என் மலர்

  செய்திகள்

  கிருஷ்ணகிரி தொகுதி
  X
  கிருஷ்ணகிரி தொகுதி

  கிருஷ்ணகிரி தொகுதி கண்ணோட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திமுக சார்பில் தற்போது எம்எல்ஏ-வாக இருக்கும் டி. செங்குட்டுவன், அதிமுக சார்பில் கே. அசோக்குமார் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகின்றன.
  அதிமுக சார்பில் கே. அசோக்குமார், திமுக சார்பில் டி. செங்குட்டுவன், மக்கள் நீதுி மய்யம் சார்பில் ஆர்.கே. ரவிசங்கர், நாம் தமிழர் கட்சி சார்பில் நிரந்தரி, அமமுக கூட்டணியில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி சார்பில் அமினுல்லா நிறுத்தப்பட்டுள்ளனர்.

  அதிமுக வேட்பாளர் கே. அசோக்குமார் சொத்து மதிப்பு

  1. கையிருப்பு- ரூ. 6,20,000
  2. அசையும் சொத்து- ரூ. 36,12,824
  3. அசையா சொத்து- ரூ. ஏதுமில்லை

  திமுக வேட்பாளர் டி. செங்குட்டுவன் சொத்து மதிப்பு

  1. கையிருப்பு- ரூ. 1,50,000
  2. அசையும் சொத்து- ரூ. 94,85,983
  3. அசையா சொத்து- ரூ. 27,50,000

  மாங்கனிக்கு பெயர் பெற்ற கிருஷ்ணகிரி பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியது. ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டத்தில் இருந்த கிருஷ்ணகிரி மாவட்டம், கடந்த 2004-ம் ஆண்டு உதயமானது. ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கிருஷ்ணகிரி தொகுதி பல்வேறு சிறப்புகளை பெற்றது.

  கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில், காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில், அவதானப்பட்டி மாரியம்மன் கோவில், காவேரிப்பட்டணம் அங்காளம்மன் கோவில், பெரிய மாரியம்மன், கணவாய்ப்பட்டி பெருமாள், கோவில்கள் பிரசித்தி பெற்றவை. அதே போல கிருஷ்ணகிரி ஆர்.சி.பாத்திமா தேவாலயம், சுங்கச்சாவடி தர்கா ஆகியவையும் பிரசித்தி பெற்றவையாக விளங்குகின்றன.

  கிருஷ்ணகிரி தொகுதி

  கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், பழைய, புதிய பஸ் நிலையங்கள் உள்ளிட்டவை இந்த தொகுதியில் அமைந்துள்ளன.

  கிருஷ்ணகிரி தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 65 ஆயிரத்து 238 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 80 பேர், பெண்கள் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 121 பேர், மூன்றாம் பாலினத்தினர் 37 பேர் உள்ளனர்.

  கிருஷ்ணகிரி தொகுதி

  கிருஷ்ணகிரி தொகுதியில் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை, அவதானப்பட்டி சிறுவர் பூங்கா, அவதானப்பட்டி படகு இல்லம், உள்ளிட்டவை சுற்றுலா தலங்களாக விளங்குகின்றன. கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் கிருஷ்ணகிரி நகராட்சி, காவேரிப்பட்டணம் பேரூராட்சி, 40 ஊராட்சிகள் இந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வருகின்றன. 

  இந்த தொகுதியில் வன்னியர் சமுதாயத்தினர், தாழ்த்தப்பட்ட மக்கள், செட்டியார் உள்ளிட்ட சமுதாய மக்கள் அதிக அளவில் உள்ளனர். அதேபோல முஸ்லீம்களும் கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணகிரி நகரில் கணிசகமாக உள்ளனர். இவர்களே தொகுதியில் வெற்றி - தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளார்கள்.

  கிருஷ்ணகிரி தொகுதி

  இந்த தொகுதியில் மாம்பழ ஏற்றுமதி முக்கிய தொழிலாக உள்ளது. இதைத்தவிர சிறிய தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் அமைந்துள்ளன. குறிப்பாக இந்த தொகுதியில் உள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் விவசாயத்தை நம்பியே உள்ளனர்.

  இதுவரை நடந்து முடிந்த தேர்தலில் அ.தி.மு.க. 6 முறையும், தி.மு.க. 5 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக அ.தி.மு.க.வை சேர்ந்த கே.ஆர். சின்னராசு 1977, 1980, 1984 என 3 முறை எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  கிருஷ்ணகிரி தொகுதி

  இந்த தொகுதியில் எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ அவர்கள்தான் மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பார்கள் என்பது தொடக்கம் முதல் இருந்து வந்த சென்டிமெண்ட். நீண்ட காலமாக இருந்த அந்த சென்டிமெண்ட் 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் உடைந்தது.

  கோரிக்கைகள்

  கிருஷ்ணகிரி தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான எண்ணேகொள்புதூர் திட்டத்திற்கு தற்போதுதான் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதை விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என்பது இந்த தொகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் கிருஷ்ணகிரி நகர மக்கள் கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் செல்லும் வழியில் சுங்கசாவடி அமைந்துள்ளது. அதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. அதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

  கிருஷ்ணகிரி வழியாக ஓசூரில் இருந்து ஜோலார்பேட்டைக்கு ரெயில்பாதை கொண்டு வர வேண்டும் என்பது இந்த தொகுதி மக்களின் 75 ஆண்டு கால கனவு. அந்த கனவு திட்டத்தை அரசியல் கட்சியினர் நிறைவேற்றுகிறோம் என்று ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதிகளாக கூறுகிறார்கள். பின்னர் அந்த வாக்குறுதி கானல் நீராக போய் விடுகிறது. எனவே கிருஷ்ணகிரி வழியாக ரெயில் பாதை திட்டத்தை கொண்டு வர வேண்டும்.

  கிருஷ்ணகிரி தொகுதி

  கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை சாலை சீரமைக்க வேண்டும். மழைக்காலங்களில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து வீணாக சென்று கடலில் கலக்கும் தண்ணீரை, இங்குள்ள ஏரிகளுக்கு நிரப்பிட வேண்டும். ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் தொகுதியில் அனைத்து பகுதிகளுக்கும் முழுமையாக வழங்கிட வேண்டும் என்பது இந்த தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  கிருஷ்ணகிரி தொகுதி


  1967 பி.கே.பி.எம்.முனுசாமி கவுண்டர் (காங்கிரஸ்) 
  1971 சி.மன்னியப்பன் (தி.மு.க.) 
  1977 கே.ஆர்.சின்னராசு (அ.தி.மு.க) 
  1980 கே.ஆர்.சின்னராசு (அ.தி.மு.க.) 
  1984 கே.ஆர்.சின்னராசு (அ.தி.மு.க.) 
  1989 காஞ்சனா கமலநாதன் (தி.மு.க.) 
  1991 முனிவெங்கடப்பன் (அ.தி.மு.க.) 
  1996 காஞ்சனா கமலநாதன் (தி.மு.க.) 
  2001 கோவிந்தராஜ் (அ.தி.மு.க.) 
  2006 செங்குட்டுவன் (தி.மு.க.) 
  2011 கே.பி.முனுசாமி (அ.தி.மு.க.) 
  2016 செங்குட்டுவன் (தி.மு.க.)
  Next Story
  ×