என் மலர்
கிருஷ்ணகிரி
திமுக சார்பில் தற்போது எம்எல்ஏ-வாக இருக்கும் டி. செங்குட்டுவன், அதிமுக சார்பில் கே. அசோக்குமார் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அதிமுக சார்பில் கே. அசோக்குமார், திமுக சார்பில் டி. செங்குட்டுவன், மக்கள் நீதுி மய்யம் சார்பில் ஆர்.கே. ரவிசங்கர், நாம் தமிழர் கட்சி சார்பில் நிரந்தரி, அமமுக கூட்டணியில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி சார்பில் அமினுல்லா நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதிமுக வேட்பாளர் கே. அசோக்குமார் சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 6,20,000
2. அசையும் சொத்து- ரூ. 36,12,824
3. அசையா சொத்து- ரூ. ஏதுமில்லை
திமுக வேட்பாளர் டி. செங்குட்டுவன் சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 1,50,000
2. அசையும் சொத்து- ரூ. 94,85,983
3. அசையா சொத்து- ரூ. 27,50,000
மாங்கனிக்கு பெயர் பெற்ற கிருஷ்ணகிரி பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியது. ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டத்தில் இருந்த கிருஷ்ணகிரி மாவட்டம், கடந்த 2004-ம் ஆண்டு உதயமானது. ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கிருஷ்ணகிரி தொகுதி பல்வேறு சிறப்புகளை பெற்றது.
கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில், காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில், அவதானப்பட்டி மாரியம்மன் கோவில், காவேரிப்பட்டணம் அங்காளம்மன் கோவில், பெரிய மாரியம்மன், கணவாய்ப்பட்டி பெருமாள், கோவில்கள் பிரசித்தி பெற்றவை. அதே போல கிருஷ்ணகிரி ஆர்.சி.பாத்திமா தேவாலயம், சுங்கச்சாவடி தர்கா ஆகியவையும் பிரசித்தி பெற்றவையாக விளங்குகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், பழைய, புதிய பஸ் நிலையங்கள் உள்ளிட்டவை இந்த தொகுதியில் அமைந்துள்ளன.
கிருஷ்ணகிரி தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 65 ஆயிரத்து 238 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 80 பேர், பெண்கள் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 121 பேர், மூன்றாம் பாலினத்தினர் 37 பேர் உள்ளனர்.

கிருஷ்ணகிரி தொகுதியில் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை, அவதானப்பட்டி சிறுவர் பூங்கா, அவதானப்பட்டி படகு இல்லம், உள்ளிட்டவை சுற்றுலா தலங்களாக விளங்குகின்றன. கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் கிருஷ்ணகிரி நகராட்சி, காவேரிப்பட்டணம் பேரூராட்சி, 40 ஊராட்சிகள் இந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வருகின்றன.
இந்த தொகுதியில் வன்னியர் சமுதாயத்தினர், தாழ்த்தப்பட்ட மக்கள், செட்டியார் உள்ளிட்ட சமுதாய மக்கள் அதிக அளவில் உள்ளனர். அதேபோல முஸ்லீம்களும் கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணகிரி நகரில் கணிசகமாக உள்ளனர். இவர்களே தொகுதியில் வெற்றி - தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளார்கள்.

இந்த தொகுதியில் மாம்பழ ஏற்றுமதி முக்கிய தொழிலாக உள்ளது. இதைத்தவிர சிறிய தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் அமைந்துள்ளன. குறிப்பாக இந்த தொகுதியில் உள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் விவசாயத்தை நம்பியே உள்ளனர்.
இதுவரை நடந்து முடிந்த தேர்தலில் அ.தி.மு.க. 6 முறையும், தி.மு.க. 5 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக அ.தி.மு.க.வை சேர்ந்த கே.ஆர். சின்னராசு 1977, 1980, 1984 என 3 முறை எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொகுதியில் எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ அவர்கள்தான் மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பார்கள் என்பது தொடக்கம் முதல் இருந்து வந்த சென்டிமெண்ட். நீண்ட காலமாக இருந்த அந்த சென்டிமெண்ட் 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் உடைந்தது.
