என் மலர்tooltip icon

    கரூர்

    • தடகள போட்டிகள் நடைபெற்றது
    • அரவக்குறிச்சி குறுவட்ட அளவில் நடந்தது

    கரூர்:

    கரூர் அரவக்குறிச்சி குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் நேற்று கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயலட்சுமி போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த விளையாட்டு போட்டிகளில் அரவக்குறிச்சி குறுவட்டத்தை சேர்ந்த 30 பள்ளிகளை சேர்ந்த 450 மாணவர்களும், 350 மாணவிகளும் கலந்து கொண்டனர். இதில் நேற்று நடைபெற்ற மாணவர்களுக்கான தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 600 மீட்டர் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தொடர் ஓட்டம், குண்டு எறிதல் உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. மாணவிகளுக்கான போட்டிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் முதல் 2 இடங்களில் வெற்றிபெறும் மாணவர்கள் மாவட்ட வருவாய் அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர், குறுவட்ட செயலாளர் மதுரைவீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பம் சரிபார்க்கும் பணி நடந்தது.
    • கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கரூர்:

    கரூர் அரவக்குறிச்சி, கடவூர் ஆகிய வட்டத்திற்குட்பட்ட தடாகோவில், புங்கம்பாடி மேல்பாகம், காமராஜர் நகர், பள்ளப்பட்டி அப்பீஸ் நகர், ஷாநகர், சீத்தப்பட்டி, தரகம்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்களை களப்பணியாளர்கள் வீடு வீடாக நேரில் சென்று சரிபார்க்கும் பணியினை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    களப்பணியாளர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று ஆதார் எண், மின் கட்டணம், குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் விவரம், சொந்தமாக வைத்திருக்கும் வாகனங்களின் விவரம் ,மேலும் ஆண்டு வருமானம் தொடர்பான விவரங்களை சேகரித்து அதற்கான தனிச்செயலியில் பதிவேற்றம் செய்யப்படும் இப்பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை பார்வையிட்டு களப்பணியாளர்களிடம் தங்களுக்கு ஒரு நாளைக்கு எத்தனை மனுக்களை விசாரிக்க வேண்டும் என்ற பட்டியலை நாள்தோறும் தேர்வு செய்து பணிகளை விரைவாகவும், சரியான விவரங்களையும் செயலியில் பதிவேற்றம் செய்ய களப்பணியாளர்களுக்கு ஆலோசனைகளை கலெக்டர் வழங்கினார்.

    • வழக்கறிஞர் சங்கத்தினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
    • நீதிமன்ற வளாகத்தின் முன்பு நடைபெற்றது

    கரூர்

    மத்திய அரசு இந்திய குற்றவியல் சட்டங்களில் மாற்றங்களை அறிவிக்கும் புதிய மசோதாவை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த மசோதாவில் குற்றவியல் சட்டங்களின் 3 முக்கிய பிரிவான இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை சட்டம், இந்திய சாட்சியை சட்டம் ஆகியவற்றை சமஸ்கிருதத்தில் மாற்றியும், சட்டத்தில் உள்ள சரத்துகளில் பல்வேறு மக்கள் விரோத சட்டவிரோத சரத்துகளும் புதிதாக திணிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசின் இந்த அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான புதிய மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் சங்கங்களின் கருத்துகளை கேட்காமல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சட்டத்தினை உடனே திரும்ப பெற கோரியும் நேற்று கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன்பு கரூர் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. இதற்கு கரூர் வழக்கறிஞர் சங்க துணை தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர் பார்த்திபன், செயலாளர் தமிழ்வாணன், நன்மாறன் உள்பட வழக்கறிஞர்கள் பலர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.

    • வாலிபர் தூக்குப்போட்டு தற்ெகாலை ெசய்து ெகாண்டனர்.
    • மது குடிக்க பணம் தராததால்

    கரூர் :

    கரூர் திருமாநிலையூரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 37). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று அய்யப்பன் தனது மனைவியிடம் குடிப்பதற்காக பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது.

    இதனால் மனமுடைந்த அய்யப்பன் வீட்டில் தூக்கில் தொங்கினார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அய்யப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெயில்வே போலீஸ்காரர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
    • மருத்துவ விடுப்பில் இருந்தார்

    கரூர் :

    சேலம் மாவட்டம், சங்ககிரியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 54). இவர் கரூர் ெரயில்வேயில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இதனால் சுப்பிரமணியன் கரூர் ரெயில்வே காலனியில் உள்ள வீட்டில் தங்கி இருந்து பணிக்கு சென்று வந்தார். இந்நிலையில் கடந்த 6 மாதமாக சுப்பிரமணியன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ விடுப்பில் வீட்டில் இருந்து வந்தார். சுப்பிரமணியன் கரூர் அண்ணா வளைவு அருகே இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சுப்பிரமணியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து சுப்பிரமணியன் எப்படி இறந்தார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ விடுப்பில் இருந்த ரெயில்வே போலீஸ்காரர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கரூரில் பல்வேறு பகுதிகளில் கல்விக் கடன் முகாம் நடைபெற உள்ளது
    • கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தகவல்

