என் மலர்tooltip icon

    மதுரை

    • சோழவந்தான் திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா தொடங்கியது.
    • 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு யாகபூஜை நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு யாகபூஜை நடந்தது. பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன், திருப்பதி, குப்புசாமி, செயல்அலுவலர் இளமதி ஆகியோர் முன்னிலையில் இவ்வருட பொறுப்பாளர் பரம்பரை அறங்காவலர் ஜவகர்லால் கொடி ஏற்ற பொருட்களை எடுத்து வந்தார்.

    மேளதாளத்துடன் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து கோவில் முன்பாக உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பாலமேடு அருகே டிராக்டர் மோதி ஓட்டல் ஊழியர் பலியானார்.
    • விபத்துக்கு காரணமான டிராக்டரை பறிமுதல் செய்து டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அலங்காநல்லூர்

    திண்டுக்கல் மாவட்டம் அய்யாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிமணி (வயது27). இவர் அதே பகுதியில் உள்ள ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு ஜோதிமணி மோட்டார்சைக்கிளில் அய்யாபட்டியில் இருந்து மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள எர்ரம்பட்டி யில் உள்ள உறவினர் வீட்டுக்கு புறப்பட்டு வந்தார். பாலமேடு அருகே ராஜாக்காள்பட்டி ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக எதிரே வேகமாக வந்த டிராக்டர், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஜோதிமணி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்த பாலமேடு போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து ஜோதிமணி யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்துக்கு காரணமான டிராக்டரை பறிமுதல் செய்து டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரியாறு கால்வாய் சீரமைக்கும் பணியால் மதுரை கிழக்கு, மேலூர் தாலுகாவில் 22 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும்.
    • இந்த தகவலை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாங்குளம் கிராமம் கண்ட முத்துப்பட்டியில் நீர்வளத்துறை சார்பில் ரூ.4.65 கோடியில் பெரியாறு கால்வாய் சீரமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடந்தது. இதில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்று பெரியாறு பிரதான கால்வாய் மற்றும் அதன் பகிர்மான கால்வாய்கள் புனரமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மதுரை மேலூர் வட்டத்திற்குட்பட்ட மாங்குளம் கிராமம் கண்டமுத்துப்பட்டி யில் உள்ள பெரியாறு பிரதான கால்வாய் நெடுகை தூரம் 47/100 கி.மீ முதல் நெடுகை தூரம் 58/000 கி.மீ வரை மற்றும் அதன் பகிர்மான கால்வாய்கள் புனரமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட் டுள்ளது. இந்த பணிகள் நபார்டு நிதியுதவியு டன் ரூ.4.65 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இந்த திட்டத்தின் மூலம் கிழக்கு வட்டத்தில் உள்ள மாங்குளம், சின்ன மாங்குளம், கண்ட முத்துபட்டி மீனாட்சிபுரம், தேத்தம்படி ஆகிய 5 கிராமங்களும், மேலூர் வட்டத்தில் உள்ள கிடாரிபட்டி, அரிட்டாபட்டி, ஆ.வல்லாளபட்டி, புலிப்பட்டி, எட்டிமங்களம், சூரக்குண்டு, கல்லம்பட்டி, தெற்குத்தெரு, நரசிங்கம்பட்டி, திருவாதவூர் ஆகிய 10கிராமங்களும் பயன்பெறும்.

