search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "krishnagiri collector"

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த கருத்தரங்கம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடை பெறுகிறது.
    கிருஷ்ணகிரி:

    இது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்து, பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக உருவாக்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய மறு சுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் உற்பத்தி, இருப்பு, பயன்பாடு மற்றும் ஒருமுறை பயன்படுத்தி வீசும் பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை தடை செய்து, பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி அரசு துறைகள், அரசு சாரா துறைகள், அனைத்து தொழிற்சாலைகளின் சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஓட்டல் உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், ஓசூர் மக்கள் சங்கம், ரோட்டரி சங்கம், அரிமா சங்கம் மற்றும் வணிக சங்கங்களின் பங்கேற்புடன் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த கருத்தரங்கம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடைபெறவுள்ளது.

    அதன்படி இன்று (திங்கட்கிழமை) காலை ஓசூர் நகராட்சி அலுவலகத்திலும், மாலை 3 மணிக்கு தேன்கனிக்கோட்டையிலும் நடைபெறுகிறது. இதேபோல் வருகிற 26-ந் தேதி காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி தமிழ்நாடு ஓட்டலிலும், மாலை 3 மணிக்கு ஊத்தங்கரை ஸ்ரீவாரி திருமண மண்டபத்திலும் இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது.

    இந்த கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடலில் அனைத்து அலுவலர்கள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரியை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், தாளாளர்கள் கலந்துகொண்டு, தங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×