என் மலர்
உள்ளூர் செய்திகள்

குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை
- குருவித்துறை குரு பகவான் கோவிலி்ல் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை நடந்தது.
- சப் இன்ஸ்பெக்டர் குபேந்திரன் உள்பட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரதவல்லப பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் குருப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான குரு பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று காலை லட்சார்ச்சனை நடைபெற்றது.
இதில் வெளியூர் மற்றும் உள்ளூர் பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் கோவிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு பரிகார யாகங்கள், மகா அபிஷேகம் ஆகியவை நடந்தது.
சமயநல்லூர் துணை சூப்பிரண்டு பாலசுந்தரம், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன், காடுபட்டி சப் இன்ஸ்பெக்டர் குபேந்திரன் உள்பட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story






