது. சண்முகபூசாரி பூஜை செய்து பிரசாதம் வழங்கினார். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை பன்னிமுட்டி முனியாண்டி சுவாமி கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். முன்னாள் சேர்மன் எம்.கே. முருகேசன், காடுபட்டி திரவுபதி அம்மன் கோவில் பூசாரி பாலு, முதலியார் கோட்டை கிராமத்தலைவர் ஜெயக்கொடி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×