என் மலர்
உள்ளூர் செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூத்தாண்டவர் கோவில் திருவிழா தொடக்கம்- 7 கிராம மக்கள் பங்கேற்பு
- கூவாகத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரை திருவிழா நேற்று தொடங்கியது.
- கொரட்டூர், சிவலியாங்குளம் உள்ளிட்ட 7 கிராம மக்கள் கூழ் குடங்களுடன் ஊர்வலமாக வந்து கோவிலில் படையலிட்டனர்.
திருநாவலூர்:
கூத்தாண்டவர் கோவில் திருவிழா சாகை வார்த்தலுடன் தொடங்கியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரை திருவிழா நேற்று தொடங்கியது.
இதையொட்டி நேற்று மாலை 4 மணிக்கு சாகை வார்த்தல் விழா நடைபெற்றது.இதில் கூவாகம், தொட்டி, நத்தம், வேலூர், அண்ணா நகர், கொரட்டூர், சிவலியாங்குளம் உள்ளிட்ட 7 கிராம மக்கள் கூழ் குடங்களுடன் ஊர்வலமாக வந்து கோவிலில் படையலிட்டனர்.
இன்று (19-ந் தேதி) பந்தலடியில் தாலி கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை சாந்தனு சரிதம், 21-ந் தேதி பீஷ்மர் பிறப்பு, 22-ந் தேதி தர்மர் பிறப்பு, 23-ந் தேதி பாஞ்சாலி பிறப்பு, 24-ந் தேதி பகாசூரன் வதம், 25-ந் தேதி பாஞ்சாலி திருமணம், 26-ந் தேதி கூத்தாண்டவர் பிறப்பு, 27-ந் தேதி ராஜசுய யாகம், 28-ந் தேதி விராட பருவம், வெள்ளிக்கால் நடும் நிகழ்ச்சி நடக்கிறது.
29-ந் தேதி கிருஷ்ணன் தூது, 30-ந் தேதி காலை அரவாண் பலி, கூத்தாண்டவர் சுவாமிக்கு பாலாலயம் நடக்கிறது.
1-ந் தேதி மாலை கம்பம் நிறுத்துதல்,2-ந் தேதி இரவு சுவாமி திருக்கண் திறத்தல், திருநங்கைகள், பக்தர்கள் திருமாங்கல்யம் ஏற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது.
3-ந் தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. மாலை பந்தலடி பாரதம் படைத்தல், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதல், 4-ந் தேதி விடையாற்றி உற்சவம், 5-ந் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.






