என் மலர்
கிருஷ்ணகிரி
தொழிலாளியிடம் கத்திமுனையில் பணம் பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியை சேர்ந்தவர் பிரபாகரன் (30). இவர் சூளகிரியில் ஒரு தனியார் நிறுவன கேன்டீனில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு, அவர் சூளகிரியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையம் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 3 பேர், பிரபாகரனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர்.
இதனால் அவர் சத்தம் போட்டதால் அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அவர்களில் 2 பேரை மடக்கி சூளகிரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ஓசூர் அருகே பெருமாபள்ளியை சேர்ந்த பாபு (24) மற்றும் நவீன் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய பி.முதுகானப்பள்ளியை சேர்ந்த நிதின் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 2,298 வாக்குச்சாவடி மையங்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை பிரித்து வழங்கும் பணியை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை வளாகத்தில் மாவட்டத்தில் உள்ள 2,298 வாக்குச்சாவடி மையங்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் பிரித்து வழங்கும் பணி நடைபெற்றது. இந்த பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இது குறித்து கலெக்டர் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 2,298 வாக்குச்சாவடி மையங்களுக்கு 2,298 தெர்மல் ஸ்கேனர், 13,788 (500 மிலி) மற்றும் 22,980 (100 மிலி) கிருமி நாசினி பாட்டில்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 22,980 முககவசங்கள், 1,37,880 மூன்றடுக்கு முககவசங்கள், 57,450 ஓரடுக்கு முககவசங்கள், 68,940 கையுறைகள் வழங்கப்படுகிறது. 11,490 எல்.டி.பி.இ. பேக்கேஜ், 2,298 டி கட் பேக், 15,98,865 பாலிதீன் கையுறைகள், 27,576 பி.பி.இ. உபகரணங்கள் தனித்தனியே தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை தனித்தனியாக பிரித்து வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடக்கிறது. எனவே, பொதுமக்கள், அலுவலர்கள், பணியாளர்கள், முகவர்கள் என அனைவரும் சட்டமன்ற தேர்தலை பாதுகாப்பான முறையில் சிறப்பாக நடத்திட ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை வளாகத்தில் மாவட்டத்தில் உள்ள 2,298 வாக்குச்சாவடி மையங்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் பிரித்து வழங்கும் பணி நடைபெற்றது. இந்த பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இது குறித்து கலெக்டர் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 2,298 வாக்குச்சாவடி மையங்களுக்கு 2,298 தெர்மல் ஸ்கேனர், 13,788 (500 மிலி) மற்றும் 22,980 (100 மிலி) கிருமி நாசினி பாட்டில்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 22,980 முககவசங்கள், 1,37,880 மூன்றடுக்கு முககவசங்கள், 57,450 ஓரடுக்கு முககவசங்கள், 68,940 கையுறைகள் வழங்கப்படுகிறது. 11,490 எல்.டி.பி.இ. பேக்கேஜ், 2,298 டி கட் பேக், 15,98,865 பாலிதீன் கையுறைகள், 27,576 பி.பி.இ. உபகரணங்கள் தனித்தனியே தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை தனித்தனியாக பிரித்து வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடக்கிறது. எனவே, பொதுமக்கள், அலுவலர்கள், பணியாளர்கள், முகவர்கள் என அனைவரும் சட்டமன்ற தேர்தலை பாதுகாப்பான முறையில் சிறப்பாக நடத்திட ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், அரசியல் கட்சிகளுக்கு ஓட்டு போடாமல், நோட்டாவுக்கு ஓட்டு போடுவது என முடிவு செய்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில், தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கிருஷ்ணகிரி, வேலூர், கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தேனி உட்பட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் யானைகள், காட்டுப்பன்றிகள் கூட்டம், கூட்டமாக படையெடுத்து, விவசாயத்தை நாசமாக்கி வருகிறது. பயிர் சேதம், உயிர் சேதம் நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது.
வன விலங்குகள் பிரச்சனைகளுக்கு, இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை. அரசியல் கட்சிகள், தங்களது தேர்தல் அறிக்கையில், வனவிலங்கு பிரச்சனை தீர்வுக்கு எதுவும் குறிப்பிடவில்லை. எனவே, வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், அரசியல் கட்சிகளுக்கு ஓட்டு போடாமல், நோட்டாவுக்கு ஓட்டு போடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், தேன்கனிக்கோட்டை சார்பில், தேன்கனிக்கோட்டை பகுதியில், விவசாயிகளின் ஓட்டு நோட்டாவுக்கு என பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில், தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கிருஷ்ணகிரி, வேலூர், கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தேனி உட்பட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் யானைகள், காட்டுப்பன்றிகள் கூட்டம், கூட்டமாக படையெடுத்து, விவசாயத்தை நாசமாக்கி வருகிறது. பயிர் சேதம், உயிர் சேதம் நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது.
வன விலங்குகள் பிரச்சனைகளுக்கு, இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை. அரசியல் கட்சிகள், தங்களது தேர்தல் அறிக்கையில், வனவிலங்கு பிரச்சனை தீர்வுக்கு எதுவும் குறிப்பிடவில்லை. எனவே, வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், அரசியல் கட்சிகளுக்கு ஓட்டு போடாமல், நோட்டாவுக்கு ஓட்டு போடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், தேன்கனிக்கோட்டை சார்பில், தேன்கனிக்கோட்டை பகுதியில், விவசாயிகளின் ஓட்டு நோட்டாவுக்கு என பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
போச்சம்பள்ளி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
போச்சம்பள்ளி தாலுகா குள்ளம்பட்டி அருகே உள்ள கள்ளியூரை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 25). விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் தமிழரசனுக்கு கடன் பிரச்சினை இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் தமிழரசன் இறந்தார். இது குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குந்தாரப்பள்ளி அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குருபரப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள குந்தாரப்பள்ளி சந்தை பகுதியில் குருபரப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காணிக்கைசாமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பில்லனகுப்பம் பகுதியை சேர்ந்த நஞ்சுன்டன் (வயது 40) என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.500 பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக மக்கள் மாற்றத்திற்கு தயாராகி விட்டார்கள் என்று தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
கிருஷ்ணகிரி:
தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். ராகுல்-ஸ்டாலின் தலைமை என்பது ஒரு சிறந்த தலைமையாக கருதப்படுகிறது. தமிழகத்தின் முதல்-அமைச்சராக ஸ்டாலின் வர வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் விரும்புவதை என்னுடைய சுற்றுப்பயணத்தின் மூலம் காண முடிந்தது. தமிழகத்தின் பிரதான கோரிக்கைகளான வளர்ச்சி, வேலை வாய்ப்பு தேவைப்படுகிறது. எங்களின் கூட்டணியால் தமிழகத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தி தர முடியும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை தர முடியும்.
