என் மலர்
கள்ளக்குறிச்சி
- 10-ம் வகுப்பு தேர்வு முடிந்த மாணவிகளுக்கு தேர்வு வெற்றி தோல்விகள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
- 1098 மற்றும் 181 எண்கள் குறிக்கும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை போலீஸ் நிலையம் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் தலைமை போலீசார்கள் தாமோதரன், கோகிலா மற்றும் போலீசார் கலந்து கொண்டு மணலூர்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு கருதியும், குழந்தை திருமணம் மற்றும் குழந்தை தொழிலாளர் குறித்தும் மேலும் சாலை விதிகள் பயன்படுத்துவது குறித்தும் 10-ம் வகுப்பு தேர்வு முடிந்த மாணவிகளுக்கு தேர்வு வெற்றி தோல்விகள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
முன்னதாக மணலூர்பேட்டை காவல் துறையினர் சார்பில் செல்லங்குப்பம் கிராமத்தில் பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கருதியும் குழந்தை திருமணம் மற்றும் குழந்தை தொழிலாளர் குறித்து போதை பொருள் தடுப்பு மற்றும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் காவல் உதவி செயலி பயன்படுத்துவது குறித்தும் சாலை விதிகள் குறித்தும் மேலும் 1098 மற்றும் 181 எண்கள் குறிக்கும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
- சசிகலா (வயது 35). இவருடைய மகள் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ளார்.
- இவரை கடந்த 10-ந்தேதி முதல் காணவில்லை.
கள்ளக்குறச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பெரிய சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்த சசிகலா (வயது 35). இவருடைய மகள் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ளார். நீட் தேர்வு பயிற்சி வகுப்புக்கு தினமும் ஆத்தூர் சென்று வந்த நிலையில், இவரை கடந்த 10-ந்தேதி முதல் காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் அதே கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் இளவரசன் (19) என்பவர் மாணவியை கடத்திச் சென்றது போலீசாருக்கு தெரியவந்தது. இந்நிலையில் மாணவியை கடத்தி சென்று தலைமறைவாக இருந்த கல்லூரி மாணவன் இளவரசனை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களை சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் இளவரசன் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அந்த மா ணவியை கள்ளக்குறிச்சி யில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.
- தியாகதுருகத்தில் நகர அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
- மாவட்ட மாணவரணி இணை செயலாளர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
கள்ளக்குறிச்சி:
:தியாகதுருகத்தில் நகர அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர அவைத் தலைவர் அய்யம்பெருமாள், துணை செயலாளர் கிருஷ்ணராஜ் மாவட்ட மாணவரணி இணை செயலாளர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் வேல் நம்பி வரவேற்றார். நகர செயலாளர் ஷியாம் சுந்தர் தலைமை தாங்கி தியாக துருகம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் அதிகப்படியான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
குறிப்பாக இளை ஞர்கள், இளம்பெண்கள் மற்றும் புதிய வாக்காளர்களையும் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து வார்டு செயலாளர்களிடம் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கினார். இதில் நகர பொருளாளர் பாண்டு, மாவட்ட பிரதிநிதி வேலுமணி, ரமேஷ், இளைஞரணி செயலாளர் ஏழுமலை உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் நகர இணை செயலாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.
- சின்னசேலத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று சந்தை நடைபெறுவது வழக்கம்.
- காலை 5 மணி முதலே சந்தை தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவ ட்டம் சின்னசேலத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகளும் பொதுமக்களும் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் வாங்கி செல்வது வழக்கம். காலை 5 மணி முதலே சந்தை தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறும்.
இதில் சின்னசேலம் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய ஆடுகளை விற்பனைக்காக காலையிலே சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர். பண்டிகை இல்லாத நாட்களில் குறைந்த அளவே ஆடுகள் விற்பனையாகும். ரம்ஜான் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் இன்று நடைபெற்ற சின்னசேலம் வாரசந்தையில் பல ஊர்களில் இருந்து விவசாயிகள் கொண்டுவந்த ஆடுகள் 75 லட்சத்திற்கும் மேல் விற்பனையானது. இதில் வியாபாரிகள் ஆடுகளை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- கூவாகத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரை திருவிழா நேற்று தொடங்கியது.
- கொரட்டூர், சிவலியாங்குளம் உள்ளிட்ட 7 கிராம மக்கள் கூழ் குடங்களுடன் ஊர்வலமாக வந்து கோவிலில் படையலிட்டனர்.
திருநாவலூர்:
கூத்தாண்டவர் கோவில் திருவிழா சாகை வார்த்தலுடன் தொடங்கியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரை திருவிழா நேற்று தொடங்கியது.
இதையொட்டி நேற்று மாலை 4 மணிக்கு சாகை வார்த்தல் விழா நடைபெற்றது.இதில் கூவாகம், தொட்டி, நத்தம், வேலூர், அண்ணா நகர், கொரட்டூர், சிவலியாங்குளம் உள்ளிட்ட 7 கிராம மக்கள் கூழ் குடங்களுடன் ஊர்வலமாக வந்து கோவிலில் படையலிட்டனர்.
