என் மலர்tooltip icon

    கரூர்

    • குளித்தலை அருகே, மணல் கடத் தலில் ஈடுபட்ட டிப்பர் டிராக்டர் டிரைவர் கைது செய்யப்பட்டார்
    • லாலாபேட்டை போலீசார் டிப்பர் டிராக்டரை பறிமுதல் செய்தனர்

    கரூர்,

    குளித்தலை அருகே, மணல் கடத் தலில் ஈடுபட்ட டிப்பர் டிராக்டர் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

    குளித்தலை அடுத்த, பஞ்சப்பட்டி வி.ஏ.ஓ., லிங்கேஸ்வரன் பஞ்சப்பட்டி பழைய ஒயின்ஷாப் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண் டிருந்தார். அப்போது வேகமாக வந்த டிப்பர் டிராக்டரை நிறுத்தி, சோதனை செய்தார். அப்போது அரசு அனுமதியில்லாமல், ஒரு யூனிட் வாரி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இது குறித்து லாலாபேட்டை போலீசில் கொடுத்த புகார்படி, போலீசார் டிப்பர் டிராக்டரை பறிமுதல் செய்து, மேல பஞ்சப்பட்டியை சேர்ந்த டிரைவர் கருப்பையா, (40) மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

    • கரூர் தேசிய நெடுஞ்சாலையில்வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
    • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கார்,பைக் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட செம்படை ரவுண்டானா ,மன்மங்கலம் மற்றும் வேலாயுதம்பாளையம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட எம்.குமாரசாமி கல்லூரி, மூலிமங்கலம் பிரிவு அருகே உள்ள தேவாலயம் ஆகிய பகுதிகளில். கடந்த 2 மாதங்களாக இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் தனியாக இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்களிடம் தங்க சங்கிலிகளை பறித்து கொள்ளையடித்து வந்தனர். அவர்களை பிடிக்க கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மற்றும் கரூர் ஊரக உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை உத்தரவின் பேரில் வேலாயுதம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயராமன் தலைமையில் காவல் நிலைய உதவிஆய்வாளர் சரவணன் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது அந்த பகுதியில் வந்த கொண்டிருந்தவர்களை விசாரணை நடத்தியதில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த மனோகரன் மகன் மேகநாதன் (வயது 18), முனியசாமி மகன் முருகேஷ்(19) மூர்த்தி மகன் ஆகாஷ்( 24 ),முருகன் மகன் யோகேஷ் (20), முஜிபூர் ரஹ்மான் மகன் ஷேக் அப்துல்லா( 21), முனியசாமி மகன் சாந்தகுமார்(19) ஈஸ்வரன் மகன் தினேஷ்( 19) ஆகிய 7 பேர் தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன் அடிப்படையில்7பேர்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 7 1/2 பவுன் தங்க நகைகளை மீட்கபட்டு வழிப்பறி கொள்ளைக்கு ஈடுபடுத்திய ஸ்கார்பியோ கார் மற்றும் யமாஹா பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து குற்றவாளிகள் ஏழு பேரையும் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
    • கர்ப்பிணியான சிறுமிக்கு கரு கலைந்ததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

    குளித்தலை,

    குளித்தலை அருகே போத்துராவு த்தன்பட்டியைச் சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி கருப்பையா (29) கிருஷ்ணராயபுரம், கருப்பூர் பகுதியைச் சேர்ந்த (10 ம் வகுப்பு படித்து இடையில் நின்றவர், ) உறவினர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று சிறுமியினை குழந்தை திருமணம் செய்து உள்ளார். போத்தரவுத்தன்பட்டியில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்த அவர் வீட்டில் சிறுமியை கட்டாயப்படுத்தி பலமுறை தனிமையில் இருந்ததாகவும், இதனால் கர்ப்பிணியாக இருந்துள்ளார், சில தினங்களுக்கு முன்பாக சிறுமிக்கு அதிக வயிற்று வலி வரவே கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர், மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது ஏற்கனவே கரு கலைந்து விட்டதாகவும் கூறி தகவலை மருத்துவமனை அருகில் உள்ள புறக்காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர், தகவல் அறிந்த குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகாலட்சுமி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சென்று சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றும், குழந்தை திருமணம் செய்ததாக கிருஷ்ணராயபுரம் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் சுகுணா கொடுத்த புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து கருப்பையாவை போக்சோ சட்டம் மற்றும் குழந்தை திருமண சட்டத்தில் கைது செய்தார்,இவரை கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்ததால், அண்ணனை அரிவாளால் தம்பி வெட்டியுள்ளார்
    • தோகைமலை போலீசார் தம்பி மீது வழக்குப்பதிந்து, கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர்,