சிறந்த பொருளாதார கொள்கைகளை பின்பற்றி தமிழகத்தை மேம்பாட்டிற்கு கொண்டு வர முடியும் என்று மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் எந்த ஒரு துறையிலும் மிகப்பெரிய முன்னேற்றத்தை காண முடியவில்லை. ஆனால் ஸ்டாலின் முதல்-அமைச்சராக வந்தால் முன்னேற்றத்தை அவர் கொடுப்பார் என மக்கள் நம்புகிறார்கள். கிராமப்புறங்களில் ஊராட்சிகளில் தான் ஏலம் விடுவார்கள்.
அதே போல அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் பதவி ஏலத்தில் எடுக்கப்பட்டது. அதனால் மக்களின் உணர்வுகளை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் எங்கள் கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் படிப்படியாக கட்சியில் வளர்ந்து வந்தவர். கிளை செயலாளர் பதவியில் இருந்து அவர் இந்த நிலைக்கு வந்துள்ளார். மக்கள் அவரை நம்புகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர் கெட்டு விட்டது. ஏராளமான களவுகள், கொலைகள் நடந்து வருகின்றன. இதை அவரது அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொலைகள், கொள்ளை சம்பவம் நடந்தன. அதில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
உலக புகழ் பெற்ற தமிழக காவல் துறையால், முன்னாள் முதல்-அமைச்சரின் இருப்பிடத்தில் நடந்த கொலை, கொள்ளையை கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது அரசை எந்த வகையில் நடத்துகிறார்கள் என்பதற்கு இதுவே சான்றாகும். தற்போது மக்களிடம் உள்ள எழுச்சியை பார்த்தால் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். இந்தியாவில் இதுபோன்ற ஒரு விலைவாசி உயர்வை யாரும் பார்த்ததில்லை.
மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் இந்தியாவில் விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 108 டாலர் என்று இருந்த போது மன்மோகன்சிங் லிட்டர் ரூ.70-க்கு பெட்ரோலை தந்தார். ஆனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரி பாதியாக குறைந்துள்ளது. அதாவது 54 டாலர். அப்படியானால் அவர் பெட்ரோல் விலையை ரூ.35-க்கு கொடுக்க வேண்டும். ஆனால் இன்றோ பெட்ரோல் விலை ரூ.100-ஐ தொட்டு விட்டது.
500, 1000 ரூபாய் எதற்காக செல்லாது என்று மோடி சொன்னார் என்று அவருக்கும், அவரது அமைச்சரவைக்கும், நாட்டு மக்களுக்கும் தெரியவில்லை. அதனால் நமது பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததை தவிர, எழுச்சி அடையவில்லை. தவறான பொருளாதார விளைவுகள், ஏதேச்சை அதிகார ஆட்சியால் இந்தியாவில் விலைவாசி உயர்ந்துள்ளது. இந்த பேரழிவுகளுக்கு காரணம் மோடியும், அவருக்கு துணையாக இருக்க கூடிய எடப்பாடி பழனிசாமியும் தான்.
கருத்து கணிப்புகளை பற்றி எனக்கு தீர்க்கமான முடிவு கிடையாது. ஆனால் ஒன்றை உணர்கிறேன். கடந்த 15 நாட்களாக நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. பெண்கள், இளைஞர்கள் அதிகமாக வருகிறார்கள். தமிழக மக்கள் மாற்றத்திற்கு தயாராகி விட்டார்கள். மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடக்கூடாது. வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை தருவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் அறிக்கையில் கூறுவதை நம்ப முடியாது. கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் இவர்கள் எவ்வளவு அரசு பணியிடங்களை தந்துள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், சுழற்சி முறையில் வழங்கும் பணியை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 6 சட்டசபை தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சூழற்சி முறையில் வழங்கும் பணிகள் நடந்தது. இந்த பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர்கள் பல்சானா, பார்த்தசாரதி சென்ஷர்மா, ஹன்ஸ்ராஜ் சுஹான், அனைத்து அரசியல் கட்சி இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் கலெக்டர் பேசியதாவது:-
ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளுக்கு ஏற்கனவே, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், இணையதளம் வாயிலாக சூழற்சி முறையில் 2 கட்டங்களாக வழங்கப்பட்டுள்ளது. இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், அந்தந்த தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு, தேர்தல் ஆணையத்தின் இணைதளம் வாயிலாக சுழற்சி முறையில் வழங்கும் பணிகள் தற்போது நடைபெறுகிறது.
மேலும், வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்களிப்பது குறித்து செயல்முறை காண்பிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், மின்னணு வாக்குப்பதிவு எந்திர சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தேர்தல் பொது பார்வையாளர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், வேட்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
அதிமுக சார்பில் கே.பி. முனுசாமி, திமுக சார்பில் பி முருகன், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஜெயபால், நாம் தமிழர் கட்சி சார்பில் சக்திவேல், தேமுதிக சார்பில் முருகேசன் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதிமுக வேட்பாளர் கே.பி. முனுசாமி சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 11,86,790
2. அசையும் சொத்து- ரூ. 70,34,070
3. அசையா சொத்து- ரூ. 8,18,00,000
திமுக வேட்பாளர் பி. முருகன் சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 1,25,000
2. அசையும் சொத்து- ரூ. 64,30,973
3. அசையா சொத்து- ரூ. 2,63,49,536
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சிறப்பு மற்றும் கடைசி தொகுதியாக வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி திகழ்ந்து வருகிறது. தமிழகத்திலேயே தமிழகம், ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலங்களின் மூன்று மாநில எல்லைகளையும் கொண்ட ஒரே தொகுதி வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியாகும். இந்த தொகுதியில் சிறப்பு மிக்க வரலாற்று கோவில்கள் உள்ளன.
வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் வேப்பனப்பள்ளி, சூளகிரி, ராயகோட்டை, உத்தனப்பள்ளி ஆகியவை முக்கிய நகரங்களாக உள்ளன.
மேலும் தமிழகத்தில் எந்த ஒரு பேருராட்சி, நகராட்சி, மற்றும் மாநகராட்சி இல்லாமல் ஊராட்சிகளை மட்டுமே கொண்டுள்ள ஒரே தொகுதி வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியாகும். இத்தொகுதியில் சூளகிரி ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சிகள், வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் உள்ள 24 ஊராட்சிகள், கெலமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 3 ஊராட்சிகள் என மொத்தம் 73 ஊராட்சிகளை கொண்டுள்ளது.
வாக்காளர்கள்
தற்போது வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 27 ஆயிரத்து 604 பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 23 ஆயிரத்து 21 பேர் உள்ளனர். 3&ம் பாலினத்தனவர் 32 பேர் உள்ளனர். வேப்பனப்பள்ளி தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரத்து 657 பேர் உள்ளனர்.

