என் மலர்
காஞ்சிபுரம்
‘ஜெட் ஏர்வேஸ்’ விமான நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. நேற்று முதல் அந்த நிறுவனத்துக்கு எரிபொருள் வழங்குவதை எண்ணை நிறுவனம் நிறுத்தி விட்டது. இதைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து ‘ஜெட் ஏர்வேஸ்’ விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது.
இன்று காலை 1.13 மணிக்கு பாரீஸ் செல்லும் விமானம் மற்றும் காலை 11.25, மாலை 4.50 மணிக்கு மும்பை செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதுபற்றி நேற்று மாலையே பயணிகளுக்கு விமான நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் வேறு விமானத்தில் புறப்பட்டு சென்றனர். #ChennaiAirport #JetAirways
சார்ஜாவில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் வந்தது.
அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது ஒரு பெண் பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர். அப்போது அவர் தங்கத்தை பவுடராக்கி பாக்கெட்டுகளாக உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது.
இதையடுத்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த எடை 1 கிலோ 200 கிராம் ஆகும்.
இதே போல இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் உடலில் மறைத்து தங்க கட்டி கடத்தி வந்த சென்னை மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 5 வாலிபர்கள் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 1 கிலோ 600 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தங்கத்தின் மதிப்பு ரூ.92 லட்சம் ஆகும். இது தொடர்பாக தங்கம் கடத்தி வந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். #ChennaiAirport #GoldSeized
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு தொகுதிக்கு உட்பட்ட அம்பத்தூர் பகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மக்கள் நலனை மட்டுமே சிந்திக்கும் கட்சி திமுக தான். எண்ணற்ற பல நல்ல திட்டங்கள் திமுக ஆட்சி காலத்தில் நிறை வேற்றி உள்ளோம். அம்பத் தூர் பகுதியில் புதிய ரெயில் முனையம் அமைக்கபடும். அதனால்தொழில் வளம் பெரு கும்.மத்தியில் நிலையான ஆரோக் கியமான ஆட்சி அமைய உதயசூரியனுக்கு வாக்களியுங் கள் என பேசினார். வேட்பாளர் டி.ஆர்.பாலுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். சிறு வர்கள் கலைஞர், பெரியார் உள்ளிட்ட. தலைவர்கள் வேடம் அணிந்து வரவேற்ற னர். சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே. சேகர் பாபு எம்.எல்.ஏ., தி.மு.க. வடக்கு பகுதி செயலா ளர் ஜோசப் சாமு வேல் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்று உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தனர். #LokSabhaElections2019
சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகிற 12-ந் தேதி தமிழ்நாடு வருகிறார். அப்போது அவர் சேலம், தேனி, கிருஷ்ணகிரி, விருதுநகர் ஆகிய இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார்.
ராகுல் பங்கேற்கும் தேர்தல் பிரசார கூட்டங்கள் பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக அமையும். விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு டெல்லியில் அமித்ஷாவை சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் கோரிக்கைகளை அமித்ஷா கேட்டறிந்து செய்கிறோம் என்று சொல்லி இருப்பதாக அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
டெல்லியில் 150 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணுவையும், விவசாயிகளையும் அமித்ஷாவோ, மோடியோ யாரும் சந்திக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்களை நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

பிரதமர் மோடி கோவையில் பேசும்போது ஜி.எஸ்.டி. பிரச்சினைகளை சரி செய்வேன் என்று கூறி இருக்கிறார். இதைத்தான் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராகுல்காந்தி, ப.சிதம்பரம் சொன்னார்கள். அப்போது எங்கள் கருத்தை கேட்கவில்லை. நாங்கள் கூறும் ஆலோசனை முட்டாள்தனமானது என்று மோடி கூறினார். ஆனால் இப்போது ஜி.எஸ்.டி. வரியை சரி செய்கிறேன் என்று கூறுகிறார்.
பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் நதிகளை இணைப்போம் என்று கூறி இருப்பதை ரஜினி தெரிந்து ஆதரித்தாரா? இல்லை தெரியாமல் ஆதரித்தாரா? என்பது தெரியவில்லை. நாடு முழுவதும் நதிகளை இணைப்பது சாத்தியமில்லை.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுப்பதை தடை செய்ய வேண்டும். தேனியில் ஆரத்தி எடுப்பவர்களுக்கு அ.தி.மு.க.வினர் பணம் பட்டுவாடா செய்கிறார்கள்.