    கரூர்,

    கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்ட அறிக்கையில், கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பில் கல்விக் கடன் முகாம் நடக்கிறது. இதில், கரூர் மாநகராட்சி, கரூர், தாந்தோணி ஊராட்சி ஒன்றியங்கள், டவுன் பஞ்சாயத்துகளில் வசிக்கும் மாணவர்களுக்கு வரும், 2 அன்று செங்குந்தபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் நடைபெறுகிறது. அரவக்குறிச்சி, க.பரமத்தி ஊராட்சி ஒன்றியங்களில் நடக்கிறது.டவுன் பஞ்சாயத்துகளில் வசிக்கும் மாணவர்களுக்கு 4 அன்று அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடக்கிறது.

    கடவூர் மற்றும் தோகைமலை ஊராட்சி ஒன்றியங்கள், டவுன் பஞ்சாயத்துகளில் வசிக்கும் மாணவர்களுக்கு வரும், 5 அன்று தோகைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடக்கிறது.

    குளித்தலை நகராட்சி, குளித் தலை, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியங்கள், டவுன் பஞ்சாயத் துகளில் வரும், 7ல் குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூறப்பட்டுள்ளது.இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு மாணவ, மாணவிகள் கல்விக்கடன் பெற விண் கல்விக்கடன் பெற ஆலோசனை வழங்கப் படும். மேலும், www.vidyalakshmi. co.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்த விண்ணப்ப நகல் உள்பட உரிய சான்றுகளுடன் வர வேண்டும். விபரங்களுக்கு, மாவட்ட முன்னோடி வங்கி அலுவலகத்தை நேரிலோ அல்லது 04324234815, 94426 13165 என்ற மொபைல் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொழில்நுட்ப எழுச்சி இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்
    • கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி விழாவில் கலந்து கொண்ட பின்னர் பேட்டி

    வேலாயுதம்பாளையம்

    கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி துவக்க விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரியின் தலைவர் ம.குமாரசாமி தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். கல்லூரியின் செயலாளர் ராமகிருஷ்ணன், செயல் இயக்குனர் குப்புசாமி மற்றும் கல்லூரியின் முதல்வர்முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கல்லூரியின் மாணவர் சேர்க்கை குழும தலைவர்சுந்தரராஜூ வரவேற்றார். சிறப்பு விருந்தினராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், கூறும்போது,

    நிலவில் நடக்கும் ஆராய்ச்சிகளுக்கு இந்தியாவிற்கான தனி முத்திரை கொடுத்ததை தாண்டி, இந்தியாவும் அடுத்தக்கட்ட பணிகளுக்கான ஒரு சிறப்பான இடத்தை கொடுக்கும்.

    நிலவு சார்ந்த ஆய்வுகளில் வெப்பமயமாதலுக்கு பதிலாக நிலவில் இருந்து சில பொருட்கள் கொண்டு வரமுடியும் என நினைக்கிறேன். இதனால் அடுத்துவரும் காலக்கட்டத்தில் வெப்பமயமாதல் இல்லாத ஒரு எரிபொருளை உருவாக்குவதில் இந்தியா முதலிடம் வகிப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். அமெரிக்காவில் ஏற்பட்டது போன்ற ஒரு அறிவியல் தொழில்நுட்ப எழுச்சி இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ளது. . மனிதனின் அடுத்தக்கட்ட விண்வெளி ஆராய்ச்சிக்கும், பூமிக்கும் ஒருபாலமாக நிலவு அமையும். அதில் முன்னணி இடத்தில் இந்தியா இருப்பதற்கான வாய்ப்பை சந்திராயன்-3 காட்டி இருக்கிறது. நிலவில் ஆக்சிஜன் உருவாக்க முடியும், அதை எப்படி சேமிப்பது என பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.

    • கரூர் அருகே கல்லூரி மாணவி திடீர் என்று மாயமனார்
    • தோகைமலை போலீசார் மாயமான மாணவியை தேடி வருகின்றனர்

    கரூர்,

    கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கூடலூர் ஊராட்சி கல்லிப்பட்டி மோகன் மகள் சிவரஞ்சனி இவர் அய்யர்மலை அரசு கல்லூரியில் பிஏ 2ம் ஆண்டு படித்து வருகிறார். நாள்தோறும் கல்லூரிக்கு பேருந்தில் சென்று வந்துள்ளார். வீட்டில் இருந்து வழக்கம்போல் சிவரஞ்சனி கல்லூரிக்கு சென்றுள்ளார். பின்னர் கல்லூரி முடிந்து மாலை நீண்ட நேரமாகியும் சிவரஞ்சனி வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவரது தோழிகள் மற்றும் தங்களது உறவினர்கள் வீடுகள் உள்பட பல்வேறு பகுதிகளில் தேடிபார்த்தும் சிவரஞ்சனி கிடைக்கவில்லை. இதனால் சிவரஞ்சனி தாய் முருகாயி தோகை மலை காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்த போலீசார் மாயமான மாணவி சிவரஞ்சனியை தேடி வருகின்றனர்.

