வங்கியில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு

வங்கியில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வங்கியில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு
Published on

திருமங்கலம்

திருமங்கலம்-விருதுநகர் ரோட்டில் தனியார் வங்கி உள்ளது. நேற்று மாலை வழக்கம் போல் பணி முடித்து ஊழியர்கள் கதவைப் பூட்டிவிட்டு சென்றனர்.

இந்த நிலையில் இன்று காலை 6 மணியளவில் வங்கியில் எச்சரிக்கை அலாரம் ஒலிக்கத் தொடங்கியது. மர்ம நபர்கள் உள்ளே புகுந்திருக்கலாம் என சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் வங்கி முன்பு திரண்டனர். அவர்கள் இதுபற்றி போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.

திருமங்கலம் டவுன் போலீசார் உடனடியாக வங்கிக்குள் சென்று சோதனை செய்தனர். அங்கு மர்மநபர்கள் புகுந்ததற்கான தடயங்கள் ஏதும் இல்லை.இதையடுத்து எலெக்ட்ரீசியனை அழைத்து அலாரத்திற்கான இணைப்பினை சோதனை செய்தனர்.

அப்போது மின் வயரில் ஏற்பட்ட பழுது காரணமாக அலாரம் தானாகவே ஒலிக்கத் தொடங்கியது தெரியவந்தது. இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com