என் மலர்
உள்ளூர் செய்திகள்

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த அரசு டாக்டர்கள் கோரிக்கை
- நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது
- டாக்டர்கள் இடையேயான ஊதிய நிலைகளில் உள்ள முரண்பாடுகளை காரணம் காட்டி, ஊதிய உயர்வு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
கரூர்,
நீதிமன்ற உத்தரவுபடி அமல்படுத்த வேண்டும் என, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி டீன் (பொ) ராஜாவிடம், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட பிரபாகரன் தலைவர் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு மருத் துவக்கல்லுாரிகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள், ஊதிய உயர்வுக்கு பல கட்ட போராட்டங்களின் விளைவாக, 2021ல் அரசு ஆணைவெளியிடப்பட்டது. இது வரை அரசு ஆணையை அமல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சிறப்பு டாக்டர் மற்றும் பொது டாக்டர்கள் இடையேயான ஊதிய நிலைகளில் உள்ள முரண்பாடுகளை காரணம் காட்டி, ஊதிய உயர்வு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம், உடனடியாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வையில் வழங்குபடி ஆணையிடப்பட்டுள்ளதை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






