என் மலர்
கள்ளக்குறிச்சி
- நாளை ஆடி 18-ந்தேதியையொட்டி ஆடிப்பெருக்கு பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
- வார சந்தைக்கு இன்று அதிகாலை முதலே சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.
உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமையன்று வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். வழக்கமாக இந்த சந்தையில் ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் மதிப்பிலான ஆடுகள் விற்பனையாகும்.
அதன்படி, இன்று உளுந்தூர்பேட்டையில் வாரச்சந்தை நடைபெற்றது. வார சந்தைக்கு இன்று அதிகாலை முதலே காட்டுசெல்லூர், வடகுரும்பூர், கிளியூர், சேந்தநாடு, ஆசனூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் நாளை ஆடி 18-ந்தேதியையொட்டி ஆடிப்பெருக்கு பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் ஆடு சந்தையில் விற்பனை களை கட்டியது. காலை 5 மணிக்கு தொடங்கிய இந்த சந்தையில் திண்டுக்கல், மதுரை, திருச்சி, வேலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆயிரக்கணக்கான ஆடுகளை வாங்கினர்.
இது தவிர சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களும் ஆடுகளை வாங்க குவிந்தனர். இந்த சந்தையில் ஒரு ஆடு ரூ.8 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை விற்பனையானது. காலை 10 மணி நிலவரப்படி ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் ஆடு வளர்ப்போர் மகிழ்ச்சியுடன் சென்றனர்.
- வெள்ள வேட்டி அணிந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தார்.
- கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மா வட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர்கோட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி அடையாளம் தெரியாத முதியவர் பலி எலவனாசூர்கோட்டை போலீஸ் சராகத்துக்குட்பட்ட விநாயகா பள்ளி எதிரில் சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ள வேட்டி அணிந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த எலவனாசூர்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன், தனிப்பிரிவு காவலர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் தேடி வருகிறனர்.
- பேச்சுப் போட்டி நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
- பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் இந்த பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
தமிழ் வளர்ச்சித் துறை யின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருகின்ற 4-ந் தேதி அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் 11- ந் தேதி கலைஞர் பிறந்த நாளை யொட்டி தியாக துருகம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கானப் பேச்சுப் போட்டி காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற வுள்ளது.
மேலும் பேச்சுப்பேட்டி யில் பங்குபெற்று வெற்றி பெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியாக மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். மேலும், அரசுப் பள்ளி மற்றும் கல்லூரியை சேர்ந்த தலா ஒரு மாணவருக்கு சிறப்புப் பரிசு தொகை ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.24 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் இந்த பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள் ளார்.
- அஸ்வினி அதே பகுதியில் உள்ள தனியார் நர்சிங் பயிற்சி மையத்தில் டிப்ளமோ படித்து வருகிறார்.
- சம்பவத்தன்று பயிற்சி மையத்திற்கு சென்ற வர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அம்மன் கொள்ளை மேடு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் தியாகதுருகம் செல்வா நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் அஸ்வினி (20) இவர் இதே பகுதியில் உள்ள தனியார் நர்சிங் பயிற்சி மையத்தில் டிப்ளமோ படித்து வருகிறார். இந்நிலையில் சம்ப வத்தன்று பயிற்சி மையத்திற்கு சென்ற வர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து இவரது தந்தை நடராஜன் தியாகதுருகம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- கோவிலுக்கு அருகில் சிகரெட் பிடிக்க கூடாதென சற்குணராஜ் குடும்பத்தார் ஈஸ்வரனிடம் கூறியுள்ளனர்.
- ஈஸ்வரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் சற்குணராஜை வழிமறித்து கத்தியால் வெட்டினர்.
கள்ளக்குறிச்சி:
தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு இறால் மீன்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி நேற்று இரவு புறப்பட்டது. இந்த மினி லாரியை நாகை மாவட்டத்தை சேர்ந்த அசாருதீன் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். இந்த வாகனம் உளுந்தூர்பேட்டையில் உள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை வந்தது. அப்போது சாலையோரம் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் ரோந்து வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ரோந்து வாகனத்தில் வந்த அதிகாரிகள் எதிர்புறத்தில் நின்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இறால் மீன் மீன் ஏற்றிவந்த மினி லாரி எதிர்பாராத விதமாக, ரோந்து வாகனத்தின் மீது மோதியது. இதில் மினி லாரி தீப்பிடித்து எரிந்தது. அவ்வழியே சென்றவர்கள், மினி லாரியில் இருந்த டிரைவர் அசாருதீனை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனும தித்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய லாரி டிரைவர், லேசான தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூ ர்பேட்டை தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் மினி லாரி மற்றும் அதிலிருந்த இறால் மீன்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த விபத்து தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இறால் மீன்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி நேற்று இரவு புறப்பட்டது.