கோரிக்கைகள்
கிருஷ்ணகிரி தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான எண்ணேகொள்புதூர் திட்டத்திற்கு தற்போதுதான் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதை விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என்பது இந்த தொகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் கிருஷ்ணகிரி நகர மக்கள் கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் செல்லும் வழியில் சுங்கசாவடி அமைந்துள்ளது. அதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. அதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
கிருஷ்ணகிரி வழியாக ஓசூரில் இருந்து ஜோலார்பேட்டைக்கு ரெயில்பாதை கொண்டு வர வேண்டும் என்பது இந்த தொகுதி மக்களின் 75 ஆண்டு கால கனவு. அந்த கனவு திட்டத்தை அரசியல் கட்சியினர் நிறைவேற்றுகிறோம் என்று ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதிகளாக கூறுகிறார்கள். பின்னர் அந்த வாக்குறுதி கானல் நீராக போய் விடுகிறது. எனவே கிருஷ்ணகிரி வழியாக ரெயில் பாதை திட்டத்தை கொண்டு வர வேண்டும்.

கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை சாலை சீரமைக்க வேண்டும். மழைக்காலங்களில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து வீணாக சென்று கடலில் கலக்கும் தண்ணீரை, இங்குள்ள ஏரிகளுக்கு நிரப்பிட வேண்டும். ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் தொகுதியில் அனைத்து பகுதிகளுக்கும் முழுமையாக வழங்கிட வேண்டும் என்பது இந்த தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

1967 பி.கே.பி.எம்.முனுசாமி கவுண்டர் (காங்கிரஸ்)
1971 சி.மன்னியப்பன் (தி.மு.க.)
1977 கே.ஆர்.சின்னராசு (அ.தி.மு.க)
1980 கே.ஆர்.சின்னராசு (அ.தி.மு.க.)
1984 கே.ஆர்.சின்னராசு (அ.தி.மு.க.)
1989 காஞ்சனா கமலநாதன் (தி.மு.க.)
1991 முனிவெங்கடப்பன் (அ.தி.மு.க.)
1996 காஞ்சனா கமலநாதன் (தி.மு.க.)
2001 கோவிந்தராஜ் (அ.தி.மு.க.)
2006 செங்குட்டுவன் (தி.மு.க.)
2011 கே.பி.முனுசாமி (அ.தி.மு.க.)
2016 செங்குட்டுவன் (தி.மு.க.)
அதிமுக சார்பில் எஸ். ஜோதி பாலகிருஷ்ணரெட்டி, திமுக சார்பில் ஒய். பிரகாஷ் மோதும் ஓசூர் தொகுதி கண்ணோட்டம்.
அதிமுக சார்பில் எஸ். ஜோதி பாலகிருஷ்ணரெட்டி, திமுக சார்பில் ஒய். பிரகாஷ், மக்கள் நீதி மய்யம் சார்பில் மசூத், நாம் தமிழர் கட்சி சார்பில் கீதாலட்சும், அமமுக சார்பில் எம். மாரு கவுடு ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதிமுக வேட்பாளர் எஸ். ஜோதி பாலகிருஷ்ணரெட்டி சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 45,000
2. அசையும் சொத்து- ரூ. 47,27,114
3. அசையா சொத்து- ரூ. 2,61,86,100
திமுக வேட்பாளர் ஒய். பிரகாஷ் சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 90,900
2. அசையும் சொத்து- ரூ. 83,21,265
3. அசையா சொத்து- ரூ. 6,85,00,760
தமிழக கர்நாடக மாநில எல்லையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் சட்டமன்ற தொகுதி உள்ளது. ஒசூர் மாநகரத்தில் அமையப் பெற்றுள்ள இரண்டு சிப்காட் தொழில் பேட்டைகளில் கனரக வாகனங்கள் தயார் செய்யும் அசோக் லேலண்ட் தொழிற்சாலை, இருசக்கர வாகனங்கள் தயார் செய்யும் டி.வி.எஸ். தொழிற்சாலை மற்றும் உலகத்தரம் வாய்ந்த டாடா கம்பெனியின் டைட்டன் வாட்ச் மற்றும் நகைகள் செய்யும் தொழிற்சாலைகள் உள்ளன.

இதுதவிர 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலவகையான மக்கள் பயன்பாட்டிற்குரிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் உள்ளன. இந்த தொழிற்சாலைகளை நம்பியுள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு தொழில் நிறுவனங்களும் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஒசூர் சட்டமன்ற தொகுதியில் கர்நாடகா மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகி தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்ட விவசாய நிலங்களை வளம் கொழிக்க செய்யும் தென்பெண்ணை ஆறு ஒடுகிறது.

ஒசூர் மாநகரத்தில் மலைக்கோயில் என்று அழைக்கப்படும் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஸ்ரீமரக தாம்பாள் உடனுறை ஸ்ரீசந்திர சூடேஸ்வரர் சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒரே நேர்கோட்டில் உலகில் எங்கும் காணக்கிடைக்காத சிவன், விஷ்ணு மற்றும் பிரம் மன் ஆகிய கோவில்கள் 3 மலைகளில் அமைந்துள்ளன.