    தோகைமலை அருகே உள்ள கொசூர் ஊராட்சி குண்டன் பூசாரியூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன்கள் வெள்ளைச்சாமி (வயது 50). முருகேசன் (45). விவசாய கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களின் தாய் கைலாசம் இளையமகன் முருகேசன் பராமரிப்பில் இருந்து வருகிறார்.தற்சமயம் கைலாசம் வேப்பம்பழங்களை சேகரித்து விற்பனை செய்து அந்த பணத்தை முருகேசனிடம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் குண்டன்பூசாரியூரில் உள்ள முருகேசன் வீட்டில் கைலாசம் இருந்தார். அப்போது அங்கு வந்த வெள்ளைச்சாமி, தனது தாய் கைலாசத்திடம் வேப்பம்பழம் விற்பனை செய்து வைத்து உள்ள பணத்தை கேட்டு உள்ளார். அப்போது அங்கிருந்த முருகேசன் மற்றும் அவரது மனைவி நல்லங்காள் ஆகிேயார் வெள்ளைச்சாமியிடம் தாய் கைலாசத்தை பராமரிப்பதும் இல்லை, உணவும் கொடுப்பதில்லை எப்படி பணம் கேட்கலாம் என்று கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த முருகேசன், நல்லங்காள் ஆகியோர் சேர்ந்து வெள்ளைச்சாமியை தகாதவார்த்தையால் திட்டி, அரிவாளால் வெட்டினர். இதில் வெள்ளைச்சாமி காயம் அடைந்தார். இதையடுத்து அவர் மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார்.பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து வெள்ளைச்சாமி கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் முருகேசன், நல்லங்காள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் முருகேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல் வெள்ளைச்சாமியின் மனைவி தாக்கியதால் காயம் அடைந்ததாக கூறி நல்லங்காள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • கரூர் குறுவட்ட அளவிலான நடைபெற்ற தடகளப் போட்டிகளில் புஞ்சை தோட்டக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை
    • சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள்,அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினார்கள்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் குறுவட்ட அளவிலான நடைபெற்ற தடகளப் போட்டிகளில் புஞ்சை தோட்டக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு 17 வயதிற்கு உட்பட்ட கோலூன்றித் தாண்டுதல் பிரிவில் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் அருள் முருகன் 2-ம் இடமும் , நிஷ்வன் 3-ம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர் . மேலும் முதல் இடம் பெற்றுள்ள புகழூர்அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் விஷ்ணுவும் கடந்த ஆண்டு புஞ்சை தோட்டக்குறிச்சி உயர்நிலைப் பள்ளியில் 10 -ம் வகுப்பு முடித்த மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. கோலூன்றி தாண்டுதல் பிரிவில் சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள்,அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினார்கள்.

    • வேலாயுதம்பாளையம் பகுதிகளில் சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
    • வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு சிறப்பு அலங்காரம்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் அருகே நன்செய் புகளூரில் உள்ள பாகவல்லிஅம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவிலில் ஆவணி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், கரும்புச்சாறு, விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் புன்னம் சத்திரம் அருகே புன்னம் பகுதியில் உள்ள புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் உள்ள நந்தி பெருமான் ,திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் கோவிலில் உள்ள நந்தி பெருமான் ,குந்தாணிபாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோவிலில் உள்ள நந்தி பெருமான் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் சிவன் கோவில்களில் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது .

    • வேலாயுதம்பாளையம் பகுதிகளில் ரூ.3 கோடியே 17 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி
    • எம்.எல்.ஏ. இளங்கோ தொடங்கி வைத்தார்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ.3 கோடியே 17 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைப்பதற்கான பணிகளை இளங்கோ எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.வேட்டமங்கலம் ஊராட்சியில் ஓலப்பாளையம் முதல் அதியமான்கோட்டை வழியாக மூலிமங்கலம் பிரிவு வரை ரூ. 63 லட்சத்து 18ஆயிரம் மதிப்பிலும், ஓகேஆர் நகர் முதல் நல்லிக்கோவில் வரை ரூ.12லட்சத்து 84ஆயிரம் மதிப்பிலும், சேமங்கியில் இருந்து காமராஜ் நகர் வழியாக ஓகேஆர் நகர் வரை ரூ. ஒரு கோடியே ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலும், குளத்துப்பாளையத்தில் இருந்து ஒரம்புபாளையம் வழியாக கொங்கு நகர் வரை ரூ.16லட்சத்து 87 ஆயிரம் மதிப்பிலும், எம்ஜிஆர் நகர் முதல் செட்டிதோட்டம் வழியாக கவுண்டன்புதூர் வரை ரூ.49 லட்சத்து 76ஆயிரம் மதிப்பிலும், செல்வநகரில் ரூ.23லட்சத்து 64ஆயிரம் மதிப்பிலும், கோம்புப்பாளையம் ஊராட்சி முத்தனூரில் ரூ.9 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலும், முனிநாதபுரத்தில் ரூ.5லட்சத்து64ஆயிரம் மதிப்பிலும், கோம்புப்பாளையத்தில் ரூ.14 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பிலும்,என்.புகளூர் ஊராட்சி தவிட்டுப்பாளையம் முதல் கட்டிபாளையம் வரை ரூ. 20 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலும் என மொத்தம் 3 கோடியே 17 லட்சத்து 83ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது . இதில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ கலந்து கொண்டு தலைமை வகித்து பூமி பூஜை செய்து பணிகளைத் தொடங்கி வைத்தார். பூமி பூஜை விழாவில் கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, ஊராட்சித் மன்ற தலைவர்கள் கோம்புபாளையம் பசுபதி, என். புகழூர் மதிவாணன், வேட்டமங்கலம் ராமச்சந்திரன், திருக்காடுதுறை அசோக்குமார், ஊராட்சி செயலர்கள் வேட்டமங்கலம் ரகுபதி, கோம்புப்பாளையம் பாலு,என்.புகளூர் இந்து மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புன்னம் சத்திரம் அருகே சேவல் சண்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது
    • 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து தப்பியோடிய 4 பேரை வேலாயுதம்பாளையம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே அதியமான் கோட்டை பகுதியில் உள்ள ஒரு வாய்க்கால் மேட்டில் சிலர் பணம் வைத்து சேவல் சண்டை நடத்திக் கொண்டிருப்பதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது .தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்குள்ள வாய்க்கால் மேட்டில் சேவல் காலில் கத்தியை கட்டி பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அவர்களை சுற்றி வளைத்த போது மூன்று பேர் சிக்கிக்கொண்டனர். மற்ற 4 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.அவர்களிடமிருந்து சண்டைக்கு பயன்படுத்திய 2சேவல் கோழிகள்,பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி கைது செய்தனர். 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து தப்பியோடிய 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • நீட் தேர்வை கொண்டு வந்தது இந்தியா கூட்டணிதான்.
    • அ.தி.மு.க. அமைச்சர்கள் 6 பேர் மீது சி.பி.ஐ. ஊழல் வழக்கு உள்ளது.

    கரூர்:

    கரூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தி.மு.க. அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிடுகிறார். நேர்மையாளர் என்றால் அனைத்தையும் பேச வேண்டும். கோடநாடு வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்ற கருத்தை வரவேற்கிறேன்.