- மினி லாரி எதிர்பாராத விதமாக, ரோந்து வாகனத்தின் மீது மோதியது.
கள்ளக்குறிச்சி:
தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு இறால் மீன்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி நேற்று இரவு புறப்பட்டது. இந்த மினி லாரியை நாகை மாவட்டத்தை சேர்ந்த அசாருதீன் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். இந்த வாகனம் உளுந்தூர்பேட்டையில் உள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை வந்தது. அப்போது சாலையோரம் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் ரோந்து வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ரோந்து வாகனத்தில் வந்த அதிகாரிகள் எதிர்புறத்தில் நின்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இறால் மீன் மீன் ஏற்றிவந்த மினி லாரி எதிர்பாராத விதமாக, ரோந்து வாகனத்தின் மீது மோதியது. இதில் மினி லாரி தீப்பிடித்து எரிந்தது. அவ்வழியே சென்றவர்கள், மினி லாரியில் இருந்த டிரைவர் அசாருதீனை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனும தித்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய லாரி டிரைவர், லேசான தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூ ர்பேட்டை தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் மினி லாரி மற்றும் அதிலிருந்த இறால் மீன்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த விபத்து தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வின்சென்ட்ராஜ் அலங்கார மின்விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.
- வின்சென்ட் ராஜை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
சங்கராபுரம் அடுத்த தொண்டநந்தல் கிராமத்தை சேர்ந்த வின்சென்ட்ராஜ் (வயது 23). இவரது அண்ணன்கள் ராபர்ட்நஸ்ரின், பிரவீன்குமார் ஆவார். இவர்கள் சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சங்கராபுரம் அடுத்த விரியூர் கிராமத்தில் நடைபெற்ற காதணி விழாவில் வின்சென்ட்ராஜ் அலங்கார மின்விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி வின்சென்ட்ராஜ் தூக்கி வீசப்பட்டார்.
உடன் அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு வின்சென்ட் ராஜை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் ராபர்ட்நஸ்ரின் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தியா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊறல்
- கல்வராயன்மலை பகுதியில் தேடுதல் வேட்டை
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜூக்கு முண்டியூர் கிராமத்தில் ஆற்றின் அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊறல் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 3 பேரல்களில் சுமார் 600 லிட்டர் சாராயஊறல்களை பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கரியாலூர் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்தி ரன் தலைமையி லான போலீசார் கல்வரா யன்மலை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது முண்டியூர் கிராமத்தில் ஆற்றின் அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய 600 லிட்டர் சாராய ஊறல்களை கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது.
- இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்,
- காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கி னார். மாவட்டத் தலைவர் ஆனந்த கிருஷ்ணன், மாவ ட்ட பொருளாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராம்ஜி வரவேற்றார். வட்ட பொருளாளர் முத்துசாமி நிதிநிலை அறிக்கை வாசி த்தார். தொடர்ந்து மாவட்ட செயலாளர் மகாலி ங்கம், மாவட்டத் துணைத் தலைவர் கொளஞ்சிவேலு ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய பணிகளை தோற்றுவித்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், தமிழக அரசு துறையில் பணிபுரியும் வெளி ஒப்பந்ததாரர்களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தமிழக அரசின் சமூக நல துறையின் காலை சிற்றுண்டி திட்டத்தினை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும், மத்திய அரசால் வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வை நிலுவையுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் வட்ட துணை த்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்ட இணை செயலாளர் மஞ்சுளா, மாவட்டத் துணைத் தலைவர்கள் வீரபுத்திரன், செந்தில்முருகன், மாவட்ட இணை செயலாளர்கள் சாமிதுரை, விஜயராணி, சாலை பணியாளர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் முத்து உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
- மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- மணிப்பூர் சம்பவத்தை தடுக்க தவறிய மத்திய அரசு
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகர மும்முனை சந்திப்பில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மீரான் ஷா தலைமை தாங்கினார். கிராத் மன்சூர் அஹமத் ஹஜரத் ஓதினார். மாநில நிர்வாகி நவாப் ஜான் அனைவரையும் வரவேற்றார். மாவட்டத் தலைவர் பீர் முகமது முன்னிலை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் சாதிக் பாஷா, மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான், எஸ்.டி.பி.ஐ., கட்சி மாவட்டத் தலைவர் முகமது ரபிக், விடுதலை சிறுத்தை ஒன்றிய செயலாளர் தலித் சந்திரன் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மணிப்பூர் சம்பவத்தை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முடிவில் மாவட்டத் துணைச் செயலாளர் ஜாபீர் உசேன் நன்றி கூறினார்.