ஒசூர் பகுதி காய்கறிகள், கீரைகள் மற்றும் மலர்கள் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. இங்கு விளையும் தக்காளி, பீன்ஸ், கேரட், உருளைகிழங்கு, முட்டை கோஸ், பூகோசு, பீட்ரூட், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அதேபோல மலர்கள் உற்பத்தியில் இங்கு விளையும் ரோஜா மலர்கள் உலகத்தரம் வாய்ந்தவையாகும், அதேபோல கார்னேசன், ஜெர்பரா உள்ளிட்ட அலங் கார மலர்களும் ரோஜாவை போல அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு மலேசியா, சிங்கப்பூர், உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவின் கடை கோடியான கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை செல்லும் முக்கிய தேசிய நெடுஞ்சாலை உள்பட 3 நெடுஞ்சாலைகள் இந்த தொகுதி வழியாக செல்கிறது. இதனால் வாகன போக்குவரத்து மிகுதியான நகரமாக ஒசூர் பார்க்கப்படுகிறது.
சுதந்திர போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலும், தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்த மூதறிஞர் ராஜாஜி ஒசூர் அருகேயுள்ள தொரப்பள்ளி அக்ரஹாரம் பகுதியில் பிறந்தவர் என்பது கூடுதல் சிறப்பாக உள்ளது.

ஓசூர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் - 1,69,923 பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் - 1,60,807 பேர் உள்ளனர்.மூன்றாம் பாலினத்தவர்கள் - 96 பேர் என மொத்தம் -3,30,826 வாக்காளர்கள் உள்ளனர்.
ஒசூர் சட்டமன்ற தொகுதியில் வாழும் பொது மக்களுக்கு தொழிற்சாலைகளும், விவசாயமுமே முதுகெலும்பாக உள்ளது. நகர் புறங்களில் அதிக அளவு தொழிற்சாலைகள் உள்ளதால் இங்கு அதிக அளவில் தொழிலாளர்கள் வாழ்கின்றனர். நகரை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் அதிக அளவு விவசாயம் நடைபெற்று வருவதால் விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர்.
இதுதவிர விவசாயம், தொழிற்சாலைகள், கோழி பண்ணைகள், செங்கல் சூளைகள், ஒட்டல்கள் போன்றவற்றில் பணிபுரியும் வடமாநிலத் தவர்களும் நகர் புறங்களிலும் கிராமப்பகுதிகளிலும் வாழ்கின்றனர். விவசாயம், தொழிற்சாலைகள் தவிர கோழிப்பண்ணைகள், செங்கல் சூளைகள், மீன்கள் வளர்ப்பு, கல்குவாரி, கிரானைட் ஏற்றுமதி உள்ளிட்ட தொழில்களும் இங்கு பிரதானமாக உள்ளன.
ஒசூர் சட்டமன்ற தொகுதியானது பழமையான தொகுதியாகும், இந்த தொகுதி மக்கள், 1951 முதல் தற்போது கடைசி தேர்தல் நடைபெற்ற 2019-ம் ஆண்டு வரை 16 சட்டமன்ற உறுப்பினர்களை சட்டமன்றத்திற்கு அனுப்பி உள்ளனர். இந்த தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்கள் 2 முறையும், சுதந்திரா கட்சி வேட்பாளர்கள் 2 முறையும், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் 9 முறையும், ஜனதா தள வேட்பாளர் ஒரு முறையும், அ.தி.மு.க. வேட் பாளர் ஒரு முறையும், தி.மு.க. வேட்பாளர் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.
ஒசூர் சட்டமன்ற தொகுதியில் ஆதி திராவிடர்கள், 13 சதவீதமும், வன்னியர்கள் 12 சதவீதமும், நாயுடு சமுகத்தவர்கள் 11 சதவீதமும், ஒக்கலிகா சமூகத்தை சேர்ந்தவர்கள் 10 சதவீதமும், இதர வகுப்பினர் 54 சதவீதமும் வாழ்கின்றனர்.
ஒசூர் சட்டமன்ற தொகுதியில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் பால கிருஷ்ணா ரெட்டி வெற்றி பெற்றார். கடைசியாக ஒசூர் சட்டமன்ற தொகுதியில் 2019 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சத்யா வெற்றி பெற்றார்.
