என் மலர்
மதுரை
- மதுரையில் காற்றுக்காக கதவை திறந்து வைத்திருந்தபோது வீடு புகுந்து நகை-பணம் திருட்டு நடந்தது.
- மர்ம நபர் அங்கிருந்த பொருட்களை திருடிக்கொண்டு தப்ப முயன்றார்.
மதுரை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள சனம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி நாகஜோதி (48). இவர்கள் அதிக வெப்பம் காரணமாக இரவில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
குடும்பத்தினர் அயர்ந்து தூங்கிய நிலையில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த ரூ.47 ஆயி ரத்து 500 மற்றும் செல்போனை திருடி கொண்டு தப்பினார்.
இது குறித்த புகாரின்பேரில் வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு திருட்டு
சிலைமான் செல்வராஜ் நகர் புவனேஸ்வரி காலனியை சேர்ந்த வேலு மகன் சுந்தர் (34). இவர் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். காற்று வாங்குவதற்காக கதவை திறந்து வைத்திருந்த போது வீடு புகுந்த மர்ம நபர் 8 பவுன் தங்க நகை மற்றும் பணம் ரூ.5 ஆயிரத்தை திருடி கொண்டு தப்பினார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து திருடியவர் கைது
மதுரை துரைசாமி நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்த முருகன் மகன் சரண்ராஜ் (36). சம்பவத் தன்று மாலை இவர் வெளியே சென்றார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த பொருட்களை திருடிக் கொண்டு தப்ப முயன்றார்.
இந்த நேரத்தில் வெளியே சென்ற சரண்ராஜ் அந்த மர்ம நபரை பொதுமக்களு டன் சேர்ந்து விரட்டி பிடித்தார். பின்னர் அவர் எஸ்.எஸ்.காலணி போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் கீழவெளி வீதி லட்சுமிபுரம் 8-வது தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் அகிலன் (40) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
- சிகிச்சை பெற்றவர்கள் மீது தாக்குதல் நடத்திய நோயாளிகள் அலறி அடித்து ஓடினார்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சேக்கிபட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கும், இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவருக்கும் இடையே விறகு போடுவதில் தகராறு ஏற்பட்டது.
இதில் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. காயமடைந்த இருதரப்பின ரும் மேலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஆத்திர மடைந்த ஒரு தரப்பைச் சேர்ந்த உறவினர் நேற்று மாலை மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து சிகிச்சை பெற்றுவரும் எதிர் தரப்பினரை கம்பி, ஆயுதம் கொண்டு தாக்கினார். இதனால் வார்டில் இருந்த மற்ற நோயாளிகள் அலறி அடித்து ஓடினர்.
சம்பவ இடத்திற்கு வந்த துப்புரவு பணியாளர் மற்றும் காவலாளி அவர் களை தடுத்து கம்பிகளை பிடுங்கினர். கம்பியை பிடுங்கும்போது துப்புரவு தொழிலாளிக்கு காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த தலைமை மருத்துவர் ஜெயந்தி மேலூர் காவல் நிலையத்திற்கு தகவல் ெகாடுத்தார். சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி அருகே நிலையூரை சேர்ந்தவர் விஜயபாஸ்கரன் (வயது 40)தொழிலாளி. இவரது மனைவி ரேவதி .இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் விஜயபாஸ்கரன் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணவன் -மனைவிஇடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து விஜய பாஸ்கரன் திருச்சியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலைக்கு சேர்ந்து கடந்த 6 மாதமாக பணிக்கு சென்று வந்தார். இதன் பின்னர் அங்கும் வேலை பிடிக்காததால் விஜயபாஸ்கர் தேனிக்கு சென்று அங்கு வசிக்கலாம் என்று மனைவியிடம் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து வேலை செய்வதாக இருந்தால் வருகிறேன் என்று ரேவதி தெரிவித்துள்ளார். இதனால் விஜயபாஸ்கரன் தேனியில் வீடு வாடகைக்கு எடுத்து மனைவி வரும்படி அழைத்துள்ளார். அதற்கு மனைவி மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த விஜயபாஸ்கரன் நிலையூர் டாஸ்மாக் கடை எதிரில் உள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி ரேவதி ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரை விமான நிலைய காம்பவுண்டு சுவரில் ஏறி குதித்து ஓடுதள பாதையில் திரிந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
- வட மாநில வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை
மதுரை விமான நிலையத்தில் விரி வாக்கத்தின் ஒரு பகுதியாக புதிதாக விமான நிலைய முனைய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் பணி புரிவதற்காக வட மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழி லாளர்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர்.
