என் மலர்
செய்திகள்

சித்தாமூர் ஒன்றியத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம்குமரவேல் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பு
திருப்போரூர்:
காஞ்சி பாராளுமன்ற அ.தி. மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல், சித்தாமூர் ஒன்றியத் திற்குட்பட்ட சரவம்பாக்கம், விளாங்காடு, புத்திரன்கோட்டை, இரும்புலி, தண்டலம், பருக்கல், பெருக்கரணை, நெற்குனம், உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் வீதி வீதியாக சென்று வாக்குகள் சேகரித்தார். பெண்கள் மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். இப்பகுதி மக்களின் குறைகளை கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றுவேன் என கூறி வேட்பாளர் மரக தம்குமரவேல் வாக்குகள் சேகரித்தார்.
வேட்பாளருடன் சித்தாமூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மருத்துவரணி டாக்டர். பிரவீன்குமார், பா.ம.க. பொன்.கங்காதரன், தேமுதிக ஒன்றியசெயலாளர் பகதூர்சேட்டு, பா.ஜ.க. மாவட்டதலைவர் செந்தமிழ்அரசு, த.மா.கா. புரட்சிபாரத உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் சென்று வாக்கு சேகரித்தனர். #LokSabhaElections2019 #ADMK