தொகுதி பிரச்சினைகள்
தொகுதி மக்களின் முக்கிய பிரச்சனையான குடிநீர் தேவைகள் இன்றளவும் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை, குறிப்பாக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தி.மு.க., அ,தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது என இரண்டு கட்சிகளும் மாறி மாறி போட்டி போட்டுக்கொண்டு வருகிறது. இன்றளவும் ஒசூர் நகரப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டமானது முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

அதேபோல ஒசூர் மாநகரின் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த பழமையான 140 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஒசூர் ராமநாயக்கன் ஏரியில் தெண்பெண்ணை ஆற்று தண்ணீரை கொண்டு வந்து சேமிக்கும் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை, இந்த திட்டத்தையும் ஒசூர் பகுதியில் உள்ள பொது மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டால் நகர பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்ப்பு உள்ளது.
ஒசூர் நகர பகுதியில் முக்கிய இடமாக உள்ள மகாத்மா காந்தி சாலை, நேதாஜி சாலை, தாலுக்கா அலுவலக சாலை, ஏரித்தெரு, பழைய பெங்களுர் சாலை உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டு வருகிறது. இதனை தவிர்க்க முழுமையாக இந்த பகுதிகளை ஒரு வழிப் பாதையாக மாற்ற வேண்டும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கூடுதல் போக்கு வரத்து காவலர்களை நியமிக்க வேண் டும் என பொதுமக்கள், வாகன ஒட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
மேலும், ஒசூர் பகுதியில் மத்தியஅரசு அறிவித்தபடி விரைவில் உதான் திட்டத்தில் விமான போக்குவரத்தை கொண்டுவர வேண்டும் என பொது மக்களும், தொழில் முதலீட்டாளர்களும் எதிர் பார்த்துள்ளனர். அதேபோல பல ஆண்டு கோரிக்கையான பாதாள சாக்கடை திட்டத்தையும் ஒசூர் பகுதியில் செயல்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

1952 முனிரெட்டி (சுயே).
1957 அப்பாவு பிள்ளை (சுயே).
1962 ராமசந்திரரெட்டி (காங்)
1967 வெங்கடசாமி (சுதந்திரா கட்சி).
1971 வெங்கடசாமி (சுதந்திரா கட்சி).
1977 ராமசந்திரரெட்டி (காங்).
1980 வெங்கடரெட்டி (காங்).
1984 வெங்கட்ட ரெட்டி (காங்).
1989 ராமசந்திரரெட்டி (காங்).
1991 மனோகரன் (காங்).
1996 வெங்கட்டசாமி ஜனதா தளம்
2001 கோபிநாத் (காங்).
2006 கோபிநாத் (காங்).
2011 கோபிநாத் (காங்).
2016 பாலகிருஷ்ணரெட்டி (அ.தி.மு.க.)
2019 இடைத்தேர்தல்- சத்யா (தி.மு.க.)
வேப்பனப்பள்ளி அருகே வாலிபர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பனப்பள்ளி:
கிருஷணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பீமாணடப்பள்ளியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 25). அதே ஊரை சேர்ந்தவர் ராஜ்குமார் (21), ஒட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசலபதி (26). இவர்கள் 3 பேரும் நேற்று இரவு வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது வி.மாதேப்பள்ளி அருகே சின்ன சூளமலை கிராமத்தை சேர்ந்த தொழிலாளி திம்மராஜ் மற்றும் அவருடைய நண்பர்கள், இவர்கள் 3 பேரையும் வழிமறித்து தகராறு செய்து தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து திம்மராஜை கைது செய்தனர். அவருடைய நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பாரூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
போச்சம்பள்ளி அருகே உள்ள மொல்லம்பட்டியை சேர்ந்தவர் பலனேசன் (வயது 50). விவசாயி. இவர் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையாததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பலனேசன் இறந்தார். இது குறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற அனைவரும் வாக்களிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பிரசாரம் செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, ஓசூர், தளி, வேப்பனப்பள்ளி, பர்கூர் ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து சூளகிரி ரவுண்டானா அருகே திறந்த வேனில் நின்றப்படி மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
அப்போது கூடியிருந்த, பொதுமக்கள் மத்தியில் அவர் பேச்சை தொடங்கும்போது, ‘‘நாம் ரெடி... நீங்கள் ரெடியா’ என கேட்டு பிரசாரத்தை தொடங்கினார்.
உங்களை தேடி, உங்களை நாடி உரிமையோடு உங்களில் ஒருவனாக வந்துள்ளேன். தமிழகத்தின் நுழைவு வாயில் என போற்றப்படும் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ஓட்டு கேட்டு வந்துள்ளேன். கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தந்த உரிமையில் வாக்கு கேட்டு வந்துள்ளேன்.
அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் கே.பி. முனுசாமி, அமைச்சராக இல்லாமலேயே அமைச்சராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். கே.பி.முனுசாமியை 30 சதவீதம் கமிஷன் முனுசாமி என்று அழைப்பார்கள்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நியாயம் கேட்டு உண்ணாவிரதம் இருந்தார் கே.பி.முனுசாமி. தற்போது அவர்களிடம் ஓட்டிக்கொண்டு உள்ளார். அவர் பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமியை மிரட்டி பதவி வாங்கி உள்ளார். தற்போது ஜெயலலிதாவுக்காக நியாயம் கேட்பதை மறந்து விட்டார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல், கமிஷன், கரப்ஷன் அதிகமாக நடந்துள்ளது. இவர்கள் செய்த ஊழல் குறித்து கவர்னரிடம் புகார் கொடுத்துள்ளோம். நெடுஞ்சாலை துறை டெண்டர் எடப்பாடி பழனிசாமி சம்மந்திக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. அதில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது என நீதிமன்றத்தில் வழக்கு போட்டதை தொடர்ந்து வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
சி.பி.ஐ. விசாரணைக்கு பழனிசாமி தடை உத்தரவு வாங்கி உள்ளார். தடை உத்தரவு வாங்கவில்லை என்றால் இப்போது அவர் சிறையில் தான் இருப்பார். உள்ளாட்சி துறை அமைச்சர் என்று சொல்லாமல் ஊழல் ஆட்சி துறை அமைச்சர் என்று தான் கூற வேண்டும்.

குட்கா மக்களுக்கு தாராளமாக வினியோகம் செய்யும் சூழலை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்படுத்தி போலீஸ் துணையுடன் கொள்ளையடித்தார். தற்போது ஆட்சி முடியும் தருவாயிலும் 3000 முதல் 5000 ஆயிரம் கோடி கொள்ளையடித்துள்ளனர்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஊழல் அமைச்சர்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.
வருகிற சட்டசபை தேர்தலில் ஒரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கூட வரக்கூடாது. அவ்வாறு வந்தால் அவர்கள் பா.ஜனதா எம்.எல்.ஏ. வாக இருப்பார்கள். தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம்தான் வெல்ல போகிறோம். இந்த உதவாக்கரை ஆட்சிக்கு மக்கள் நீங்கள் பாடம் புகட்ட வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் யாரும் நிம்மதியாக இல்லை. மின்கட்டணம், பால் விலை, பெட்ரோல், டீசல், விலை விஷம் போல் உயர்ந்துள்ளது. இந்த ஆட்சியின் கொடுமையை விட வெயில் பெரிதல்ல என்று நீங்கள் இங்கே நின்று கொண்டு இருக்கிறீர்கள்.
கருணாநிதி வழியில் அவரது மகனான ஸ்டாலின் சொன்னதை தான் செய்வான், செய்வதை தான் சொல்வான். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 3 வேளாண் சட்டத்தை திரும்ப பெற முதல் தீர்மானமாக நிறைவேற்றப்படும். கூட்டுறவு வங்கியில் விவசாய கடன், 5 பவுனுக்குட்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்படும். அரசு பணியில் 3 லட்சத்து 50 இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள்.
கிருஷ்ணகிரி, தேனிகனிக்கோட்டை, ராயக்கோட்டையில் குளிர்பதன கிடங்கு, இ.எஸ்.ஐ. மருத்துவமனை தரம் உயர்த்துதல், ஏற்றுமதி மண்டலம், சூரியகாந்தி எண்ணை உற்பத்தி மையம், பர்கூரில் ஜவுளி பூங்கா, என பல்வேறு இடங்களில் பஸ் நிலையம் உள்ளிட்ட வசதிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 ஆண்டுகளில் ஏற்படுத்தப்படும்.
இனி இந்த திராவிட மண்ணில் மோடி மஸ்தான் வேலை பலிக்காது.
தமிழகம் தலைநிமிர்ந்து நிற்க, இழந்த உரிமைகளை பெற நாம் போராடி வெற்றி பெற வேண்டும்.
எனவே இந்த தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றிபெற அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதை தொடர்ந்து கிருஷ்ணகிரிக்கு அவர் புறப்பட்டு சென்றார். அங்கு நடந்து சென்று பொதுமக்களிடம் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
இதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டத்துக்கு பிரசாரம் செய்ய மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பிரசாரம் செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, ஓசூர், தளி, வேப்பனப்பள்ளி, பர்கூர் ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து சூளகிரி ரவுண்டானா அருகே திறந்த வேனில் நின்றப்படி மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
அப்போது கூடியிருந்த, பொதுமக்கள் மத்தியில் அவர் பேச்சை தொடங்கும்போது, ‘‘நாம் ரெடி... நீங்கள் ரெடியா’ என கேட்டு பிரசாரத்தை தொடங்கினார்.
