என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தொழிலாளியிடம் கத்திமுனையில் பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது

    தொழிலாளியிடம் கத்திமுனையில் பணம் பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூளகிரி:

    திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியை சேர்ந்தவர் பிரபாகரன் (30). இவர் சூளகிரியில் ஒரு தனியார் நிறுவன கேன்டீனில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு, அவர் சூளகிரியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையம் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 3 பேர், பிரபாகரனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர்.

    இதனால் அவர் சத்தம் போட்டதால் அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அவர்களில் 2 பேரை மடக்கி சூளகிரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ஓசூர் அருகே பெருமாபள்ளியை சேர்ந்த பாபு (24) மற்றும் நவீன் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய பி.முதுகானப்பள்ளியை சேர்ந்த நிதின் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×