    இதன் மூலம் மதுரை கிழக்கு வட்டம் மற்றும் மேலூர் வட்டத்தில் உள்ள 15 கிராமங்களில் 192 கண்மாய்களுக்கும், 22,332 ஏக்கர் பாசன நிலங்களும் முழு பாசன வசதி பெறும். நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து அந்த பகுதி மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வாழ்வாதாரம் உயரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சின்னமாங்குளம் பகுதி யில் உள்ள 40குடியிருப்பு களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது பகுதியில் மழை காலத்தில் சாலை பாதிப்பு ஏற்படு வதாகவும், இதனைத் தவிர்க்கும் வகையில் புதிதாக சிறுபாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து அமைச்சர் மூர்த்தி பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அந்த பகுதியில் புதிய பாலம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து ஒருவார காலத்திற்குள் பணிகளை தொடங்க வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், மேற்குறிப்பிட்ட 40 குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வசதி வழங்கவும், உத்தரவிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சி அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து ஆபாசமாக பேசியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்தில் ஊராட்சி செயலர் புகார் செய்தார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் தோப்பூர் ஊராட்சி அலுவலகம் உள்ளது. சம்பவத்தன்று அந்த அலுவலகத்திற்கு அதேபகுதியைச் சேர்ந்த மணி மகன் கதிர்வேல் என்பவர் வந்தார். ஊராட்சித் தலைவரின் அறைக்குள் அத்துமீறி நுழைந்த அவர், அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டு ஊராட்சி தலைவரை ஆபாசமாக பேசி கேலி கிண்டல் செய்தாராம். மேலும் வெளியே வந்து தெருவில் உள்ள குழாயையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்தில் ஊராட்சி செயலர் வேல்முருகன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமங்கலம் அருகே நிதி நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • ஆஸ்டின்பட்டி போலீசார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் காந்திநகரை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மகன் பிரதாப் (வயது 27). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

    சம்பவத்தன்று வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தார்.பெற்றோர் அது பற்றி கேட்டபோது உடல்நிலை சரி இல்லை என்று கூறியுள்ளார். அவர்கள் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய போது, தூக்கில் தொங்கியபடி பிரதாப் பிணமாக கிடந்துள்ளார்.

    தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரதாப் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளரிப்பட்டி நான்கு வழிச்சாலையில் நள்ளிரவு 2 மணியளவில் வேன் வந்து கொண்டிருந்தது.
    • வேன் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்ததால் உள்ளே இருந்தவர்களை எளிதாக மீட்க முடியவில்லை.

    மேலூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று திருச்சியில் மாநாடு நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    அதன்படி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த குமரன் (வயது50), வள்ளிமயில் (62), சிவநாதன் (49), ராஜகிருஷ்ணன் (48), செல்வராஜ் (25) உள்பட 19 பேர் ஒரு வேனில் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டுக்கு சென்றனர். மாநாட்டில் கலந்து கொண்ட பின் நேற்று இரவு வேனில் ஊருக்கு புறப்பட்டனர்.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளரிப்பட்டி நான்கு வழிச்சாலையில் நள்ளிரவு 2 மணியளவில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி அங்குள்ள டோல்கேட் அருகில் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு கம்பத்தின் மீது வேன் பயங்கரமாக மோதியது.

    அதே வேகத்தில் ரோட்டோரத்தில் இருந்த 20 அடி பள்ளத்தில் வேன் தலைகுப்புற கவிழ்ந்தது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் சிக்கியவர்கள் கூக்குரலிட்டனர். உடனே அருகில் இருந்த டோல்கேட் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவர்களை மீட்க முயற்சித்தனர். ஆனால் வேன் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்ததால் உள்ளே இருந்தவர்களை எளிதாக மீட்க முடியவில்லை.

    இதுகுறித்து தகவல் அறிந்த மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி மற்றும் போலீசார், தீயணைப்பு நிலைய அலுவலர் பொன்னான்டி (பொறுப்பு) தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 2 மணிநேரம் போராடி விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். தொடர்ந்து படுகாயமடைந்த 19 பேரையும் 4 ஆம்புலன்சு மூலம் மதுரையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு குமரன், வள்ளிமயில் உள்பட 4 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன
    • தமிழர்களின் பண்டைய நாகரீகத்தை விளக்கும் வகையில் பல்வேறு அரியவகை பொருட்கள் கண்டறியப்பட்டன.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதில் தமிழர்களின் பண்டைய நாகரீகத்தை விளக்கும் வகையில் பல்வேறு அரியவகை பொருட்கள் கண்டறியப்பட்டன.

