search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கூத்தாண்டவர் கோவில் திருவிழா
    X
    கூத்தாண்டவர் கோவில் திருவிழா

    கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா- இன்று மாலை சாகை வார்த்தலுடன் தொடங்குகிறது

    • மே 3-ந்தேதி மாலை பந்தலடியில் பாரதம் படைத்தல், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • விழாவில் தமிழகம் மட்டுமின்றி மும்பை, கொல்கத்தா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான திருநங்கைகள் கலந்து கொள்கிறார்கள்.

    திருநாவலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கூவாகம் திருவிழா நடைபெறும்.

    இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று (செவ்வாய்கிழமை) மாலை 5 மணிக்கு சாகை வார்த்தலுடன் கூழ் ஊற்றி தொடங்குகிறது. அடுத்த மாதம் (மே) 5-ந்தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது.

    விழாவின் முக்கிய நாளான மே 1-ந்தேதி கம்பம் நிறுத்தல், 2-ந்தேதி இரவு சுவாமி கண் திறத்தல், திருநங்கைகள், பக்தர்கள் திருமாங்கல்யம் ஏற்று கொள்ளுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    மே 3-ந்தேதி மாலை பந்தலடியில் பாரதம் படைத்தல், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவில் தமிழகம் மட்டுமின்றி மும்பை, கொல்கத்தா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான திருநங்கைகள் கலந்து கொள்கிறார்கள்.

    Next Story
    ×