search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி  பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் பேச்சு போட்டி: மாவட்ட கலெக்டர் தகவல்
    X

    கள்ளக்குறிச்சி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் பேச்சு போட்டி: மாவட்ட கலெக்டர் தகவல்

    • பேச்சுப் போட்டி நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
    • பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் இந்த பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ் வளர்ச்சித் துறை யின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருகின்ற 4-ந் தேதி அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் 11- ந் தேதி கலைஞர் பிறந்த நாளை யொட்டி தியாக துருகம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கானப் பேச்சுப் போட்டி காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற வுள்ளது.

    மேலும் பேச்சுப்பேட்டி யில் பங்குபெற்று வெற்றி பெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியாக மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். மேலும், அரசுப் பள்ளி மற்றும் கல்லூரியை சேர்ந்த தலா ஒரு மாணவருக்கு சிறப்புப் பரிசு தொகை ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.24 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் இந்த பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள் ளார்.

    Next Story
    ×