உங்களை தேடி, உங்களை நாடி உரிமையோடு உங்களில் ஒருவனாக வந்துள்ளேன். தமிழகத்தின் நுழைவு வாயில் என போற்றப்படும் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ஓட்டு கேட்டு வந்துள்ளேன். கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தந்த உரிமையில் வாக்கு கேட்டு வந்துள்ளேன்.
அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் கே.பி. முனுசாமி, அமைச்சராக இல்லாமலேயே அமைச்சராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். கே.பி.முனுசாமியை 30 சதவீதம் கமிஷன் முனுசாமி என்று அழைப்பார்கள்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நியாயம் கேட்டு உண்ணாவிரதம் இருந்தார் கே.பி.முனுசாமி. தற்போது அவர்களிடம் ஓட்டிக்கொண்டு உள்ளார். அவர் பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமியை மிரட்டி பதவி வாங்கி உள்ளார். தற்போது ஜெயலலிதாவுக்காக நியாயம் கேட்பதை மறந்து விட்டார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல், கமிஷன், கரப்ஷன் அதிகமாக நடந்துள்ளது. இவர்கள் செய்த ஊழல் குறித்து கவர்னரிடம் புகார் கொடுத்துள்ளோம். நெடுஞ்சாலை துறை டெண்டர் எடப்பாடி பழனிசாமி சம்மந்திக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. அதில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது என நீதிமன்றத்தில் வழக்கு போட்டதை தொடர்ந்து வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
சி.பி.ஐ. விசாரணைக்கு பழனிசாமி தடை உத்தரவு வாங்கி உள்ளார். தடை உத்தரவு வாங்கவில்லை என்றால் இப்போது அவர் சிறையில் தான் இருப்பார். உள்ளாட்சி துறை அமைச்சர் என்று சொல்லாமல் ஊழல் ஆட்சி துறை அமைச்சர் என்று தான் கூற வேண்டும்.
கொரோனா காலத்திலும் அந்த தொற்று நோயை பயன்படுத்தி கொள்ளையடித்த ஆட்சி தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. மாஸ்க், விளக்குமாறு ஆகியவற்றில் பல கோடி கொள்ளையடித்துள்ளனர். அமைச்சர் வேலுமணி வெளிப்படையாகவும், தங்கமணி சைலண்ட்டாகவும் ஊழல் செய்வார்கள். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் முந்திரிக் கொட்டை.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஊழல் அமைச்சர்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.
வருகிற சட்டசபை தேர்தலில் ஒரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கூட வரக்கூடாது. அவ்வாறு வந்தால் அவர்கள் பா.ஜனதா எம்.எல்.ஏ. வாக இருப்பார்கள். தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம்தான் வெல்ல போகிறோம். இந்த உதவாக்கரை ஆட்சிக்கு மக்கள் நீங்கள் பாடம் புகட்ட வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் யாரும் நிம்மதியாக இல்லை. மின்கட்டணம், பால் விலை, பெட்ரோல், டீசல், விலை விஷம் போல் உயர்ந்துள்ளது. இந்த ஆட்சியின் கொடுமையை விட வெயில் பெரிதல்ல என்று நீங்கள் இங்கே நின்று கொண்டு இருக்கிறீர்கள்.
கருணாநிதி வழியில் அவரது மகனான ஸ்டாலின் சொன்னதை தான் செய்வான், செய்வதை தான் சொல்வான். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 3 வேளாண் சட்டத்தை திரும்ப பெற முதல் தீர்மானமாக நிறைவேற்றப்படும். கூட்டுறவு வங்கியில் விவசாய கடன், 5 பவுனுக்குட்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்படும். அரசு பணியில் 3 லட்சத்து 50 இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள்.
கிருஷ்ணகிரி, தேனிகனிக்கோட்டை, ராயக்கோட்டையில் குளிர்பதன கிடங்கு, இ.எஸ்.ஐ. மருத்துவமனை தரம் உயர்த்துதல், ஏற்றுமதி மண்டலம், சூரியகாந்தி எண்ணை உற்பத்தி மையம், பர்கூரில் ஜவுளி பூங்கா, என பல்வேறு இடங்களில் பஸ் நிலையம் உள்ளிட்ட வசதிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 ஆண்டுகளில் ஏற்படுத்தப்படும்.
இனி இந்த திராவிட மண்ணில் மோடி மஸ்தான் வேலை பலிக்காது.