    இதுவரை 8 கட்ட அகழாய்வு பணிகள் முடிவ டைந்துள்ளன. இதற்காக கீழடி கிராமத்தில் 48-க்கும் மேற்பட்ட சதுர குழிகள் வெட்டப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் பழமையான உறை கிணறுகள், செங்கல் சுவர்கள், கூரை ஓடுகள், மண்பாண்டங்கள், அணிகலன்கள், தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனை பொதுமக்கள் பார்வையிட பலகோடி ரூபாய் மதிப்பில் நவீன அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

    இந்த ஆய்வின் மூலம் கீழடி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் காலம் கி.மு. 3-ம் நூற்றாண்டில் இருந்து 10ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதன் மூலம் கீழடி நாகரீகத்துக்கும், சிந்துவெளி நாகரீகத்துக்கும் பல்வேறு ஒற்றுமைகள் காணப்பட்டன.

    தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தொடர் வற்புறுத்தலின்படி தற்போது கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தொல்லியல் துறை இணை இயக்குநர் ரமேஷ், ஆய்வாளர் அஜய், காவ்யா ஆகியோர் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 6-ந்தேதி தொடங்கிய இந்த அகழாய்வு 22 செண்டு நிலத்தில் முதற்கட்டமாக தொடங்கியுள்ளது.

    வீரணன் என்பவரது நிலத்தில் 2 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வுப் பணிகள் நடந்தன. 1 ½ அடி ஆழத்தில் தோண்டியபோது வலுவலுப்பான பச்சை நிறத்திலான மிகப்பெரிய தரை தளம் காணப்பட்டது. ஒழுங்கற்று உள்ள இந்த தரை தளம் சுடுமண் செங்கற்களால் செய்யப்பட்டுள்ளது.

    இந்த கண்டுபிடிப்பு தொல்லியல் ஆய்வாளர்களிடையே மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் கூடுதலாக குறிப்பிட்ட பகுதிகளில் தோண்டி ஆய்வுப்பணிகள் நடத்தினால் மேலும் அரிய வகை பொருட்கள், தமிழர் நாகரீகத்தின் தகவல்கள் தெரியவரும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறினர்.

    • மதுரையில் இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்த ஐ.டி. ஊழியர் கைது செய்யப்பட்டார்.
    • பாதிக்கப்பட்ட பெண் விவரங்களை ஆதாரப்பூர்வமாக தெரிவித்தார்.

    மதுரை

    மதுரை சம்மட்டி புரத்தைச் சேர்ந்த 25 வயது பெண் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் தனியார் நிறுவ னத்தில் வேலை பார்த்து வருகிறேன். எனக்கும் திருநகர் மங்கம்மாள் சாலையைச் சேர்ந்த செல்வம் மகன் ஆனந்துக்கும் (24) செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    இவர் மதுரை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். நான் அவருடன் நண்பர் என்ற முறையில் பழகினேன். ஆனந்த் என்னிடம் காதலை தெரிவித்தார். நான் அவரை ஒதுக்கினேன். செல்போனில் பேசுவதை நிறுத்தினேன்.

    இதனால் ஆனந்துக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அவர் என்னுடன் அடிக்கடி தகராறு செய்தார். இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தேன். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    சம்பவத்தன்று இரவு நான் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த ஆனந்த், என்னை தாக்கியதுடன் அவதூறாக பேசிவிட்டு தப்பினார். இதுகுறித்து போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    எஸ்.எஸ்.காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் மேற்கண்ட விவரங்களை ஆதாரப்பூர்வமாக தெரிவித்தார். இதன் அடிப்படையில் ஆனந்த்திடம் விசாரிக்கப்பட்டது.

    இதில் அவர் அந்த பெண்ணை தாக்கி அவதூறாக பேசியது தெரியவந்தது. இதையடுத்து ஐ.டி. ஊழியர் ஆனந்த்தை போலீசார் கைது செய்தனர்.

