என் மலர்
கரூர்
- பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி நடந்தது
கரூர்
பணி நிரந்தரம் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி நேற்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ரூசோ வரவேற்புரை ஆற்றினார்.
இதில் மாவட்ட துணைத்தலைவர் ஜீவரத்தினம், மாவட்ட துணை செயலாளர் மாரியம்மாள், மாவட்ட இணை செயலாளர் தேவிகலா மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
- சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பணம் வைத்து விளையாடியுள்ளனர்
கரூர்
கரூர் காந்திபுரம் பகுதியில் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் ேராந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் அதே பகுதியை சேர்ந்த ராஜகோபால் (வயது 63), ராஜன் (69), ரமேஷ் (56), அண்ணாதுரை (50), விஜயன் (55), கண்ணன் (59) ஆகிய 6 பேரும் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
- வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்
கரூர்
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள பெரியவட்டம் பகுதியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (வயது 21). கணவர் பரணி. இவர்கள் கரூர் ஆத்தூர் பகுதியில் வீடு வாடகை எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பிரியதர்ஷினி கடந்த சில மாதங்களாக தலைசுற்றல் மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் உடல்நிலை சரியாகவில்லையாம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட பிரியதர்ஷினி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியதர்ஷினி பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை குறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் அதிரடி நடவடிக்கை
கரூர்
குளித்தலை அருகே உள்ள தண்ணீர்ப்பள்ளி, பெரியபாலம் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு சென்ற குளித்தலை போலீசார் அந்த பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்ற குளித்தலை மின்காரத்தெருவை சேர்ந்த முகமதுரபி (வயது 55), தண்ணீர்ப்பள்ளி சேடர் தெருவை சேர்ந்த ரமேஷ் (48) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஆன்லைன் லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
- 2,325 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
- சட்டவிரோதமாக மதுவை பதுக்கி விற்றதாக 250 பேர் மீது வழக்கு பதியபட்டது
கரூர்:
கரூர் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை கரூர் டவுன், பசுபதிபாளையம், வெங்கமேடு, வாங்கல், வேலாயுதம்பாளையம், தாந்தோணிமலை, க.பரமத்தி, அரவக்குறிச்சி, தென்னிலை, குளித்தலை, மாயனூர், தோைகமலை பாலவிடுதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையத்திற்குட்பட்ட போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் சட்டவிரோதமாக மதுவை பதுக்கி விற்றதாக 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 2,325 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்கண்ட தகவலை கரூர் மாவட்ட போலீசார் தெரிவித்தனர்.
வேலாயுதம்பாளையம் போலீசார் மரவாபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு உள்ள டாஸ்மாக் பகுதியில் மது விற்றதாக திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியை சேர்ந்த ரவி என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் தோகைமலை அருகே உள்ள தெற்குபள்ளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் அருகே புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியை சேர்ந்த ஜெயபாரதி (வயது 31) என்பவர் மது விற்றுக்கொண்டிருந்தார். இதையடுத்து அவரை தோகைமலை போலீசார் கைது செய்தனர்.
தரகம்பட்டி அருகே தேவர்மலை ஊராட்சி மம்பத்தையூரை சேர்ந்த ரவி (48) என்பவர் தனது பெட்டிக்கடையில் பதுக்கி வைத்து மது விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை சிந்தாமணிப்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
- கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்
- முன்விரோதத்தில் மூதாட்டியை கட்டையால் அடித்து கொன்றேன் என்றார்
கரூர்,
கரூர் சக்தி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி அமராவதி(வயது 75). இந்த நிலையில் சுப்பிரமணியன் நேற்று முன்தினம் அரவக்குறிச்சி பகுதியில் நடந்த ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டார்.
இதனால் வீட்டில் தனியாக இருந்த அமராவதி தலையில் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த கருப்பையா (40) என்பவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் பின்வருமாறு:- கருப்பையாவின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர். இவர் கரூர்-கோவை ரோட்டில் தள்ளுவண்டியில் ஓட்டல் தொழில் செய்து வந்துள்ளார். மேலும் கருப்பையா ஓட்டலுக்கு பயன்படுத்தி வந்த பாத்திரங்களை அமராவதியின் வீட்டின் அருகே வைத்து கழுவி சுத்தம் செய்துள்ளார்.