- கிரைம் போலீஸ் ஆனந்தராஜ் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- இவர் கடலூர் மத்திய சிறையில் இருந்தபோது, திருட ஜெயிலில் திட்டம் போடப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இன்ஸ்பெக்டர் ராஜாராமன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக், கிரைம் போலீஸ் ஆனந்தராஜ் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரை கண்ட ஒரு நபர் பயந்தபடி வேகமாக நடந்தார். சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், நைனார்பாளையத்தை சேர்ந்த சின்னையன் (வயது 40) என்பதும், இவர் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர். இவர் கடலூர் மத்திய சிறையில் இருந்தபோது, சின்னசேலம் அடுத்த பூண்டியை சேர்ந்த சின்னதுரை (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் கொடுத்த தகவலின் பேரில் பூண்டியில் உள்ள ஒரு வீட்டில் திருட ஜெயிலில் திட்டம் போடப்பட்டது.
இருவரும் ஜாமீனில் வெளிவந்த பிறகு பூண்டியில் உள்ள நல்லம்மாள் (65) என்பவரது வீட்டில் திருடியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சின்னையனை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின்படி பூண்டி கிராமத்திற்கு சென்ற சின்னதுரையை கைது செய்தனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு நல்லம்மாள் வீட்டில் நடந்த திருட்டு வழக்கில் 5 பவுன் நகையும், ரூ.1 லட்சம் திருடு போனதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், அங்கிருந்து ஒரு பவுன் நகையும், ரூ.21 ஆயிரம் பணமும் திருடியதாக சின்னையனும், சின்னதுரையும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனையடுத்து சின்னசேலம் போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- வளாகத்தைச் சுற்றி சிமெண்ட் சாலைகள் ரூ . 1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
- ஐகோர்ட்டு நீதிபதிகள் சுந்தர்,ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைந்துள்ளது.இந்த வளா கத்தில் வழக்கறிஞர்கள், நீதிமன்றத்திற்கு வழக்கு சம்பந்தமாக வரும் வாதிகள் பிரதிவாதிகள் மற்றும்நீதிமன்ற பணியாளர்கள் தங்களின் நான்கு சக்கர வாகனம் மற்றும் இரு சக்கரம் வாகனம் நிறுத்த வசதி மற்றும் வளாகத்தைச் சுற்றி சிமெண்ட் சாலைகள் ரூ . 1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.வளாகத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை செடிகள் நடும் விழா இன்று விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது இவ் விழாவிற்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் சுந்தர்,ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூரணிம்மா வரவேற்றார் சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி தண்ட பாணி கலந்துகொண்டு நான்கு சக்கர வாகனம் மற்றும் இரண்டு சக்கர வாகன நிறுத்த வசதிகளை திறந்து வைத்து . கார் நிறுத்துவதற்கானமுதல் டோக்கனை விழுப்புரம் மாவட்ட அரசு வக்கீல் சுப்பிரமணியிடம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து பயன் தரும் மரக்கன்றுகளையும் மூலிகை செடிகளையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தண்டபாணி,சுந்தர்,ஆனந்த் வெங்கடேஷ் நட்டனர்.
விழாவில் விழுப்புரம் மாவட்ட கிழமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி,விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி,விழுப்புரம் எஸ்.பி.சசாங் சாய், அரசு வக்கீல்கள் நாகராஜன் எம். எஸ். நட ராஜன்விழுப்புரத்தில் உள்ள அனைத்து வக்கீல்கள் சங்கங்களின் நிர்வாகிகள் தயானந்தம், காளிதாஸ்,சண்முகம்,பத்மநாபன்,மூத்த வழக்கறிஞர்கள் இள ங்கோவன், ராஜாராமன், ராதாகிருஷ்ணன், மற்றும் நீதிமன்ற அலுவலக அலுவலர்கள்,தலைமை எழுத்துகள் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்