இன்று (19-ந் தேதி) பந்தலடியில் தாலி கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை சாந்தனு சரிதம், 21-ந் தேதி பீஷ்மர் பிறப்பு, 22-ந் தேதி தர்மர் பிறப்பு, 23-ந் தேதி பாஞ்சாலி பிறப்பு, 24-ந் தேதி பகாசூரன் வதம், 25-ந் தேதி பாஞ்சாலி திருமணம், 26-ந் தேதி கூத்தாண்டவர் பிறப்பு, 27-ந் தேதி ராஜசுய யாகம், 28-ந் தேதி விராட பருவம், வெள்ளிக்கால் நடும் நிகழ்ச்சி நடக்கிறது.
29-ந் தேதி கிருஷ்ணன் தூது, 30-ந் தேதி காலை அரவாண் பலி, கூத்தாண்டவர் சுவாமிக்கு பாலாலயம் நடக்கிறது.
1-ந் தேதி மாலை கம்பம் நிறுத்துதல்,2-ந் தேதி இரவு சுவாமி திருக்கண் திறத்தல், திருநங்கைகள், பக்தர்கள் திருமாங்கல்யம் ஏற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது.
3-ந் தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. மாலை பந்தலடி பாரதம் படைத்தல், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதல், 4-ந் தேதி விடையாற்றி உற்சவம், 5-ந் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
- உ.ளுந்தூர் பேட்டை அருகே ஆம்னி பஸ் தடுப்பு கட்டையில் மோதி 8 பேர் காயம் அடைந்தனர்.
- இந்தப் பஸ்சை கோவையை சேர்ந்த ராஜ்குமார் ஓட்டி வந்தார்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர் பேட்டை அருகே ஆம்னி பஸ் தடுப்பு கட்டையில் மோதி 8 பேர் காயம் அடைந்தனர். கோவையில் இருந்து தனியார் ஆம்னி பஸ் 30-க்கும் மேற்பட்ட பயணி களுடன் சென்னைக்குச் புறப்பட்டு வந்தது. இந்தப் பஸ்சை கோவையை சேர்ந்த ராஜ்குமார் ஓட்டி வந்தார். இந்த பஸ் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையம் எதிரே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலைநடுவே உள்ள தடுப்புக் கட்டையில் மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த 8-க்கும் மேற்பட்ட பணிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டசமாக உயிர்த்தப்பினர். போலீஸ் நிலையம் எதிரே நடந்த இந்த விபத்தை பார்த்த பொதுமக்கள் மற்றும் போலீசார் விபத்தில் காயம் அடைந்தவர்களை விட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் சிக்கிய பஸ்கிசை கிரேன் மூலம் அப்புற ப்படு த்தும் பணியில்ஈடுபட்டனர். போலீஸ் நிலையம் எதிரே ஏற்பட்ட இந்த விபத்து அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படு த்தியது.
- உதயசூரியன். இவருக்கு சவுந்தர்யா என்ற மனைவியும், 2 பெண் பிள்ளைகளும் உள்ளனர்.
- காலையில் கூலி வேலைக்குச் சென்ற மனைவி சவுந்தர்யா மாலை வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் பரிகம் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயசூரியன். இவருக்கு சவுந்தர்யா என்ற மனைவியும், 2 பெண் பிள்ளைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் வழக்கம் போல் காலையில் கூலி வேலைக்குச் சென்ற மனைவி சவுந்தர்யா மாலை வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உதயசூரியன், மனைவியை தேடினார். எங்கேயும் கிடைக்காததால் கச்சிராயபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சவுந்தர்யாவை தேடி வருகின்றனர்.
- கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டதி.மு.க. செயலாளரும் ரிஷிவந்தியம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
- திகழ்ந்துவரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை யில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது.
கள்ளக்குறச்சி:
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டதி.மு.க. செயலாளரும் ரிஷிவந்தியம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய துணைக்கண்டத்தின் சிறப்புமிகு மாநிலமாக தமிழகத்தை தலை நிமிர்த்தி மற்ற முதல்வர்களுக்கு எல்லாம் உதாரணமாக திகழ்ந்துவரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை யில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி சம சீராக இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் என்ற அடிப்படையில் ஆட்சி நடத்தி வரும் முதல மைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் ஓரணியில் நின்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதன் காரணமாகவே தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்பாடு ஆகியவை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. இதனை நடுநிலையாளர்களும் ஒத்துக்கொள்வார்கள். அதேசமயம் தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாட்டு மக்கள் கொடுத்து வரும் ஆதரவு அவர் செல்லும் இடங்களில் எல்லாம் காணப்படும் வரவேற்பு குறிப்பாக இளைஞர்களிடையே காணப்படும் எழுச்சி இவற்றைக் கண்டு எதிர்க்கட்சியினர் பொறாமை கொண்டு சேர்க்கை வாரி தூற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சியினரின் பொய் பிரச்சாரம் தமிழக மக்களிடையே எடுபடவில்லை. மாறாக எள்ளி நகையாடும் அளவிற்கு எதிர்க்கட்சி களின் செயல்பாடு களை விமர்சித்து வருகின்றனர். ஒவ்வொரு துறையிலும் தீட்டப்படும் திட்டமானது மாநிலத்தின் வளர்ச்சி அதன் மூலம் தமிழக மக்களின் பொருளாதார மேம்பாடு என்ற ஒரே நோக்குடன் செயல்படுத்தி வருவதால் இன்னும்2 ஆண்டுகளில் தமிழகம் அபரீத வளர்ச்சி பெறும். அந்த அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தீவிர கவனம் செலுத்தி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் மாவட்ட மக்களின் நல வாழ்வு மேம்பாட்டுக்கும் கேட்கும் அனைத்து திட்டங்களையும் மற்றும் நிதி உதவிகளையும் வழங்கி வருவதுடன் மாவட்டத்தின் வளர்ச்சிக்கான தமிழக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக நியமித்து வளர்ச்சி பணியை துரிதப்படுத்தி வருகிறார். மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான எ.வ.வேலு தனது சொந்த மாவட்டமான திருவண்ணாமலை விட கள்ளக்குறிச்சி மாவட்ட த்தின் வளர்ச்சிக்கு அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வருகிறார். கொள்கிறேன்.இவ்வாறு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.கூறினார்.
