என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    கிருஷ்ணகிரி:

    தமிழ்நாட்டில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவ தொடங்கியது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவி உயிர் இழப்புகள் ஏற்பட்ட நிலையிலும் கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் ஆகிய 2 மாதங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பரவவில்லை.

    கடந்த ஆண்டு மே மாதம் முதல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. படிப்படியாக கொரோனா தொற்று பரவி உச்சத்தை தொட்டது. மேலும் உயிர் இழப்புகளும் அதிகரித்தன. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வரை அதிகமாக காணப்பட்ட கொரோனா தொற்று படிப்படியாக குறைந்தது. இதனால் தினமும் ஒருவர் அல்லது 2 பேர் பாதிக்கப்படும் நிலைக்கு வந்தது.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 64 ஆக உள்ளது.

    கடந்த 14-ந் தேதி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 32 ஆக இருந்த நிலையில் தற்போது கொரோனாவால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 7 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    கிருஷ்ணகிரி அருகே லாட்டரி சீட்டுகள் விற்ற 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி டவுன் போலீசார் டி.டி.டி.சி. கட்டிட பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற சோமார்பேட்டை ராஜகோபால் (வயது 32), பழையபேட்டை ரகுநாத் (32), தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா தொன்னகுட்டஅள்ளியை சேர்ந்த ராமராஜ் (32) ஆகிய 3 பேரை கைது செய்தனர். கிருஷ்ணகிரி டவுன் போலீசார் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சோதனை செய்தனர். அங்கு லாட்டரி சீட்டு விற்ற குமரன் என்கிற படையப்பா (57), அன்பழகன் (59), ராமன் (36) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல ஆர்.சி. சர்ச் சாலையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற சுப்பிரமணி (42), சின்னராஜ் (55) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஓசூர் டவுன் போலீசார் நாமல்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டுகள் விற்ற சதீஷ்குமார் (34) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 9 பேரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    சூளகிரி அருகே தனியார் நிறுவன மேற்பார்வையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூளகிரி:

    உத்தரகாண்ட் மாநிலம் ஹவேலி தாகரா நகர் குமரவாலா நரோலி கிராமத்தை சேர்ந்தவர் பகவான்ஜா (வயது 41). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கொட்ரப்பள்ளியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையாததால் மனமுடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சோக்காடி கூட்ரோடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சோக்காடி கூட்ரோடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அதில் ரூ.47 ஆயிரத்து 535 மதிப்புள்ள புடவைகள், சட்டைகள் உள்ளிட்ட துணிகள் இருந்தது. இதுதொடர்பாக காரில் இருந்தவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் ராயக்கோட்டை-கெலமங்கலம் சாலையில் உள்ள கொட்டூர் கிராமத்தை சேர்ந்த சங்கரமூர்த்தி (55) என்பதும் உரிய ஆவணங்கள் இன்றி புடவைகள், சட்டைகள் கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் புடவை உள்ளிட்டவை பறிமுதல் செய்து, கிருஷ்ணகிரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
    ஓசூர் அருகே வடமாநில தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஒடிசா மாநிலம் மங்கல்பூரை சேர்ந்தவர் தகீரா ராணா (வயது 33). இவர், ஓசூரில் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவர் அங்கு தொடர்ந்து பணி செய்ய விருப்பமின்றி இருந்து வந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தகீரா ராணா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    லாட்டரி சீட்டு விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    ஊத்தங்கரை போலீசார் சேலம் பைபாஸ் சாலை, மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்றனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற ஊத்தங்கரையை சேர்ந்த அம்ஜத் (வயது 40), பாபு, ஜான்பாஷா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (21-ந் தேதி) தமிழக முதல்வர் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஐ.ஜி. நேரில் ஆய்வு செய்தார்.

    தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    அதன்படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு நாளை (21-ந் தேதி) வருகை தந்து அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளார்.

    நாளை மாலை 5.30 மணிக்கு ஊத்தங்கரையிலும், 6.45 மணிக்கு பர்கூரிலும், இரவு 8 மணிக்கு கிருஷ்ணகிரியிலும், 9 மணிக்கு சூளகிரியிலும் பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து இரவு ஓசூரில் தங்குகிறார். மறுநாள் (22-ந் தேதி) காலை 9 மணிக்கு ஓசூரில் பிரசாரம் செய்கிறார். அதைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தருவதையொட்டி சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரதீப்குமார் நேற்று கிருஷ்ணகிரிக்கு வந்தார். அவர் கிருஷ்ணகிரியில் முதல்வர் பேச உள்ள 5 ரோடு ரவுண்டானா பகுதி மற்றும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவர் பிரசாரம் செய்ய உள்ள இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தேர்தல் பாதுகாப்பு பணிகளை போலீசார் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். மேலும் தேர்தல் பணிகள் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி பண்டிகங்காதருடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது கிருஷ்ணகிரி மாவட்ட ஏடிஎஸ்பி-க்கள் அன்பு, ராஜி, டிஏஸ்பிக்கள் கிருஷ்ணகிரி சரவணன், பர்கூர் தங்கவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தனிபிரிவு அன்புமணி, டவுன் பாஸ்கர், சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்தர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
    கல்லாவி அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கல்லாவி:

    ஊத்தங்கரை அருகே உள்ள வெள்ளிமலையை சேர்ந்ததவர் இன்பரசன். இவரது மனைவி அமுதவள்ளி (வயது 33). இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.

    இந்த நிலையில் அமுதவள்ளி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த அமுதவள்ளி விஷத்தை குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அமுதவள்ளி இறந்தார். இது குறித்து கல்லாவி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜவளகிரி சோதனைச்சாவடி அருகே காரில் எடுத்துச்சென்ற ரூ.90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜவளகிரி சோதனைச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக பெங்களூருவைச் சேர்ந்த கணேஷ் ரவிசங்கர் என்பவர் வந்துள்ளார். அவரது காரில் ரூ.90 ஆயிரம் இருந்துள்ளது. அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் முழுவதையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து தேன்கனிக்கோட்டை தாசில்தார் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று தேர்தல் நடத்தும் அதிகாரி ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனர்.

    அப்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தண்டபாணி உடனிருந்தார்.
    அரசம்பட்டி அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    பாரூர் போலீசார் அரசம்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்ற அரசம்பட்டியை சேர்ந்த சரவணன் (54) என்பவரை கைது செய்தனர்.
    உத்தனப்பள்ளி அருகே வேன் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியை அடுத்த தேவசானபள்ளியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 39). வேன் டிரைவர். இவர் முன்பு புனிதா (36) என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். புனிதா அங்கன்வாடி பணியாளராக உள்ளார். சண்முகத்துக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ஒரு அறையில் தூங்கச்சென்றவர் காலையில் கதவு திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சேலையால் தூக்குபோட்டு சண்முகம் பிணமாக தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த புனிதா உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    போச்சம்பள்ளி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்தூர்:

    போச்சம்பள்ளி போலீசார் வலசகவுண்டனூர் சென்னம்மாள் கோவில் அருகில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய வலசகவுண்டனூர் ராமமூர்த்தி (வயது 35), சின்னதுரை (45), சபரிநாதன் (25), பெரியண்ணன் (49) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.500 பறிமுதல் செய்யப்பட்டது.
    ×