மேற்குவங்காள மாநிலத்தைச் சேர்ந்த யுகில் மார்டி என்பவர் மனைவி மற்றும் 19 வயது மகன் கிலியன் மார்டியுடன் தங்கி வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் நேற்று நள்ளிரவு மதுரை விமான நிலைய ஓடுபாதை காம்பவுண்டு சுவரை ஏறி குதித்து வாலிபர் கிலியன் மார்டி உள்ளே சுற்றி திரிந்துள்ளார்.
இதனை சி.ஐ.எஸ்.எப். ஆய்வாளர் துருவேய் குமார் ராய் தலைமையில் வீரர்கள் உடனடியாக அந்த வாலிபரை பிடித்து அவனி யாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் கிலியன் மார்டி மனநலம் பாதிக்கப் பட்டவர் என்பது தெரிய வந்தது. மனநிலை சரியில்லா ததால் வேலைக்கு அனுப்பா மல் மகனை தன்னுடன் வைத்திருப்ப தாகவும், இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டி ருந்த போது எங்களுக்கு தெரியாமல் மகன் விமான நிலையத்திற்குள் சென்று விட்டதாகவும் தந்தை யுகில் மார்டி தெரிவித்தார். இதை யடுத்து போலீசார் கிலியன் மார்டி மீது வழக்குப்பதிு செய்யாமல் அனுப்பி வைத்தனர்.
நள்ளிரவில் மதுரை விமான நிலையத்திற்குள் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட வட மாநில வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
- இளம்பெண்கள் உள்பட 4 பேர் மாயமானார்கள்.
- பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
மதுரை
மதுரை வெளிச்சநத்தம் வி.மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது பெண் புதூர் பகுதியில் உள்ள ஒரு மையத்தில் டைப்ரைட்டிங் பயின்று வருகிறார்.
சம்ப வத்தன்று டைப்ரைட்டிங் மையத்திற்கு செல்வதாக கூறிச் சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டு பிடிக்க முடிய வில்லை.
இது குறித்த புகாரின் பேரில் சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
வாடிப்பட்டி அருகே உள்ள பெரிய ஊர்சேரியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி பூமா (30). சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்க ளில் தேடி பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் ராஜா புகார் செய்தார்.அலங்காநல்லூர் அருகே உள்ள மேலப்பனங்காடி வாகைகுளத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து ஆனந்த குமாரின் மனைவி ரதி அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.மதுரை குலமங்கலம் யோகநரசிம்மன் நகரை சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மகள் கீர்த்திகா (19). சம்பவத்தன்று வெளியே சென்று வருவதாக கூறிச் சென்ற இவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து சரவண குமார் மகளை கண்டுபிடித்து தருமாறு அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
- மதுரை மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் 95 ஆயிரம் பேரை நாய்கள் கடித்து குதறியது. 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
- உயர்தர சிகிச்சை அளிக்கப்படு வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை
மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் நாய்களின் தொல்லை அதிகரித்து உள்ளது. குறிப்பாக மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருவுக்கு, தெரு குறைந்தது 3 முதல் 4 நாய்கள் முகாமிட்டு பொதுமக்களை தொந்தரவு செய்து வருகிறது. நாய் பீதியால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் தெருவில் நடந்து செல்ல முடியாத சூழல் உள்ளது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாய்கள் விரட்டி விரட்டி கடிக்கின்றனர். நாய்கடி பாதிப்பு என்பது கொடுமையானது. நாய்கடியால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்படு பவர்களின் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து இறப்பார்கள். எனவே மதுரை நகரில் நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
முன்பு நாய்களுக்கு கருத்தடை செய்ய சிறப்பு வாகனங்கள் செயல்பட்டு வந்தன. தற்போது வெகு சொற்பமாக நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்படுகின்றன. இதனால் நகரில் நாய்களின் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் நாய் கடிக்கு சிகிச்சை பெற்றவர்கள் விபரம் குறித்து தெரிவிக்குமாறு தகவல் அறியும் உரிமையும் சட்டத்தின்கீழ் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதற்கான பதிலை சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
இதில் மதுரை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சுமார் 48 ஆயிரத்து 323 பேரும், 2022-ம் ஆண்டு 46 ஆயிரத்து 962 பேரும் என மொத்தம் 95 ஆயிரத்து 285 பேரை நாய் கடித்துள்ளது தெரியவந்தது. இதேபோல் கடந்த 2021 -ம் ஆண்டு நாய் கடித்ததில் சிகிச்சை பலனின்றி ஒருவரும்,
2022 -ம் ஆண்டு 2 பேரும் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மதுரை மாநகராட்சி பகுதியில் மாதத்திற்கு 200 நாய்களை பிடித்து கருத்தடை செய்யப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும், நாய் கடியால் பாதிக்கப்படும் பொது மக்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் உயர்தர சிகிச்சை அளிக்கப்படு வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இளம் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மகுண்டு பகுதியை சேர்ந்தவர் சாமி. இவரது மகள் ஜான்சி (வயது 21). இவர் எந்நேரமும் செல்போனிலேயே மூழ்கி கிடந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டி போதம்பட்டி அருகே உள்ள வில்லாணியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்தார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. வாழ்க்கையில் விரக்தியடைந்த பாஸ்கரன் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மனைவி சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் உசிலம்பட்டி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- போலீசார் முன்னிலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் செல்லும் வாகன ஓட்டிகள் மீது பயணிகள் புகார் அளித்தனர்.