- தீவிர உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நகர தி.மு.க. செயலாளர் கோபி தலைமையில் நடைபெற்று வருகிறது.
- சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நகர மன்ற தலைவர் முருகன் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்..
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் நகர தி.மு.க. சார்பில் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நகர தி.மு.க. செயலாளர் கோபி தலைமையில் நடைபெற்று வருகிறது. 11-வது வார்டு பகுதிகளில் நகர்மன்ற துணைத் தலைவர் உமா மகேஸ்வரி குணா தலைமையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நகர மன்ற தலைவர் முருகன் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர தி.மு.க. அவை தலைவர் குணா, முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் சங்கர், தொ.மு.ச நிர்வாகி சரவணன், மண்ணெண்ணை கடை செல்வம், பட்டறை சரவணன், இளைஞர் அணி நிர்வாகி கார்த்தி மற்றும் டிரைவர் சிவா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியின் போது திமுகவில் இணைந்த அனைவருக்கும் நகர திமுகவைத் தலைவர் குணா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு புத்தகம், இலவச சேலை மற்றும் சர்க்கரை ஆகியவற்றை பரிசாக வழங்கினார்.
- மே 3-ந்தேதி மாலை பந்தலடியில் பாரதம் படைத்தல், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- விழாவில் தமிழகம் மட்டுமின்றி மும்பை, கொல்கத்தா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான திருநங்கைகள் கலந்து கொள்கிறார்கள்.
திருநாவலூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கூவாகம் திருவிழா நடைபெறும்.
இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று (செவ்வாய்கிழமை) மாலை 5 மணிக்கு சாகை வார்த்தலுடன் கூழ் ஊற்றி தொடங்குகிறது. அடுத்த மாதம் (மே) 5-ந்தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நாளான மே 1-ந்தேதி கம்பம் நிறுத்தல், 2-ந்தேதி இரவு சுவாமி கண் திறத்தல், திருநங்கைகள், பக்தர்கள் திருமாங்கல்யம் ஏற்று கொள்ளுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மே 3-ந்தேதி மாலை பந்தலடியில் பாரதம் படைத்தல், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவில் தமிழகம் மட்டுமின்றி மும்பை, கொல்கத்தா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான திருநங்கைகள் கலந்து கொள்கிறார்கள்.
- தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாம் நடந்தது.
- நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்,
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மக்களை தேடி மனுக்கள் பெறும் முகாம் நடந்தது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். சங்கராபுரம் எம்.எல்.ஏ., உதயசூரியன், மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாரா யணன், திட்ட இயக்குனர் மணி, கோட்டாட்சியர் பவித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
இதில் பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி பொது மக்கள் 348 மனுக்களை அளித்தனர். அதனை பெற்ற அமைச்சர் எ.வ.வேலு, அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணும் படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராஜா, வேளாண்மை இணை இயக்குனர் கருணா நிதி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ரத்தினமாலா, மாவட்ட ஆவின் சேர்மன் ஆறுமுகம், ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாக ராஜன், தாசில்தார் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்லதுரை, செல்வ கணேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் பாப்பாத்தி நடராஜன், அய்யம்மாள் ராஜேந்திரன், கோவிந்தம் மாள், ஒன்றிய கவுன்சிலர்கள் அம்பிகாவீர மணி, சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் குளத்தூரில் நடந்த முகாமில் மொத்தம் 283 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது
- போலீஸ் துறை தொடர்பான மனுக்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 557 மனுக்கள் பெறப்பட்டன.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், ஏரி, குளம் தூர் வாருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், நில அளவை தொடர்பான மனுக்கள், வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த திட்டம் மற்றும் போலீஸ் துறை தொடர்பான மனுக்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 557 மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், வேளாண் இணை இயக்குநர் கருணாநிதி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கவியரசு அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