    • கடவூர் அருகே வாகன சோதனையில் போலீசாரிடம் இருவர் தகராறில் ஈடுபட்டனர்
    • தகராறில் ஈடுபட்ட இருவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு உள்ளனர்

    கரூர்,

    கரூர் மாவட்டம் கடவூர் அருகே மாவத்தூர் ஊராட்சி ரெட்டியபட்டியை சேர்ந்த சுந்தரம் மகன் தினேஷ்குமார் (வயது 25). இவர் டிரைவாக வேலை பார்த்து வருகிறார். இதே போல் இதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ரவிச்சந்திரன் (52) இவர் தனியார் பேருந்தில் நடத்துநராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் தர கம்பட்டி பகுதியில் இருந்து ரெட்டியபட்டிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது ரெட்டியப்பட்டி குஜிலியம்பாறை பிரிவு ரோட்டில் பாலவிடுதி எஸ்.எஸ்.ஐ., தமிழ்மணி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடு பட்டிருந்தனர். அப்போது தினேஷ்குமார் தலைக்கவசம் அணியாமல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் சோத னைக்காக நிறுத்தி விசாரணை செய்தனர். இதில் மோட்டார் சைக்கிளின் ஆவணங்

    களை போலீசார் கேட்ட போது தினேஷ்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் கெட்ட வார்த் தைகளால் திட்டி உள்ளனர். வாகனத்தணிக்கை செய்வதற்கு யார் அதிகாரம் வழங்கியது? என்றும், இனி இந்த பகுதியில் வாகனதணிக்கை செய்யக் கூடாது என்றும் இருவரும் போலீசாரை மிரட்டிய தோடு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதுகுறித்து பாலவிடுதி எஸ்.எஸ்.ஐ., தமிழ்மணி பாலவிடுதி காவல்நிலை யத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தினேஷ்குமார் மற்றும் ரவிச்சந்தி ரன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

    • வாங்கல் அருகே படிக்க முடியவில்லை என்ற வேதனையில்அரசு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் வாங்கல் அருகே பெரிய வள்ளிபாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மகள்நர்மதா (வயது 14). இவர் மண்மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நர்மதா தன்னால் பள்ளிக்கூடத்திற்கு சென்று சரியாக படிக்க முடியவில்லை என்றும், அவ்வாறு படித்தாலும் படித்த பாடங்கள் மறந்துவிடுகிறது என்றும் வீட்டில் உள்ள பெற்றோர்களிடம் கூறி வந்தார். பெற்றோர்கள் அவரை சமாதானப்படுத்தி வந்தனர். படிப்பு வராததன் காரணமாக மன உளைச்சலில் இருந்த நர்மதா வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டில் உள்ள விட்டதில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆனந்தராஜியின் உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் நர்மதா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆனந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் வாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரூர் குளித்தலை அடுத்த அய்யம்பாளையத்தில் மோட்டார் ஒயர் திருட்டு சம்பவம் நடந்துள்ளது
    • 70 மீட்டர் மின் ஒயர் காணாமல் போனது குறித்து பாலவிடுதி போலீசார் விசாரணை

    கரூர்,

    குளித்தலை அடுத்த, கடவூர் யூனியன், குத்தவாச்சேரி அண்ணா நகரை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 35). கூலி தொழிலாளி. இவர் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் தோட்டத்தில், அய்யம்பாளையத்தில் உள்ள தெற்கு களத்தில் தங்கி வேலை செய்து வந்தார். தோட்டத்தில் உள்ள மோட்டார் ஒயர், கடந்த, 25ம் தேதி வெளிப்புறமாக இருந்துள்ளது. வேலை முடிந்து விட்டு, 27ம் தேதி மதியம் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச சென்றபோது. 70 மீட்டர் மின் மோட்டார் ஒயர் திருட்டு போனது தெரியவந்தது.

    இதுகுறித்து ஆனந்தராஜ் கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது
    • டாக்டர்கள் இடையேயான ஊதிய நிலைகளில் உள்ள முரண்பாடுகளை காரணம் காட்டி, ஊதிய உயர்வு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

    கரூர்,

    நீதிமன்ற உத்தரவுபடி அமல்படுத்த வேண்டும் என, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி டீன் (பொ) ராஜாவிடம், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட பிரபாகரன் தலைவர் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

    அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு மருத் துவக்கல்லுாரிகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள், ஊதிய உயர்வுக்கு பல கட்ட போராட்டங்களின் விளைவாக, 2021ல் அரசு ஆணைவெளியிடப்பட்டது. இது வரை அரசு ஆணையை அமல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சிறப்பு டாக்டர் மற்றும் பொது டாக்டர்கள் இடையேயான ஊதிய நிலைகளில் உள்ள முரண்பாடுகளை காரணம் காட்டி, ஊதிய உயர்வு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம், உடனடியாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வையில் வழங்குபடி ஆணையிடப்பட்டுள்ளதை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    ×