இதனால் அமராவதி கருப்பையாவிடம் வாக்குவாதம் செய்து வந்துள்ளார். இதனால் கருப்பையாவிற்கும், அமராவதிக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கருப்பையா சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அமராவதியை கட்டையால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் கருப்பையா கூறியதை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். பின்னர் கருப்பையாவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மார்க்கெட்டிங் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்
- தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
கரூர்
கரூர் வெங்கமேடு ஜீவா நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 42). இவர் ஒரு தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்த விஜயகுமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லையாம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட விஜயகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நீலகண்டன் சம்பவ இடத்திற்கு வந்து விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்யல்,
கரூர் குறுவட்ட அளவில் நடைபெற்ற மாணவிகளுக்கான தடகளப் போட்டிகளில் புஞ்சை தோட்டக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு 17 வயதிற்கு உட்பட்ட
கோலூன்றித் தாண்டுதல் பிரிவில் விளையாடினார்கள்.இதில் 8 ஆம் வகுப்பு மாணவி சுபாஷினி 2-ஆம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
கோலூன்றி தாண்டுதல் பிரிவில் சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினார்கள்.
- நொய்யல் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
- மாதாந்திர பராமரிப்பு பணிகள்
கரூர்
நொய்யல் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் அத்திப்பாளையம், குப்பம், நொய்யல், மரவாபாளையம், புங்கோடை, உப்புபாளையம், குளத்துபாளையம், காளிபாளையம், நத்தமேடு, வலையபாளையம், இந்திராநகர் காலனி, வடக்கு நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என கரூர் கிராமியம் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
- மளிகை கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது.
- 2 முரண்பாடுகளும் கண்டறியப்பட்டன
கரூர்
கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ் தலைமையில் மாதாந்திர சிறப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பொட்டல பொருட்கள் விதிகளின்கீழ் மொத்த மற்றும் சில்லறை விற்பனை செய்யும் மளிகை கடைகள், சந்தைகளில் உள்ள மளிகை கடைகள் ஆகிய 11 கடைகளில் ஆய்வு மேற்கொண்டது. இதில் 2 முரண்பாடுகளும் கண்டறியப்பட்டு இசைவு தீர்வு கட்டண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- கரூரில் வரத்துக்கு குறைவால் பூக்களின் விலை உயர்வு உள்ளது
- பூக்களின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், வேட்டமங்கலம், குந்தாணிபாளையம், மூலியமங்கலம், கொங்கு நகர், பேச்சிப்பாறை, நடையனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை, சம்பங்கி, அரளி, ரோஜா, செவ்வந்தி, கனகாம்பரம் உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.உள்ளூர் வியாபாரிகளுக்கும், அருகாமையில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று பூக்களை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் குண்டுமல்லி ரூ.300- க்கும், சம்பங்கி கிலோ ரூ.80- க்கும், அரளி கிலோ ரூ.80- க்கும், ரோஜா கிலோ ரூ.160- க்கும், முல்லைப் பூ ரூ.300- க்கும், செவ்வந்திப்பூ ரூ.200- க்கும், கனகாம்பரம் ரூ.350-க்கும் வாங்கிச் சென்றனர். நேற்று குண்டு மல்லி கிலோ ரூ.600-க்கும், சம்பங்கி கிலோ ரூ.100 க்கும், அரளி கிலோ ரூ.150- க்கும், ரோஜா கிலோ ரூ.250- முல்லைப் பூ கிலோ ரூ.600-க்கும், செவ்வந்திப்பூ ரூ.280- க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும் வாங்கிச் சென்றனர். பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதால் பூ பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
- க.பரமத்தி ஒன்றியம் சின்னதாரபுரம் பகுதியை சேர்ந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
- சின்னதாராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்
கரூர்,
க.பரமத்தி ஒன்றியம் சின்னதாரபுரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகள் மேனகா (வயது 37). இவர் கடந்த 7 வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில் இவர் வீட்டில் தூக்கு மாட்டி இறந்த நிலையில் இருப்பதாக சின்னதாராபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.உடலை கைப்பற்றிய போலீசார் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தாய் சிவகாமி கொடுத்த புகாரின் பேரில் சின்னதாராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