    • மதுரையில் ரோட்டரி சார்பில் கல்வி ஆய்வு மையம் கட்டப்பட்டுள்ளது.
    • ஊராட்சி தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    ரோட்டரி கிளப் ஆப் மதுரை மெட்ரோ ஹெரி டேஜ் மூலம், திருமால் புரத்தில் 1,700 சதுர அடி பரப்பளவில் கல்வி ஆய்வு மையம் கட்டப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். அவர் பேசுகையில், இந்த மையம் பல அரசு அதிகாரிகளை உருவாக்கும். வசதி குறைந்தவர்களுக்கு சம வாய்ப்புகளை உருவாக்கும் என்றார்.

    ரோட்டரி கிளப் ஆப் மதுரை மெட்ரோ ஹெரிடேஜ் தலைவர் வெங்கடேஷ் பேசுகையில், திருமால்புரம் ஆர்.சி.சி மையத்தில் டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி, இளந்தளிர் - கிராமப்புற பள்ளிகளுக்கான கலாச்சார நிகழ்ச்சி, மருத்துவ முகாம்கள், கிராமப்புற மாணவர்களுக்கு 12-ம் வகுப்பு வரை இலவச பயிற்சி ஆகியவை வழங்கப்படும் என்றார்.

    இதில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்தசாமி, செயலாளர் அல்லிராணி பாலாஜி, மாவட்ட ரோட்டரி கல்வி மையம் பூங்கோதி மலை வீரன், செட்டிகுளம் ஊராட்சி தலைவர் மற்றும் ரவி பார்த்தசாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சித்திரை திருவிழாவில் பக்தர்கள் பாதுகாப்புடன் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர்கள் கூறினர்.
    • அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை சித்திரை பெருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோ சனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சர்கள் பி.மூர்த்தி , பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் நடந்தது. கலெக்டர் அனீஷ் சேகர் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் அமைச்சர் கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் பேசும்போது கூறியதாவது:-

    மதுரை மாவட்டத்தின் அடை யாளங்களில் ஒன்றான சித்திரை பெரு விழா மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவிலில் நேற்று கொடி யேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை பெருவிழா வில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வருகிற 2-ந்தேதி நடக்கிறது. தேரோட்டம் 3-ந்தேதி நடக்கிறது. கள்ளழகர் திருக்கோலத்தில் எதிர் சேவை 4-ந்தேதி நடக்கிறது. வைகை ஆற்றில் எழுந்த ருளல் 5-ந்தேதி நடக்கிறது.

    கடந்த ஆண்டு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்த ருளல் நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசலின் காரணமாக உயிரிழப்பு போன்ற வருந்தத்தக்க சம்பவம் நிகழ்ந்தது. இத்தகைய சம்பவங்களை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். அதற்கேற்றாற்போல் பாது காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கையை அதிக ரித்து வாகன நிறுத்தம், மக்கள் கூட்டம் ஆகிய வற்றை முறைப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போதிய சி.சி.டி.வி காமிராக்கள் அமைத்து கண்காணிப்பு பணிகளை செய்திட வேண்டும்.

    மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நிகழ்ச்சி யில் பங்கேற்பதற்கு வழங்கப்படும் அனுமதி அட்டையை முறையே பரிசோதித்து அனுமதி பெற்ற நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். இதில் எவ்வித பாகுபாடும் காட்டக்கூடாது.

    மேலும் தேரோட்டத் தின்போது தேரின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து பொதுப்பணித் துறையின் சான்றிதழ் பெற்றிட வேண்டும். தேர் செல்லும் வழி, கள்ளழகர் ஊர்வலம் வரும் வழிகளை முறையே கண்காணித்து தாழ்வான நிலையில் மின் விநியோக கம்பிகள் உள்ளனவா? என்பதை கண்டறிந்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்திட வேண்டும்.