- விதிகளை மீறிச்செல்வதை வேடிக்கை பார்த்தபடி இருக்கின்றனர்.
மதுரை
மதுரை சென்னைக்கு அடுத்து பெரிய நகரமாக விளங்கி வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள் செய்யப் பட்டுள்ளன. இருந்த போதிலும் போக்குவரத்தில் இன்னும் பின்தங்கியே இருக்கிறது.
மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகில் சிக்னல் அமைந்துள்ளது. அதன் அருகில் போலீசார் கண்காணிக்கும் இடம் உள்ளது. இந்த நிலையில் சிக்னல் பகுதியில் வரும் பல வாகனங்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் சிவப்பு விளக்கு எரியும் போதும் நிற்காமல் செல்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு சாலை யை கடப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
ஒரு சில நேரங்களில் மட்டுமே போலீசார் சிக்னல் பகுதியில் நின்று வாகனங்கள் விதிமுறை மீறலை தடுக்கின்றனர். பல நேரம் வாகனங்கள் விதிகளை மீறிச் செல்வதை வேடிக்கை பார்த்தபடி இருக்கின்றனர்.
மேலும் இன்றைய வாகன ஓட்டிகள் பலர் நடந்து செல்பவர்களுக்கு வழி விடும் மனநிலை இல்லாமல் தங்கள் இஷ்டத்துக்கு செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே போக்குவரத்து போலீசார் வாகன விதிமுறை மீறல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வங்கியில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருமங்கலம்
திருமங்கலம்-விருதுநகர் ரோட்டில் தனியார் வங்கி உள்ளது. நேற்று மாலை வழக்கம் போல் பணி முடித்து ஊழியர்கள் கதவைப் பூட்டிவிட்டு சென்றனர்.
இந்த நிலையில் இன்று காலை 6 மணியளவில் வங்கியில் எச்சரிக்கை அலாரம் ஒலிக்கத் தொடங்கியது. மர்ம நபர்கள் உள்ளே புகுந்திருக்கலாம் என சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் வங்கி முன்பு திரண்டனர். அவர்கள் இதுபற்றி போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.
திருமங்கலம் டவுன் போலீசார் உடனடியாக வங்கிக்குள் சென்று சோதனை செய்தனர். அங்கு மர்மநபர்கள் புகுந்ததற்கான தடயங்கள் ஏதும் இல்லை.இதையடுத்து எலெக்ட்ரீசியனை அழைத்து அலாரத்திற்கான இணைப்பினை சோதனை செய்தனர்.
அப்போது மின் வயரில் ஏற்பட்ட பழுது காரணமாக அலாரம் தானாகவே ஒலிக்கத் தொடங்கியது தெரியவந்தது. இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- கல்வி சர்வதேச பொதுப்பள்ளி சார்பில் மகளிர் ஆக்கி போட்டி நடந்தது.
- விளையாட்டு போட்டியில் தமிழகத்தில் இருந்து 27 அணிகள் பங்கேற்கின்றன.