வேப்பனப்பள்ளி தொகுதியை பொருத்த வரையில் சாதிவாக்குகள்தான் அரசியல் கட்சிகளின் வெற்றியை நிரூபித்து வருகிறது.
ஓசூர், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி ஆகிய வட்டங்களை கொண்ட இந்த தொகுதி மக்களின் பேசும் மொழியாக தமிழ், தெலுங்கு, உருது, கன்னடம், ஆங்கிலம் ஆகியவை உள்ளன. இந்துகள் அதிகமாக உள்ளனர். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.
கவுடா, ரெட்டி சமூகத்தினரும், ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்களும் கணிசமாக வசித்து வருகின்றனர், அதாவது இந்த தொகுதியில் கவுண்டர்கள் 20 சதவீதம், நாயுடுகள் 20 சதவீதம், மற்றும் ரெட்டியார், செட்டியார், பழங்குடியினர் 10 சதவிதம், ஆதிதிராவிடர் 15 சதவிதம் என வசித்து வருகின்றார்கள்.
இந்த வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி 2011-ம் ஆண்டு முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் இருந்து 54-வது வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியாக பிரிக்கப்பட்டது. வேப்பனப்பள்ளி தொகுதி பரப்பளவில் மிகப்பெரியது ஆகும்.
மாம்பழ உற்பத்தி
இந்த தொகுதியில் மக்களின் வாழ்வாரம் விவசாயம் மட்டுமே. எங்கு சுற்றி திரும்பி பார்த்தாலும் பச்சை பசலேன்று விவசாயம் மட்டுமே காணப்படும். மேலும் தமிழகத்தின் மாம்பழத்தின் முதன்மை மாவட்டமாக திகழும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50 சதவீத மாம்பழம் வேப்பனப்பள்ளி தொகுதியில் இருந்து தான் சாகுபடி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி பிரிக்கப்பட்ட 2011 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. இதையடுத்து 2016 சட்ட மன்ற தேர்தலிலும் மீண்டும் தி.மு.க.வே வெற்றி பெற்றது.
தொகுதி பிரச்சினைகள்
முற்றிலும் கிராமங்கள் சூழ்ந்துள்ள வேப்பனப்பள்ளி தொகுதியில் போதிய சாலை வசதியும், பஸ் வசதியும் திருப்திகரமாக இல்லை. இங்கு வசிக்கும் மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் இருந்தாலும் பாசனத்துக்கான நீர் மேலாண்மை திட்டங்கள் ஏதும் இல்லாததால் வானம் பார்த்த பூமியாகவே காட்சியளிக்கிறது.
இதனால் இந்த தொகுதி மக்கள் விவசாயத்தை கைவிட்டு ஓசூரில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகிறார்கள்.
விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்ய இருசக்கர வாகனத்திலேயே ஓசூர், கிருஷ்ணகிரி , சூளகிரி ஆகிய சந்தைகளுக்கு பயணிக்கும் நிலை இருந்து வருகிறது. இத்தொகுதி யில் உள்ள ஜீனூரில் 400 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலை பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு இன்று வரை கிடப்பில் உள்ளது.

