என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேசிய நெடுஞ்சாலை கொள்ளையர்கள் கைது
- கரூர் தேசிய நெடுஞ்சாலையில்வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
- கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கார்,பைக் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட செம்படை ரவுண்டானா ,மன்மங்கலம் மற்றும் வேலாயுதம்பாளையம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட எம்.குமாரசாமி கல்லூரி, மூலிமங்கலம் பிரிவு அருகே உள்ள தேவாலயம் ஆகிய பகுதிகளில். கடந்த 2 மாதங்களாக இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் தனியாக இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்களிடம் தங்க சங்கிலிகளை பறித்து கொள்ளையடித்து வந்தனர். அவர்களை பிடிக்க கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மற்றும் கரூர் ஊரக உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை உத்தரவின் பேரில் வேலாயுதம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயராமன் தலைமையில் காவல் நிலைய உதவிஆய்வாளர் சரவணன் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது அந்த பகுதியில் வந்த கொண்டிருந்தவர்களை விசாரணை நடத்தியதில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த மனோகரன் மகன் மேகநாதன் (வயது 18), முனியசாமி மகன் முருகேஷ்(19) மூர்த்தி மகன் ஆகாஷ்( 24 ),முருகன் மகன் யோகேஷ் (20), முஜிபூர் ரஹ்மான் மகன் ஷேக் அப்துல்லா( 21), முனியசாமி மகன் சாந்தகுமார்(19) ஈஸ்வரன் மகன் தினேஷ்( 19) ஆகிய 7 பேர் தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன் அடிப்படையில்7பேர்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 7 1/2 பவுன் தங்க நகைகளை மீட்கபட்டு வழிப்பறி கொள்ளைக்கு ஈடுபடுத்திய ஸ்கார்பியோ கார் மற்றும் யமாஹா பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து குற்றவாளிகள் ஏழு பேரையும் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.