சோழவந்தான்
தேனி மாவட்டம் பெரிய குளம் தாலுகா தேவதான பட்டியில் கல்வி சர்வதேச பொதுப்பள்ளி சார்பாக மகளிர் ஆக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதனை சரவணகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் போலீஸ் துணை சூப்பிரண்டு கீதா, பெரிய குளம் பேரூராட்சி தலைவர் முருகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வி குழும தலைவர் டாக்டர் செந்தில்குமார் வரவேற்றார்.
இந்த விழாவில், தமிழ்நாடு ஆக்கி யூனிட் தலைவர் சேகர் மனோகரன், பொது செயலாளர் டாக்டர் செந்தில் குமார், தேனி மாவட்ட ஆக்கி செயலாளர் சங்கிலி காளை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
4 நாட்கள் நடக்கும் இந்த விளையாட்டு போட்டியில் தமிழகத்தில் இருந்து 27 அணிகள் பங்கேற்கின்றன.
- சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை தரிசனம் செய்தனர்.
- விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாதந்தோறும் வரும் கார்த்திகையின் போது சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம்.
ஆனால் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் வைகாசி மாதம் வரும் கார்த்திகையின் போது மட்டும் சிம்மா சனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருவார். அதன்படி நேற்று வைகாசி மாத கார்த்திகையை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் சுப்ரமணிய சுவாமி தெய்வானைக்கு சந்தனம், பால், பன்னீர், விபூதி உள்ளிட்ட 16 வகை சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் சுப்பிர மணிய சுவாமி தெய்வானை யுடன் எழுந்தருளி திருப்பரங்குன்றம் கீழ ரத வீதி, மேல ரத வீதி, பெரிய ரத வீதி, சன்னதி தெரு வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.
- பாலதண்டாயுதபாணி கோவில் விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.
- பின்னர் பாலதண்டாயுத பாணிக்கு பாலாபிஷேகம் செய்யப்படுகிறது.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள குலசேகரன்கோட்டையில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவிலின் 101-வது ஆண்டு வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்து டன் தொடங்கியது.
இதை யொட்டி பாலதண்டாயுத பாணிக்கு சிறப்புஅபிஷேக, ஆராதனை, அர்ச்சனை, அலங்காரம் செய்யப் பட்டது. பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் சேவல் கொடியேற்றி மயில் முன்பு சிறப்பு பூஜை செய்யப் பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு காப்பு கட்டினர். அன்ன தானம் வழங்கப்பட்டது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாலா பிஷேகம் வருகிற 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது. அன்று வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு மவுன குருசாமி மடத்தில் இருந்து புறப்பட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து அலகுகுத்தி, பூக்குழி இறங்கி 3 கி.மீ. தூரம் பாதயாத்திரையாக செல்கிறார்கள். பின்னர் பாலதண்டாயுத பாணிக்கு பாலாபிஷேகம் செய்யப்படுகிறது. 3-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு கோவிலில் இருந்து முருகன் பட்டுப்பல்லக்கில் எழுந்தருளி வல்லப கணபதி கோவிலில் வழிபாடு செய்து அம்பல காரர்திருக்கண் வந்து அபிஷேகம் செய்யப்படு கிறது. பின்னர் கள்ளர் திருக்கண் வந்து எழுந்தருளி இரவு தங்குகிறார். 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு சீர்பாதம் தாங்கி களுக்கு பாத்தியப்பட்ட கள்ளர் திருக்கண்ணில் இருந்து புறப்பட்டு வல்லப கணபதி கோவில் அருகில் ராமலிங்க சேர்வை தானமாக வழங்கிய இடத்தில் வைத்து மல்லிகை மலர்களால் பூப்பல்லக்கு அலங்காரிக்கப்படுகிறது.
பின்னர் பாலதண்டாயுத பாணி இரவு 12மணிக்கு மேல் நகரின் முக்கிய வீதிகளில் பல திருக்கண்களில் எழுந்தருளி காட்சி அளித்து விட்டு விடிய விடிய வீதி உலா சென்று மறுநாள் காலை 11 மணிக்கு கோவிலை அடைகிறார்.
3 நாட்களும் தினந்தோறும் இரவு நேரங்களில் ஆடல்பாடல், இசைக்கச்சேரி உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சொக்கையா சுவாமி பேரப்பிள்ளைகள், சீர்பாதம் தாங்கிகள், வாடிப்பட்டி கிராம மக்கள் செய்து வருகின்றனர்.






