என் மலர்
கிருஷ்ணகிரி
தளி அருகே உள்ள கெம்பத்தப்பள்ளியை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது 25). விவசாயி. இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இதனால் கோபித்துக் கொண்டு அந்தோணிசாமியின் மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த அநதோணிசாமி விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அந்தோணிசாமி சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பிலும், கூட்டணி கட்சிகள் சார்பிலும் யாரெல்லாம் போட்டியிட போகிறார்கள். அதே போல தி.மு.க. சார்பிலும், தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பிலும் யாரெல்லாம் போட்டியிட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் பா.ஜனதா சார்பில் வீரப்பனின் மூத்த மகள் வித்யாராணி போட்டியிட உள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. இவர் பா.ஜனதா இளைஞர் அணி மாநில துணை தலைவியாக இருந்து வருகிறார். இவர் கிருஷ்ணகிரியில் கணவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இதுகுறித்து வித்யாராணியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
நான் பா.ஜனதா கட்சியின் பென்னாகரம் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளேன். எனது தந்தை வீரப்பனை மக்கள் அனைவரும் அறிவார்கள். குறிப்பாக பென்னாகரம் பகுதி மக்கள் எனது தந்தையுடன் பழகி வந்துள்ளார்கள். அதனால் பென்னாகரம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளேன். நான் போட்டியிடுவது பற்றி கட்சி தலைமை முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வீரப்பனின் மூத்த மகள் வித்யாராணி அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜனதா கட்சியில் இருந்து வருகிறார். அவரது தாய் முத்துலட்சுமி தி.மு.க. கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கெலமங்கலம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நாகோண்டப்பள்ளி அடுத்த வெங்கட்டாபுரத்தை சேர்ந்தவர் பூ வியாபாரி நாராயணா (வயது 33). இவரது மனைவி சில்பா (28). இவர்களுக்கு லட்சுமி பிரசன்னா (12), சுபாஷ் (7) என்ற 2 மகன்கள் உள்ளனர். தினமும் நாராயணா விவசாயிகளிடம் பூ வாங்கி சென்று ஓசூர் மார்க்கெட்டில் விற்பனை செய்து வந்தார்.
அதன்படி நேற்று காலை வழக்கம்போல பூ வாங்கி சென்று ஓசூர் மார்க்கெட்டில் விற்பனை செய்து விட்டு வரும்போது எஸ்.முதுகானப்பள்ளி அருகே உள்ள ஒரு ஆலமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மனைவி சில்பா கெலமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள குந்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவருடைய மகன் சிவராஜ் (வயது 29). இவர் கூடங்குளம் அணுமின் நிலைய பிளாண்ட் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இந்தநிலையில் சிவராஜ் திருமணம் செய்ய இருந்த பெண்ணின் வயது இன்னும் 18 நிறைவடையவில்லை.
எனவே இது அதிகாரிகளுக்கு தெரிந்தால் திருமணத்தை நிறுத்தி விடுவார்கள் என சிவராஜூக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் நேற்று முன்தினம் தெரிவித்தாராம்.
இதனால் செய்வது அறியாமல் திகைத்து போன சிவராஜ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தந்தை நாராயணன் கொடுத்த புகாரின்பேரில், குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து, சிவராஜின் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகிறார்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே சென்னமாலம் கிராமத்தை சேர்ந்தவர் மாதேகவுடு. இவரது மனைவி ரத்தினம்மா (வயது 47). இவர்களது மகன் மாதேஷ் (26). மனநிலை பாதித்தவர்.
இந்த நிலையில் ரத்தினம்மா நேற்று மாலை தனது மகன் மாதேசுடன், ஆடு- மாடுகளை மேய்க்க மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார். அப்போது மாதேஷ், தண்ணீர் தாகம் எடுப்பதாக கூறி அங்குள்ள தனியார் விவசாய கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றார்.
அப்போது மாதேசு திடீரென நிலைதடுமாறி கிணற்றில் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாததால் அவர் கூச்சல் போட்டார்.
இதை பார்த்து பதறிய ரத்தினம்மா, மகனை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்தார். அவருக்கும் நீச்சல் தெரியாததால் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இருவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று காப்பாற்ற முயன்றனர். ஆனால் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் தள் போலீசார் விரைந்து வந்து தாய்- மகன் உடல்களை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆடு-மாடுகளை மேய்க்க சென்ற போது கிணற்றில் மூழ்கி தாய்- மகன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள குந்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் சிவராஜ்(29). கூடன்குளம் அணுமின் நிலைய பிலாண்ட் மேலாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் இவருக்கும், ஒரு பெண்ணுக்கும் இன்று (25ம் தேதி) வேப்பனபள்ளியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தது.
இந்த நிலையில், இவர் திருமணம் செய்ய இருந்த பெண்ணின் வயது இன்னும் 18 நிறைவடையவில்லை. எனவே, இது அதிகாரிகளுக்கு தெரிந்தால் திருமணம் நிறுத்திவிடுவார்கள் என சிவராஜிக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் நேற்று காலை தகவல் கொடுத்துள்ளார்.
இதனால் செய்வதறியாமல் திகைத்த சிவராஜ், மனமுடைந்து காணப்பட்டுள்ளார். பின்னர், நேற்று மதியம் தனது வீட்டிற்குள் சென்ற அவர், தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவரது அப்பா நாராயணன் கொடுத்த புகாரின் பேரில், குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்கு பதிவு செய்து, சிவராஜின் பிணத்தை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகிறார்.
இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் மாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