சிங்கிரிப் பள்ளி அணை திட்டம் நிறைவேற்றப் படாமல் உள் ளது. வேப்பனப்பள்ளி தொகுதியில் கல்லூரியோ, தொழிற்சாலையோ இல்லை. இதனால் கல்விக்காகவும், வேலைக்காகவும் இத்தொகுதி மக்கள் நீண்டதூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே முத்தாலி, அளியாளம், சுபகிரி ஆகிய 3 இடங்களில் சிறு தடுப்பணைகள் கட்டி, இந்த தொகுதியில் உள்ள ஏரிகளில் நீர் நிரப்ப வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.
ஆந்திரா, கர்நாடக மாநில வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானை கூட்டத்துக்கு வேப்பனப்பள்ளிதான் வழித்தடமாக உள்ளது, இவ்வாறு யானைகள் செல்லும் போது விவசாய பயிர்களை நாசமாக்கி விடுகின்றன. மேலும் சில சமயங்களில் யானைகளால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வேப்பனப்பள்ளி தொகுதியில் அனைத்து பகுதிகளும் ஊராட்சிகளாக இருந்து வருவதால் வளர்ச்சி அடையாத தொகுதியாக உள்ளது. குறிப்பாக தொகுதி மக்களின் குடிநீர் பிரச்சினை, பஸ் வசதி, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை இன்னும் பல கிராமங்களில் இல்லாத நிலை உள்ளது.
வேப்பனப்பள்ளி, சூளகிரி, ராயக்கோட்டை ஆகிய ஊராட்சிகளை பேரூராட்சிகளாக மாற்ற வேண்டும். அதிக விபத்துகள் ஏற்படும் சூளகிரியில் தீயணைப்பு நிலையம் ஏற்படுத்த வேண்டும்.
இதேபோல் வேப்பனப் பள்ளி, சூளகிரி ஆகிய பகுதிகளில் விவசாயம் பிரதானமாக தொழிலாக உள்ளது. மேலும் இந்த தொகுதிகளில் காய்கறிகள் உற்பத்தியும், ஏற்றுமதியும் அதிகளவில் இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பயன்படும் வகையில் சந்தைகள் அமைக்கப்பட வேண்டும் என்று தொகுதி மக்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.
இந்த தொகுதியில் மாம்பழ உற்பத்தி அதிகமாக உள்ளதால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் புதிதாக மாழ்பழ கூழ் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும்.
பா.ஜனதா - காங்கிரஸ் கட்சிகள் நேருக்குநேர் போட்டியிடும் தளி தொகுதி கண்ணோட்டம்.
அதிமுக கூட்டணியில் பா.ஜனதாவுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் நாகேஷ்குமார் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடுகிறது. அக்கட்சி சார்பில் டி. ராமச்சந்திரன் களம் காண்கிறார். ஐ.ஜே.கே. சார்பில் அசோக்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் மேரி செல்வராணி, அமமுக கூட்டணியில் கோகுலம் மக்கள் கட்சி சார்பில் எம்.வி. சேகர் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பா.ஜனதா வேட்பாளர் நாகேஷ்குமார் சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 5,00,000
2. அசையும் சொத்து- ரூ. 42,87,000
3. அசையா சொத்து- ரூ. 50,00,000
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி. ராமச்சந்திரன் சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 30,000
2. அசையும் சொத்து- ரூ. 29,07,174.20
3. அசையா சொத்து- ரூ. 24,24,596
தமிழக- கர்நாடக மாநில எல்லையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி (தனி) சட்டமன்ற தொகுதி உள்ளது. லிட்டில் இங்கிலாந்து என்று அழைக்கப்படும் குளிர் பிரதேசமான தளி தொகுதி காடுகள் மலைகள் மலைகள் சூழ்ந்த இயற்கை வளம் கொண்ட தொகுதியாக திகழ்கிறது.