தேர்தலுக்கு முன்பே அங்கு வாக்காளர்களுக்கு ரூ.1000 சென்று விட்டது. இதை காவல்துறையோ, தேர்தல் ஆணையமோ கண்டு கொள்ளவில்லை.
ஏ.டி.எம். பணம், விவசாயிகளின் பணத்தை பிடிக்கும் தேர்தல் அதிகாரிகள் இதை ஏன் கண்டு கொள்ளவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #KSAlagiri
திருப்போரூர்:
காஞ்சி பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம்குமரவேல், மதுராந்தகம் நகராட்சியில் 24 வார்டுகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார் மற்றும் கருங்குழி பேரூராட்சி, அச்சரபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கிராம மக்களின் முக்கிய அடிப்படைத்தேவைகளை மீண்டும் வெற்றிபெற்றால் செய்து தருவதாக உறுதியளித்து வாக்குகள் சேகரித்தார்.
மதுராந்தகம் பகுதியில் எம்.ஜி.ஆர் வேடமணிந்த தொண்டருடன் வேட்பாளர் மரகதம்குமரவேல் வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரித்தார். வேட்பாளருடன் அ.தி.மு.க. மாநில இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, ஒன்றிய செயலாளர் அப்பா துரை, நகரசெயலாளர் ரவி, கருங்குழி பழனி, மஞ்சுளா புருஷோத்தமன், அச்சரபாக்கம் மெய்யப்பன், சுப்பிரமணி, முருகதாஸ், பா.ம.க மாநில துணைசெயலாளர் பொன். கங்காதரன், மாவட்ட செயலாளர் கோபால கண்ணன், தேமுதிக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், பா.ஜ.க நிர்வாகிகள் செந்தமிழரசு, தயாளன், ருத்திரகோட்டி, பாலாஜி, த.மா.கா. ஆதிகேசவலு, பழனி, புரட்சிபாரதம் உள்ளிட்ட கூட்டணியினர் சென்று ஆதரவு திரட்டினர்.
சோழிங்கநல்லூர்:
நீலாங்கரை, கிழக்கு கடற் கடை சாலையில் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. இங்கு கன்னியா குமரியை சேர்ந்த அந்தோணி (வயது27) என்பவர் விடுதியில் தங்கி ஆசிரியராக வேலைபார்த்து வந்தார். அவர் கடந்த ஒரு ஆண்டாக 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் இன்று காலை வழக்கம்போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது ஒரு வகுப்பறையில் ஆசிரியர் அந்தோணி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் நீலாங்கரை போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
பள்ளி நிர்வாகத்தினரிடம் ஏற்பட்ட மோதலில் அந்தோணி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மற்ற ஆசிரியர்களிடமும் விசாரணை நடக்கிறது. ஆசிரியர் தற்கொலையை அடுத்து பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.
பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் தூக்குபோட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறையை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா. இவர் பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் தங்கி ஓட்டலில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
கடந்த 5-ந் தேதி அவர் (வெள்ளிக்கிழமை) பணி முடிந்து வீட்டுக்கு சென்றார். அப்போது 3 வாலிபர்கள் அவரை கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறிக்க முயன்றனர்.
இதில் செல்போனை கொடுக்க மறுத்த ராஜ கண்ணனை மர்ம கும்பல் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்று விட்டனர்.