    தேர்தல் பிரசாரத்தின்போது 2 மாதத்தில் கோடநாடு கொலை வழக்கில் விசாரணை செய்து நீதியை கொண்டு வருவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் தற்போது 2½ ஆண்டுகள் ஆகியுள்ளது. இதேபோல் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்து 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    நீட் தேர்வை கொண்டு வந்தது இந்தியா கூட்டணிதான். நீட் தேர்வு வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு வென்றவர் நளினி சிதம்பரம். அந்த கட்சியை ஏன் கூட்டணியில் வைத்து உள்ளீர்கள். கச்சத்தீவை கொடுக்கும்போது முதலமைச்சர் யார்? தொடர்ந்து 18 ஆண்டுகள் இந்திய அமைச்சரவையில் இருந்தது தி.மு.க. தான். தேசிய கட்சிகளான பா.ஜ.க.வும், காங்கிரசும், கர்நாடகா என வரும்போது இருவரும் மாநில கட்சியாக மாறிவிடுகிறார்கள்.

    தமிழகத்திற்கு உரிய நதிநீரை பங்கீடு செய்யாவிட்டால் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு தொகுதி பங்கீடு இல்லை என முதலமைச்சர் கூறுவாரா? ஆனால் ஜெயலலிதாவாக இருந்தால் கர்நாடகாவில் தண்ணீர் தரவில்லையென்றால் காங்கிரசுடன் கூட்டணி வைக்கமாட்டார்.

    கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்றினால் தி.மு.க.விற்கு ஆதரவு அளிக்க தயாராக உள்ளேன். முஸ்லிம் சிறை கைதிகளை விடுதலை செய்யுங்கள். உங்களுக்கு ஆதரவு அளிக்கிறேன். 40 தொகுதிகளிலும் நான் விலகிக் கொள்கிறேன்.

    அமைச்சர் செந்தில்பாலாஜி சிறையில் இருப்பதில் எனக்கு தனிப்பட்ட முறையில் வருத்தம் இருக்கிறது.

    அ.தி.மு.க. அமைச்சர்கள் 6 பேர் மீது சி.பி.ஐ. ஊழல் வழக்கு உள்ளது. ஏன் அவர்கள் மீது நடவடிக்கை இல்லை. ஏனென்றால் அவர்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தோகைமலை அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்
    • விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்

    கரூர்,

    கரூர் மாவட்டம் தோகைமலை அருகே புத்தூர் ஊராட்சி, வேங்கடத்தாம்பட்டியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 70). இவர் தனது வீட்டின் பின்புறம் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார். இது குறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார், அங்கு சென்று சோதனை செய்தனர். இதில், பொன்னுச்சாமி விற்பனைக் பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

    • சிறுமிக்கு பாலியல் தொல்லை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்
    • பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்

    கரூர்,

    கரூர் ரத்தினம் சாலை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சூர்யா காந்தி, (வயது 32) இவர் அதே பகு தியை சேர்ந்த, 13 வயது பள்ளி எட்டாம் வகுப்பு பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து புகார்படி, கரூர் மகளிர் போலீசார், சூர்யா காந்தியை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாயனுார் கதவணை அருகே மீன் விற்பனை மும்முரமாக நடைபெற்றது
    • ஜிலேபி கிலோ 130 ரூபாய், கெண்டை 110 விற்பனை செய்யப்பட்டது.

    கரூர்,

    கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனுாரில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில் காவிரிநீர் சேமிக்கப்படுகிறது. சேமிக்கப்படும் நீரில் மீன்கள் வளர்க்கப்படுகிறது.இந்த மீன்களை உள்ளூர் மீனவர்கள்பிடித்துவந்து, கதவணை அருகே செல்லும் கட்டளை வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, ஜிலேபி, கெண்டை மீன்கள் அதிகளவில் கிடைத்து வருகிறது. இதில் ஜிலேபி மீன் கிலோ, 130 ரூபாய், கெண்டை மீன் கிலோ, 110 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.கரூர், புலியூர், சேங்கல், மணவாசி,திருக்காம்புலியூர், லாலாப்பேட்டைஆகிய பகுதி மக்கள் மீன்களை வாங்கி சென்றனர்.

    ×