இத்தொகுதியில் காடுகள் நிறைந்த மலை கிராமங்கள் அதிக அளவில் உள்ளன விவசாய நிலங்கள் ரோஜா தோட்டங்கள் வன விலங்குகள் அதிக அளவில் இருக்கின்றன. சிறு குறு தொழில் சாலைகளும் உள்ளன.
தளி சட்டமன்றத் தொகுதியில் கர்நாடக மாநிலம் குடகு மலையில் உற்பத்தி யாகும் காவிரி ஆறு தமிழகத்திற்குள் நுழைவது இந்த தொகுதியில்தான் ஒகேனக்கல் வழியாக மேட்டூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்ட விவசாய நிலங்களை வளம் கொழிக்கச் செய்யும் காவிரி ஆறு ஓடுகிறது.காவேரி ஆற்று நீரை அளக்கும் இடமான பிலிகுண்டுலு இத்தொகுதியில் உள்ளது.

தளி சட்டமன்றத் தொகுதியில் உள்ள தேன்கனிக்கோட்டையில் 5000 ஆண்டுகள் பழமையான மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சவுந்தரவல்லி நாச்சியார் உடனுறை ஸ்ரீ பேட்டராய் சுவாமி கோவில் உள்ளது உரிகம் அடுத்து நூறொன் து
சுவாமிமலையில் இளநீரில் விளக்கு எரியும் கோயில் உள்ளது மேலும் யாரப் தர்கா சிறப்பு வாய்ந்ததாகும். தளிப்பகுதியில் காய் கறிகள், கீரைகள், மற்றும் மலர்கள் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது.

இங்கு விளையும் தக்காளி, பீன்ஸ் கேரட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கர்நாடக, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்று மதி செய்யப்படுகிறது. அதேபோல் மலர்கள் உற்பத்தியில் இங்கு விளையும் ரோஜா மலர்கள் உலகத்தரம் வாய்ந்தவை ஆகும் அதேபோல் கார்னேஷன், ஜெர்பரா, உள்ளிட்ட அலங்கார மலர்களும் ரோஜாவை போல் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
கல்வியறிவு இல்லாத மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் முன்னேற்றம் இல்லாத கிராமங்கள், என தமிழக எல்லையல் காட்டுப்பகுதி சூழ இருப்பதால் கவனிப்பாரற்ற இருக்கிறது இந்தத் தொகுதி நாம் பார்த்திராத ஆதிகால கிராமங்கள் இன்னும் நிறைய உள்ளன.

1977-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக இது உத்தனப்பள்ளி தொகுதி 1977-க்கு பிறகு உத்தனப்பள்ளி தொகுதி நீக்கப்பட்டு தளி தொகுதி உதயமானது. இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கும் இந்த தொகுதியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது, என 4 மொழிகள் பேசும் வாக்காளர்கள் நிறைந்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், ஆகிய 2 பேரூராட்சிகள் 68 ஊராட்சிகள் கொண்ட தொகுதி இதுவரை 10 சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்துள்ளது.
தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு தளி சட்டமன்றத் தொகுதியில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை ஏற்கனவே இருந்த தளி மற்றும் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த கிராமப் பகுதிகள் இந்த தொகுதி அடங்கியுள்ளன.
தளி தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,28, 625 பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 1,21 ,915 பேர் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 39 என மொத்தம் 2,50 ,579 வாக்காளர்கள் உள்ளனர்.
1977 முதல் தற்போது தேர்தல் நடைபெற்ற 2016&ம் ஆண்டு வரை 10 சட்டமன்ற உறுப்பினர்களை சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த தொகுதியில் காங்கிரஸ் 4 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 முறையும் ஜனதா கட்சி 1 முறையும் பா.ஜனதா கட்சி வேட்பாளர் 1 முறையும் சுயேச்சை 1 முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த தொகுதியில் தேசிய கட்சிகளே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் 2016-ம் ஆண்டு மாநில கட்சியான தி.மு.க. ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.
தளி சட்டமன்றத் தொகுதியில் ரெட்டி, நாயுடு, வன்னியர்கள், ஒக்கலிகா, யாதவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆதிதிராவிடர்கள் எனப் பல சமூக மக்களும் வாழ்கின்றனர்.
தொகுதி பிரச்சனைகள்
மலை கிராமங்களில் போதிய படிப்பறிவு இல்லாத காரணத்தால் இளம் வயது திருமணங்கள் அதிக அளவில் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது மேற்படிப்பிற்காக கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே உயர்கல்வி கற்க இப்பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

மேலும் இந்த பகுதியிலேயே தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்படுகிறது.
விவசாயம் சார்ந்த தொழில்களே இங்கு பிரதான தொழிலாகும் அறுவடைக் காலங்களில் யானைகள் மற்றும் வன விலங்குகள் தொந்தரவு அதிகளவில் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர் எனவே யானைக் கூட்டங்களை கட்டுப்படுத்த அரசு மேலும் பல்வேறு இடங்களில் சோலார் மின்வேலி அமைத்து கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது வறண்டு கிடக்கும் ஏரிகளை ஆழப்படுத்தி அகலப்படுத்தி தூர்வாரி ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கையாக உள்ளது.
அஞ்செட்டி பகுதியில் தொட்டல்லா அணை கட்டும் திட்டம் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதால் அதை அரசு நிறைவேற்ற வேண்டும் இதனால் இப்பகுதியில் குடிநீர் தேவை மட்டுமின்றி விவசாயத்திற்கும் பயன்பட்டு நிலத்தடி நீரும் உயரும் மேலும் பல கிராமங்களில் சாலை வசதி இல்லாத காரணத்தால் உயிரிழப்புக்கள் அதிக அளவில் இருப்பதாகவும் சாலையை மேம்படுத்த வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.
அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்தி கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய மருத்து வமனையாக உயர்த்த வேண்டும். மலைப்பகுதியில் பஸ்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவதால் சாலைகளை விரிவுபடுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்
தளி அருகே அரசு சார்பில் கொய் மலர் உற்பத்தி செய்ய இஸ்ரேல் நாட்டு உதவியுடன் விவசாயிகளுக்கு இலவச பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது ஆனால் சிறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் ரோஜா செடி நாற்றங்காலுக்கு அரசு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அஞ்செட்டி யை தலைமையிடமாகக் கொண்டு ஒன்றியம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாமல் தாலுகாவாக மாற்றியது ஏமாற்றம் அளிப்பதாக மக்கள் தெரிவித்தனர்.
தேன்கனிக்கோட்டை நகரில் உள்ள மகாத்மா காந்தி சாலை, நேதாஜி சாலை, தாலுகா அலுவலக சாலை, ஓசூர் மெயின் சாலை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதைத் தவிர்க்க சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:


