என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்கராபுரத்தில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்
- மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- மணிப்பூர் சம்பவத்தை தடுக்க தவறிய மத்திய அரசு
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகர மும்முனை சந்திப்பில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மீரான் ஷா தலைமை தாங்கினார். கிராத் மன்சூர் அஹமத் ஹஜரத் ஓதினார். மாநில நிர்வாகி நவாப் ஜான் அனைவரையும் வரவேற்றார். மாவட்டத் தலைவர் பீர் முகமது முன்னிலை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் சாதிக் பாஷா, மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான், எஸ்.டி.பி.ஐ., கட்சி மாவட்டத் தலைவர் முகமது ரபிக், விடுதலை சிறுத்தை ஒன்றிய செயலாளர் தலித் சந்திரன் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மணிப்பூர் சம்பவத்தை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முடிவில் மாவட்டத் துணைச் செயலாளர் ஜாபீர் உசேன் நன்றி கூறினார்.