    மேலும் பொதுமக்களுக்கு அடிப்படை அத்தியாவசிய தேவைகளான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஆகிய வற்றை உறுதி செய்திட வேண்டும். அவசரகால சூழ்நிலையை எதிர்கொள்ள ஏதுவாக போதிய மருத்துவக் குழுக்கள் அமைத்திட வேண்டும். அரசு மருத்துவமனை நிர்வாகம் தயார் நிலையில் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். உலகளவில் பெருமை வாய்ந்த சித்திரை பெருவிழாவை மிகச்சிறப் புடன் நடத்திட அனைத்துத் துறை அலுவலர்கள் தங்களது பொறுப்புணர்ந்து பணியாற்றிட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கூட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்தி ரன் நாயர், மதுரை மாநகராட்சி மேயர் இந்தி ராணி பொன்வசந்த், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், மதுரை மாநகராட்சி ஆணை யாளர் சிம்ரன்ஜித் சிங், எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு) , வெங்க டேசன் (சோழவந் தான்) , பூமிநாதன் (மதுரை தெற்கு) ,மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மாவட்ட ஊராட்சி ஒன்றி யக்குழு தலைவர் சூரியகலா கலாநிதி , துணை மேயர் நாகராஜன், மீனாட்சி -சுந்தரேஸ்வரர் கோவில் துணை ஆணையர் அருணாச்சலம் , கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • இளம் தொழில் முனைவோர் ‘டெட்கோ’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • இதற்கான விழா சிக்கந்தர்சாவடியில் நடக்கிறது.

    மதுரை

    தமிழ்நாடு பொருளாதார முன்னேற்ற கழகம் சார்பில் நடப்பாண்டு தொழில்துறையில் சாதனை படைத்த 22 பேருக்கு டெட்கோ விருதுகள் வழங்கப்படுகிறது.

    இதற்கான விழா சிக்கந்தர்சாவடி ஏ.எப்.டி.சி வளாகம், சிற்றவை அரங்கில் அடுத்த மாதம் 14-ந் தேதி நடக்கிறது. மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் பெண் தொழில் முனைவோர் https://forms.gle/xomKBGpcLiQRsnG67, tedco.org.in என்ற இணைய தளங்களில் மேற்கண்ட விருதுக்கு விண்ணப் பிக்கலாம்.

    22 விருதுகளின் தலைப்புகள், விண்ணப்பிக்கும் விவரங்கள் பற்றி அறிந்து கொள்ள 98657 55880 அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று டெட்கோ விருது குழு தலைவர் ஜே.கே.முத்து, துணைத் தலைவர் ராஜமூர்த்தி, பொருளாளர் வேணுகோபால், நிர்வாகிகள் காசிராஜன், பழனிச்சாமி ஆகியோர் தெரிவித்தனர்.

    • கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார்.
    • போலீசார் விசாரணை

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள் குறித்த மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

    இந்த நிலையில் மனு கொடுக்க வந்த ஒரு பெண் கலெக்டர் அலுவலகம் முன்தனது உடலில் திடீரென மண்எண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். பின்னர் அவரை தனியாக அழைத்துச்சென்று விசா ரணை நடத்தினர்.

    இதில் அந்த பெண் சோழவந்தானை அடுத்த பொம்பன்பட்டியைச் சேர்ந்த மரியா என்பது தெரியவந்தது. அவர் போலீசாரிடம் கூறியதா வது:-

    நான் எனது கணவர் ஜான் வெஸ்லி, நாத்தனார் கலா ஆகியோருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தேன்.எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து என்னை வீட்டை விட்டு வெளியேறும்படி வற்புறுத் தினர். அப்போது நான், எனக்கும் சொத்தில் பங்கு உண்டு என்று தெரிவித்தேன். இதனால் ஆத்திரமடைந்த கலா உள்ளிட்ட 6 பேர் என்னை தாக்கினர். இது பற்றி சோழவந்தான் போலீஸ் நிலையத்திலும், எஸ்.பி. அலுவலகத்திலும் புகார் செய்தேன். இருந்த போதிலும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வாழ்க்கையில் வெறுப்ப டைந்து கலெக்டர் அலுவ லகம் முன்பு தீக்குளிக்க முடிவு செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×