1977 ராஜாராம் நாயுடு (காங்கிரஸ்)
1980 ராஜாராம் நாயுடு (காங்கிரஸ)
1984 வேணுகோபால் (காங்கிரஸ்)
1989 விஜயேந்திரய்யா (ஜனதா தட்சி)
1991 வெங்கடராம ரெட்டி (காங்கரஸ்)
1996 ராஜா ரெட்டி (சி.பி.ஐ)
2001 முரளிதரன் (பா.ஜ.க)
2006 ராமசந்திரன் (சுயேட்சை)
2011 ராமச்சந்திரன் (சி.பி.ஐ)
2016 பிரகாஷ் (தி.மு.க)
ஜெயலலிதாவை முதலமைச்சராகவும், தோற்கடிக்கவும் செய்த பர்கூர் தொகுதி கண்ணோட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் பர்கூர் சட்டசபை தொகுதியும் ஒன்றாகும். இந்த தொகுதி கடந்த 1977-ம் ஆண்டு புதிய தொகுதியாக உருவானது.
அதிமுக சார்பில் ஏ. கிருஷ்ணன், திமுக சார்பில் தே. மதியழகன், ஐஜேகே சார்பில் அருண் கவுதம், நாம் தமிழர் சார்பில் கருணாகரன், அமமுக சார்பில் எஸ். கணேச குமார் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதிமுக வேட்பாளர் ஏ. கிருஷ்ணன் சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ.
2. அசையும் சொத்து- ரூ.
3. அசையா சொத்து- ரூ.
திமுக வேட்பாளர் தே. மதியழகன் சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ.
2. அசையும் சொத்து- ரூ.
3. அசையா சொத்து- ரூ.
பர்கூர் சட்டசபை தொகுதியில் முன்பு காவேரிப்பட்டணம் தொகுதியில் இருந்த வீரமலை, மருதேரி, குடிமேனஹள்ளி, விளங்கா முடி, ஜம்புகுட்டப்பட்டி, கீழ்க்குப்பம், பாரூர், பண்ணந்தூர், தாமோ தரஹள்ளி, புலியம்பட்டி, வாடமங்கலம், பெண்டரஹள்ளி மற்றும் கோட்டப்பட்டி கிராமங்கள், நாகோ ஜனஅள்ளி பேரூராட்சி ஆகியவை உள்ளன.

பர்கூர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,21,850 பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 1,24,403 பேர் உள்ளனர். மற்றவர்கள் 16 பேர் என மொத்தம் 2 லட்சத்து 46 ஆயிரத்து 269 வாக்காளர்கள் உள்ளனர்.
அதேபோல பர்கூர் தாலுகாவில் குருவிநாயனப் பள்ளி, ஒப்பதவாடி, சாலி நாயனப்பள்ளி, சின்னமட்டாரப்பள்ளி, வரட்டனப் பள்ளி, சின்ன திம்மிநாயனப்பள்ளி, பாலேபள்ளி, மாதேபள்ளி, மல்லப்பாடி, சிகரலப்பள்ளி, கொண்டப்ப நாயனபள்ளி, அச்சமங் கலம், பாலிநாயனப் பள்ளி, ஒரப்பம், சூளாமலை, செந்தாரப்பள்ளி, ஜெகதேவிபாளையம், பாசிநாயனப்பள்ளி, பட்டல பள்ளி, குட்டூர், புலிகுண்டா, ஐகுந்தம், கொத்தப்பள்ளி, மஜீத் கொல்லஹள்ளி, மோடிகுப்பம், பாலே குளி,

தளிஹள்ளி, மாரி செட்டிஹள்ளி, மோட்டூர், பென்னேஸ்வரமடம் மற்றும் தட்ரஹள்ளி கிராமங்கள், பர்கூர் ( பேரூராட்சி) ஆகியவையும், போச்சம்பள்ளி தாலுகாவில் மகாதேவகொல்லஹள்ளி, கடபசந்தம்பட்டி, காட்டகரம், வெப்பாலம்பட்டி, பெட்டப் பன்பட்டி, ஆலேரஹள்ளி, மாதி நாயக்கன்பட்டி, வடமலம்பட்டி, திம்மி நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகள் உள்ளன.
ஊத்தங்கரை சட்டசபை தொகுதியில் இருந்து கடந்த 1977-ம் ஆண்டு புதிய தொகுதியாக பர்கூர் சட்டசபை தொகுதி உதயமானது. மா சாகுபடியில் முன்னணி வகிக்கும் இந்த தொகுதியின் தலைநகரான பர்கூர் குட்டி சூரத் என்று அழைக்கப்படும் அளவிற்கு ஜவுளி தொழிலில் சிறந்து விளங்குகிறது.
இங்குள்ள ஜவுளி மார்க்கெட்டில் ஒரே இடத்தில் 2200-க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் உள்ளது. விவசாயமும், தொழிலும் நிறைந்து விளங்கும் இந்த தொகுதியாகும்.

