என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவி திடீர் மாயம்
- கரூர் அருகே கல்லூரி மாணவி திடீர் என்று மாயமனார்
- தோகைமலை போலீசார் மாயமான மாணவியை தேடி வருகின்றனர்
கரூர்,
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கூடலூர் ஊராட்சி கல்லிப்பட்டி மோகன் மகள் சிவரஞ்சனி இவர் அய்யர்மலை அரசு கல்லூரியில் பிஏ 2ம் ஆண்டு படித்து வருகிறார். நாள்தோறும் கல்லூரிக்கு பேருந்தில் சென்று வந்துள்ளார். வீட்டில் இருந்து வழக்கம்போல் சிவரஞ்சனி கல்லூரிக்கு சென்றுள்ளார். பின்னர் கல்லூரி முடிந்து மாலை நீண்ட நேரமாகியும் சிவரஞ்சனி வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவரது தோழிகள் மற்றும் தங்களது உறவினர்கள் வீடுகள் உள்பட பல்வேறு பகுதிகளில் தேடிபார்த்தும் சிவரஞ்சனி கிடைக்கவில்லை. இதனால் சிவரஞ்சனி தாய் முருகாயி தோகை மலை காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்த போலீசார் மாயமான மாணவி சிவரஞ்சனியை தேடி வருகின்றனர்.
Next Story






