சின்னசேலம் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்தி சென்ற கல்லூரி மாணவன் கைது

சசிகலா (வயது 35). இவருடைய மகள் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ளார்.இவரை கடந்த 10-ந்தேதி முதல் காணவில்லை.
சின்னசேலம் அருகே   பிளஸ்-2 மாணவியை கடத்தி சென்ற கல்லூரி மாணவன் கைது
Published on

கள்ளக்குறச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பெரிய சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்த சசிகலா (வயது 35). இவருடைய மகள் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ளார். நீட் தேர்வு பயிற்சி வகுப்புக்கு தினமும் ஆத்தூர் சென்று வந்த நிலையில், இவரை கடந்த 10-ந்தேதி முதல் காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் அதே கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் இளவரசன் (19) என்பவர் மாணவியை கடத்திச் சென்றது போலீசாருக்கு தெரியவந்தது. இந்நிலையில் மாணவியை கடத்தி சென்று தலைமறைவாக இருந்த கல்லூரி மாணவன் இளவரசனை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களை சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.  பின்னர் இளவரசன் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அந்த மா ணவியை கள்ளக்குறிச்சி யில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com