கடந்த 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வரை இந்த தொகுதியில் பர்கூர் மற்றும் மத்தூர் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த கிராமப் பகுதிகள் இடம் பெற்றிருந்தன. ஆனால் 2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு மத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகள் அனைத்தும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஊத்தங்கரை (தனி) தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக நீக்கப்பட்ட காவேரிப்பட்டணம் தொகுதியில் உள்ள 20 ஊராட்சிகள் பர்கூர் சட்டசபை தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடந்துள்ள 11 சட்டசபை தேர்தல்களில் 9 முறை அ.தி.மு.கவும், 2 முறை தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு 1989-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. 2 அணியாக பிரிந்து போட்டியிட்டது. அப்போது பர்கூர் தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட அ.தி.மு.க. ஜெ. அணி வேட்பாளர் ராஜேந்திரன் வெற்றி பெற்றார்.
ஜெயலலிதா வெற்றிபெற்ற தொகுதி
இதைத் தொடர்ந்து 1991-ல் நடந்த தேர்தலில் தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா பர்கூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு முதல் முதலாக 5 வருடம் முழுமையாக முதல்- அமைச்சர் பொறுப்பில் இருந்தார்.

அதற்கு பிறகு 2001, 2011, 2016, நடந்த தேர்தல்களில் அ.தி.மு.க வெற்றி பெற்று இருந்தாலும், பல்வேறு காரணங்களால் ஓ.பன்னீர் செல்வத்தை முதல் அமைச்சர் பொறுப்பில் இருந்தார். முதல்- அமைச்சரானார்.
1996-ல் நடந்த சட்டசபை தேர்தலில் முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா இந்த தொகுதியில் தோல்வி அடைந்தார். அதன் மூலம் 1996-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிவில் ஒட்டு மொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்த தொகுதியாக பர்கூர் விளங்கியது.
கடந்த 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை, கடந்த 2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கரூர் தொகுதி எம்.பி.யானார். இதனால் தம்பித்துரை தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து கடந்த 2009-ம் ஆண்டு பர்கூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த இடைத்தேர்தல் தமிழகத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் திருப்பியது. அ.தி.மு.க. இந்த இடைத் தேர்தலில் போட்டியிடவில்லை. இதையடுத்து தி.மு.க., தே.மு.தி.க. கம்யூனிஸ்டு, பா.ஜனதா என நான்குமுனை போட்டியில் தி.மு.க. வேட்பாளர் நரசிம்மன் வெற்றி பெற்றார்.
பர்கூர் சட்டசபை தொகுதியில் வன்னியர்கள், வெள்ளாள கவுண்டர்கள், நாயுடு, யாதவர்கள், குரும்பர்கள், தாழ்த்தப்பட்டோர் ஆகியோர் பரவலாக வசித்து வருகிறார்கள். இந்த தொகுதியில் பெரும்பாலான முறை அ.தி.மு.க.வே வெற்றி பெற்று உள்ளது.
தொகுதி பிரச்சினை
பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுபாடு அதிகளவில் உள்ளது. இதனை தீர்க்க தென்பெண்ணை, படேதலா கால்வாய் திட்டங் களின் மூலம் பருகூர் பகுதிக்கு குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும் ஏற்பாடு செய்ய வேண்டும். அதைபோல் போச்சம்பள்ளி ஊராட்சியாக உள்ளதை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட வேண்டும். மேலும், பருகூர் பேரூராட்சிக்கு பெங்களுரி லிருந்தும் சென்னை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளதாலும், இங்கு பொரும்பாலும் மக்கள் வெளி மாவட்டம், வெளி மாநிலத்திலிருந்து வருவதால் பேருந்துகளுக்கு மிகவும் தட்டுபாடு ஏற்படுகிறது.
எனவே இங்கு புதியதாக அனைத்து வசதிகள் கூடிய அளவிற்கு புறநகர் பஸ் நிலையம் அமைக்க வேண்டும். மேலும் ரெயில் போக்குவரத்து திருப்பத்தூர் மாவட்ட ஜோலார்பேட்டை இருந்து பர்கூர் வழியாக மாவட்ட தலைநகர் கிருஷ்ணகிரிக்கு ஏற்பாடு செய்ய பொது மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:

1977 எச்.ஜி.ஆறுமுகம் (அ.தி.மு.க.)
1980 பி.என்.எஸ்.துரைசாமி (அ.தி.மு.க.)
1984 டி.எம்.வெங்கடாஜலம் (அ.தி.மு.க.)
1989 ராஜேந்திரன் (அ.தி.மு.க. ஜெ)
1991 ஜெ.ஜெயலலிதா (அ.தி.மு.க.)
1996 இ.ஜி. சுகவனம் (தி.மு.க.) 59,148
2001 மு.தம்பிதுரை (அ.தி.மு.க.)
2006 மு.தம்பிதுரை (அ.தி.மு.க.)
2009 இடைத்தேர்தல் கே.ஆர்.கே. நரசிம்மன் (தி.மு.க.)
2011 கே.இ. கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க.)
2016 சி.வி. ராஜேந்திரன் (அ.தி.மு.க.)
காவேரிப்பட்டணம் அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே உள்ள அரிக்கன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 42). விவசாயி. கடன் தொல்லை காரணமாக மனமுடைந்து காணப்பட்ட அவர் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கோவிந்தசாமி இறந்தார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இரண்டு முறை தொடர்ந்து வெற்றி பெற்று, தொகுதியை கையில் வைத்திருக்கும் அதிமுகவும்- திமுக கூட்டணியில் காங்கிரஸும் நேருக்குநேர் மோதும் ஊத்தங்கரை தொகுதி கண்ணோட்டம்
அதிமுக சார்பில் டி.எம். தமிழ்செல்வம், காங்கிரஸ் சார்பில் ஜே.எஸ். ஆறுமுகம், மக்கள் நீதி மய்யம் சார்பில் கே. முருகேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் த. இளங்கோவன், தேமுதிக சார்பிலா் பாக்கியராஜ் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதிமுக வேட்பாளர் டி.எம். தமிழ்செல்வம் சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 5,00,000
2. அசையும் சொத்து- ரூ. 24,96,040
3. அசையா சொத்து- ரூ. 15,00,000
காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எஸ். ஆறுமுகம் சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 16,00,000
2. அசையும் சொத்து- ரூ. 32,87,702
3. அசையா சொத்து- ரூ. 1,07,40,000
தமிழகத்தின் 72-வது சட்டமன்ற தொகுதியான ஊத்தங்கரை தொகுதி (தனி) உள்ளது. இத்தொகுதியில் ஊத்தங்கரை ஒன்றியத்தில் 34 ஊராட்சிகள், ஊத்தங்கரை பேரூராட்சி, மத்தூர் ஒன்றியத்தில் 24 ஊராட்சிகள், பர்கூர் ஒன்றியத்தில் 4 ஊராட்சிகள் என 62 ஊராட்சிகளும், ஒரு பேரூராட்சியும் அடங்கியுள்ளது.
ஊத்தங்கரை தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 19 ஆயிரத்து 20 பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 17 ஆயிரத்து 975 பேர் உள்ளனர். மற்றவர்கள் 56 பேர் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 51 பேர் உள்ளனர்.
இங்கு பெரும்பான்மை சமூகமாக தலித்கள் சுமார் 22 சதவீத மக்கள் வசிக்கின்றனர். அடுத்தபடியாக வன்னியர், வெள்ளாளக்கவுண்டர், முஸ்லீம், செட்டியார், முதலியார், அருந்ததியர் என பரவலாக அனைத்து சமுதாய மக்களும் வசித்து வருகின்றனர்.
இந்த தொகுதியில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் மட்டுமே உள்ளதால் அதிகளவில் கூலி வேலை மட்டுமே இருக்கிறது.
அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தனியார் கல்லூரிகள் சில இயங்கி வருவதால் குறிப்பிடத்தக்க வகையில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வருகிறது.

ஊத்தங்கரை பேரூராட்சி மற்றும் கொண்டம்பட்டி, மூன்றம்பட்டி, மிட்டப்பள்ளி, ரெட்டிப்பட்டி, சிங்காரப் பேட்டை ஆகிய ஊராட்சிகளுக்கு பாம்பாறு அணையில் தேங்கும் தண்ணீர் மூலம் குடிநீர் பிரச்சினை தீர்ந்து வருவதோடு 4000-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதனால் விவசாயம் ஓரளவிற்கு நடைபெற்று வருகிறது. மேலும் பாம்பாறு அணைக்கு வரும் வாய்க்கால்களையும், ஆக்கரமிப்புகளையும் அகற்றினால் மேலும் பலநூறு ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
மேலும் நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து ஊத்தங்கரை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் வளர்ச்சி அடையாமல் உள்ளதால் மக்களிடையே ஒருவித எதிர்பார்ப்பு வரும் தேர்தலில் மக்களிடையே இருப்பது தெளிவாக தெரிகிறது.
மேலும் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் ஒரு அரசு கலைக் கல்லூரி கோட்டாட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், மகளிர் காவல் நிலையம், அனுமந்தீர்த்தம் ஆஞ்சநேயர் கோயில், எட்டிப்பட்டி தூவல் நீர்வீழ்ச்சி, அங்குத்தி சுணை ஆகியவற்றை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இதுதவிர படித்த இளைஞர்களுக்குவேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொழிற்சாலைகள் வர வேண்டும் என்பதும் இத்தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

ஆரம்பத்தில் ஊத்தங்கரை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் சட்டசபை தொகுதியின் கீழ் இருந்தது. அப்போது முதல் முறையாக 1952-ம் ஆண்டு இந்த தொகுதி தேர்தலை சந்தித்தது.கடந்த 1971-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பின் கீழ் அரூர் சட்டசபை தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு ஊத்தங்கரை தொகுதி புதிதாக உதயமானது. அதன்பிறகு 1977-ம் ஆண்டு ஊத்தங்கரை தொகுதி நீக்கப்பட்டு புதிதாக பர்கூர் சட்டசபை தொகுதி உருவாக்கப்பட்டது. அப்போது ஊத்தங்கரை சட்டசபை தொகுதியில் இருந்த பகுதிகள் 2 ஆக பிரிக்கப்பட்டு ஒரு பகுதி பர்கூர் சட்டசபை தொகுதியிலும், மற்றொரு பகுதி அரூர் (தனி) தொகுதியிலும் சேர்க்கப்பட்டது. 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஊத்தங்கரை (தனி) தொகுதி கடந்த 2011-ம் ஆண்டு உதயமானது.
கடந்த 2011-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பக்கு பின் மீண்டும் ஊத்தங்கரை (தனி) தொகுதி உருவாக்கப்பட்டு முதல் சட்டமன்ற உறுப்பினராக மனோரஞ்சிதம் நாகராஜன் கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வருகிறார். ஊத்தங்கரை தொகுதி கொம்மபட்டு கிராமத்தை சேர்ந்த கே.இ.கிருஷ்ணமூர்த்தி பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
2011- மனோ ரஞ்சிதம் நாகராஜ்- அ..தி.மு.க.
2016- மனோரஞ்சிதம் நாகராஜ்- அ.தி.மு.க.