பலத்த காயம் அடைந்த ராஜகண்ணன் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இது குறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். கொலை தொடர்பாக பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த லோகேஷ், ரோகித் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மேலும் முக்கிய குற்றவாளியான பொழிச்சலூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் என்பவரின் மகன் லட்சுமணனை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் லட்சுமணனை இன்று காலை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். லட்சுமணன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. #tamilnews
தாம்பரம்:
திருப்போரூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் மற்றும் காஞ்சிபுரம் தொகுதி அ.தி.மு.க. பாராளுமன்ற வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆகியோரை ஆதரித்து காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரன் மேலக் கோட்டையூர் கிராமத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது வயல்வெளியில் விவசாயம் செய்து கொண்டிருந்த கிராமப்புற பெண்களிடம் அ.தி.மு.க. அரசால் பெண்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ள மகத்தான திட்டங்களான தாலிக்கு தங்கம், கர்ப்பிணி உதவித்தொகை, கலப்பு திருமண உதவித் தொகை, பெண்களுக்கு பாதி விலையில் ஸ்கூட்டி, பள்ளி மாணவர்களுக்கு மடிக் கணினி, சைக்கிள் பிறக்கும் குழந்தைகளுக்காக பரிசு பெட்டி போன்றவற்றை அ.தி.மு.க. அரசு கிராமப்புற பெண்கள் பயனடையும் வகையில் செயல்படுத்தி வருகிறது.
அதிமுக அரசில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டங்களை பார்த்து வியந்த பிற மாநில அரசுகள் தற்போது அ.தி.மு.க. அரசின் இந்த திட்டங்களை அவர்கள் மாநிலத்தில் செயல்படுத்தி வருகின்றனர் இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. என்று எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார் அவருடன் மாவட்ட வர்த்தகப் பிரிவு செயலாளர் காசிராஜன் மற்றும் நிர்வாகிகள் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சென்று ஆதரவு திரட்டினர். #LokSabhaElections2019 #ADMK
திருப்போரூர்:
காஞ்சி பாராளுமன்ற அ.தி. மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல், சித்தாமூர் ஒன்றியத் திற்குட்பட்ட சரவம்பாக்கம், விளாங்காடு, புத்திரன்கோட்டை, இரும்புலி, தண்டலம், பருக்கல், பெருக்கரணை, நெற்குனம், உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் வீதி வீதியாக சென்று வாக்குகள் சேகரித்தார். பெண்கள் மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். இப்பகுதி மக்களின் குறைகளை கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றுவேன் என கூறி வேட்பாளர் மரக தம்குமரவேல் வாக்குகள் சேகரித்தார்.
வேட்பாளருடன் சித்தாமூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மருத்துவரணி டாக்டர். பிரவீன்குமார், பா.ம.க. பொன்.கங்காதரன், தேமுதிக ஒன்றியசெயலாளர் பகதூர்சேட்டு, பா.ஜ.க. மாவட்டதலைவர் செந்தமிழ்அரசு, த.மா.கா. புரட்சிபாரத உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் சென்று வாக்கு சேகரித்தனர். #LokSabhaElections2019 #ADMK
திருப்போரூர்:
திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறு முகம். தினமும் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பொது மக்களிடம் தனது ஆதரவாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்குகள் சேகரித்து வருகிறார்.
பி.வி.களத்தூர், ஆனூர், காட்டூர், கருமாரப்பாக்கம் கிராமங்களில் வேட்பாளர் எஸ்.ஆறுமுகம் பொது மக்களிடம் அதிமுக அரசின் சாதனைகளை விளக்கியும், இப்பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்து இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார்.
அ.தி.மு.க. ஒன்றியசெயலாளர் விஜயரங்கன், ஒன்றிய பொருளாளர் அரிதாஸ், பா.ம.க மாவட்டசெயலாளர் காரணை ராதா, தேமுதிக ஒன்றிய செயலாளர் பிரகாஷ், உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அவருடன் வாக்கு சேகரித்தனர். #LokSabhaElections2019
தாம்பரம்:
வண்டலூரில் இருந்து கோயம்பேடு நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பல்லாவரம் ரேடியல் சாலையை இணைக்கும் மேம்பாலத்தில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது திடிரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் பஸ்சின் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குரோம்பேட்டையை சேர்ந்த பூமா(66) என்ற பெண் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பஸ் டிரைவர் பாலமுருகனை கைது செய்தனர்.
போரூர்:
கோயம்பேடு நூறடி சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் கத்தி, செல்போன்கள் பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் கோயம் பேடு, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி, செல்போன் பறிப்பு மற்றும் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததையும் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஆதம், நெற்குன்றத்தைச் சேர்ந்த விக்னேஷ், பிரவீன் ராஜேஷ், பாலாஜி, மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த செல்வா மற்றும் 18வயது சிறுவன் ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார்சைக்கிள்கள், கத்தி, 12 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.






