தியாகதுருகத்தில் நர்சிங் மாணவி மாயம்

அஸ்வினி அதே பகுதியில் உள்ள தனியார் நர்சிங் பயிற்சி மையத்தில் டிப்ளமோ படித்து வருகிறார். சம்பவத்தன்று பயிற்சி மையத்திற்கு சென்ற வர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
தியாகதுருகத்தில் நர்சிங் மாணவி மாயம்
Published on

கள்ளக்குறிச்சி:

திருக்கோவிலூர் அம்மன் கொள்ளை மேடு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் தியாகதுருகம் செல்வா நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் அஸ்வினி (20) இவர் இதே பகுதியில் உள்ள தனியார் நர்சிங் பயிற்சி மையத்தில் டிப்ளமோ படித்து வருகிறார். இந்நிலையில் சம்ப வத்தன்று பயிற்சி மையத்திற்கு சென்ற வர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து இவரது தந்தை நடராஜன் தியாகதுருகம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com