அ.ம.மு.க. சார்பில் நீர்-மோர் பந்தல் திறப்பு

அலங்காநல்லூர், பாலமேட்டில் அ.ம.மு.க. சார்பில் நீர்-மோர் பந்தல் திறக்கப்பட்டது. மகேந்திரன் நீர்-மோர் பந்தலை திறந்து பொதுமக்களுக்கு நீர்-மோர் வழங்கினார்.
அ.ம.மு.க. சார்பில் நீர்-மோர் பந்தல் திறப்பு
Published on

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் கோடீஸ்வரன் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் செல்வம், மேற்கு ஒன்றிய செயலாளர் ரகு, நகர செயலாளர் ராஜபிரபு, இணைச் செயலாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக தெற்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் கலந்துகொண்டு நீர்மோர் பந்தலை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு தண்ணீர் பழம், இளநீர், மோர் உள்ளிட்டவைகளை வழங்கினார். முன்னதாக கேட்டுக்கடையில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விவசாய அணி பிச்சை, இளைஞரணி செயலாளர் வக்கீல் சந்திரசேகர், மாணவரணி செயலாளர் அசோக், ஜெயலலிதா பேரவை கணேசன், ஓட்டுனர் அணி திருப்பதி, நீதி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் பாலமேடு பேரூர் கழகம் சார்பில் ஒன்றிய செயலாளர் கழுவம்பாறை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மகேந்திரன் நீர்-மோர் பந்தலை திறந்து பொதுமக்களுக்கு நீர்-மோர் வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com