தமிழகம் தலைநிமிர்ந்து நிற்க, இழந்த உரிமைகளை பெற நாம் போராடி வெற்றி பெற வேண்டும்.
எனவே இந்த தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றிபெற அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதை தொடர்ந்து கிருஷ்ணகிரிக்கு அவர் புறப்பட்டு சென்றார். அங்கு நடந்து சென்று பொதுமக்களிடம் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
இதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டத்துக்கு பிரசாரம் செய்ய மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வரையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வரையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. மாவட்ட நிர்வாகத்தின் தீவிர நடவடிக்கையாலும், பொதுமக்கள் முக கவசம் அணிந்து சென்றதாலும், சமூக இடைவெளியை கடைபிடித்ததின் விளைவாகவும் கொரோனா பரவல் தொற்று குறைந்தது. இதனால் தினமும் ஒன்று முதல் 5 பேர் வரையில் கொரோனா பாதிப்பு காணப்பட்டது. மேலும் இறப்பும் வெகுவாக குறைந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிேசாதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவி வருவதால் பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்டம் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர் பாக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மார்ச் 21-ந் தேதி மட்டும் 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 289 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8 ஆயிரத்து 94 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 77 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து மே மாதம் 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எண்ணப்பட உள்ளது. இதற்காக கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கான பொது பார்வையாளர்கள் பால்சனா, பார்த்தசாரதி சென்ஷர்மா, ஹன்ஸ்ராஜ் சுஹான், காவல் துறை பார்வையாளர் சுனில் பாஸ்கர் கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு சென்று வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானுரெட்டி உடன் சென்றார்.
வாக்கு எண்ணும் மையமான அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், வாக்குப்பதிவு எந்திரங்கள் இருப்பறை, வாகனங்கள் நிறுத்தும் இடம், வாக்குச்சாவடி முகவர்கள் அறை, ஊடக மையம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், தேர்தல் தாசில்தார் ஜெய்சங்கர், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதிய தொழில் தொடங்க அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தவறான செய்தியை பரப்பி வருகிறார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஓசூர்:
தமிழகத்தில் சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, பர்கூர், வேப்பனஹள்ளி போன்ற பகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
இதையடுத்து ஓசூர் பத்தல பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள ஓட்டலில் இரவு தங்கினார். பின்னர் இன்று காலை முதல்- அமைச்சர் ஓசூர் ராயக்கோட்டை பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
நடைபெற உள்ள தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணி வலிமையான கூட்டணி. ஓசூர் தொகுதி வளர்ச்சி பெற இந்த பகுதிக்கு எண்ணற்ற திட்டங்கள் கிடைக்க அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரியுங்கள். அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தலைவர்கள் நாட்டு மக்களுக்காக உழைக்கும் தலைவர்கள். நாடு வளம் பெற உழைக்கும் தலைவர்கள்.
அடித்தட்டு மக்களின் வாழ்க்கை தரம் உயரவும், அவர்களின் வாழ்க்கை சிறக்கவும் பாடுபட கூடிய தலைவர்கள் நமது கூட்டணியில் உள்ள தலைவர்கள். ஒத்த கருத்துடைய அனைவரும் ஒன்றாக இணைந்து இன்றைய தினம் நாம் களத்தில் இறங்கி உள்ளோம்.
அ.தி.மு.க. கூட்டணி அருமையான கூட்டணி, வெற்றிக் கூட்டணி ஆகும். அதே நேரத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. மக்களுக்கு நல்லது செய்வதற்காக அவர்கள் கூட்டணி அமைக்கவில்லை. நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தந்தது அ.தி.மு.க.அரசு. மக்களின் அடிப்படை தேவைகள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்.
இந்த ஓசூர் நகரை தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். எந்த மூலையில் உள்ள மக்களை கேட்டாலும் ஓசூரை பற்றி கூறுவார்கள். தொழிற்சாலைகள் நிறைந்த இந்த ஓசூரில் தொழில் தொடங்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கிடவும் கழக அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.
புதிய தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். கடந்த 2015-ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடந்தது. அன்றைய தினம் ஓசூர் பகுதிக்கு டி.வி.எஸ். உள்பட 4 நிறுவனங்கள் ரூ.5 ஆயிரம் கோடியில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் 13 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர்.
அதன்பிறகு 2019-ம் ஆண்டு எனது தலைமையிலான அரசில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. அப்போது 304 தொழிற்சாலைகள் தமிழகம் வருவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதே ஓசூரில் டாடா நிறுவனம் ரூ.4 ஆயிரத்து 700 கோடி மதிப்பில் தொழி தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 18 ஆயிரத்து 250 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அந்த நிறுவனத்துடன் மேலும் 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கிறது. இவ்வாறு 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்போது இந்த பகுதியை சேர்ந்த ஏராளமான படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த ஓசூர் பகுதிக்கு மட்டும் அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள், செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏராளம்.
ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினோ புதிய தொழில் தொடங்க அ.தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தவறான செய்தியை பரப்பி வருகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்டு தொழிற்சாலைகள் இயங்கும்போது இந்த பகுதியில் ஒன்றரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
ஓசூர் மாநகரம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த மாநகரம். பெங்களூரு நகரம் அருகாமையில் உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக செல்கின்றன. எனவே இந்த பகுதியில் ஓசூர் ஜூஜூவாடி முதல் பேரண்டப்பள்ளி வரையில் 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.220 கோடியில் சாலை அமைக்கும் பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த சாலை அமைக்கப்படும்போது ஓசூர் மாநகரில் போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக குறைந்து விடும்.
அதே போல ஓசூரில் புதிய பஸ் நிலையம் தொடங்கவும் நடவடிக்கை எடுப்போம். கொடியாளம் அணைக்கட்டில் இருந்து 50 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த பகுதியில் ரூ.20 கோடியில் சர்வதேச மலர் ஏல மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இதன் மூலம் மலர் ஏற்றுமதி விவசாயிகள் பயன் பெறுவார்கள். மேலும் 20 ஏக்கர் நிலத்தில் காய்கறி மார்க்கெட் ஏற்படுத்தி தரப்படும்.
ஓசூர் சுற்று வட்டார மக்களுக்காக கழக ஆட்சியில் 7 அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓசூர் பகுதி ஏழை, மாணவ, மாணவிகள் கல்வியில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதற்காக 2013-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதாவால் புதியஅரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டது.
இந்த பகுதியில் சில இடங்களில் குடிநீர் பிரச்சினை இருப்பதாக கூறினார்கள். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் இந்த பகுதி முழுவதும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு கிடைக்கும். கடந்த 2006-2011-ம் ஆண்டு திமு.க. ஆட்சியில் கடுமையான மின்வெட்டு இருந்தது. இந்த பகுதியில் தொழில்கள் பாதிக்கப்பட்டன.
பின்னர் 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகளின் விளைவாக மின் தடை நீங்கி இன்று தமிழகம் மின் மிகை மாநிலமாக விளங்குகிறது. கொரோனா காலத்திலும் ரூ.60 ஆயிரம் கோடியில் புதிய முதலீட்டுகளை ஈர்த்த மாநிலம் தமிழ்நாடு. கொரோனாவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கையில் தமிழக அரசு முதலிடத்தில் உள்ளதாக பிரதமர் மோடி பாராட்டினார்.
ஓசூர் பகுதி மக்களுக்கு மேலும் திட்டங்கள் கிடைக்க வருகிற தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, பென்னாகரம் மற்றும் தருமபுரி தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். இதையடுத்து பாலக்கோடு தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலம், அரூர் தொகுதிக்கு உட்பட்ட மொரப்பூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு சென்று இன்று மாலை பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதையடுத்து தமிழக முதல் அமைச்சர் இறுதியாக ஒடசல்பட்டி கூட்டு ரோட்டில் பிரசாரம் மேற்கொண்டு சேலம் செல்ல உள்ளார்.

மத்திகிரி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திகிரி:
மத்திகிரி அருகே உள்ள குரும்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி லட்சுமி (வயது 27). சம்பவத்தன்று லட்சுமி வீட்டில் சாப்பாடு செய்யவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து கணவர் கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த லட்சுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேப்பனப்பள்ளி அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி போலீசார் நாச்சிகுப்பம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற பெரிய தம்மண்டரப்பள்ளியை சேர்ந்த ராஜசேகர் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பேரிகை அருகே விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
பேரிகை அருகே உள்ள கே.என்.தொட்டியை சேர்ந்தவர் நாராயணப்பா (வயது 59). விவசாயி. சம்பவத்தன்று அவர் சைக்கிளில் பேரிகை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நாராயணப்பா பரிதாபமாக இறந்தார். இது குறித்து பேரிகை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்லூரி பேராசிரியையின் கணவர் வி.மாதேப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றி வருவதால் அங்குள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
வேப்பனப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே வி. மாதேப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றும் வரும் ஆசிரியரின் மனைவி தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரது கணவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் வி.மாதேப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றி வருவதால் அங்குள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்னும் ஒரிரு நாட்களில் தெரியவரும்.