என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சப்-இன்ஸ்பெக்டர் மகன்"

    தொழிலாளி கொலை தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் மகன் கோர்ட்டில் சரணடைந்தார்.
    தாம்பரம்:

    மயிலாடுதுறையை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா. இவர் பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் தங்கி ஓட்டலில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

    கடந்த 5-ந் தேதி அவர் (வெள்ளிக்கிழமை) பணி முடிந்து வீட்டுக்கு சென்றார். அப்போது 3 வாலிபர்கள் அவரை கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறிக்க முயன்றனர்.

    இதில் செல்போனை கொடுக்க மறுத்த ராஜ கண்ணனை மர்ம கும்பல் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்று விட்டனர்.

    பலத்த காயம் அடைந்த ராஜகண்ணன் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

    இது குறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். கொலை தொடர்பாக பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த லோகேஷ், ரோகித் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    மேலும் முக்கிய குற்றவாளியான பொழிச்சலூர் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் என்பவரின் மகன் லட்சுமணனை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் லட்சுமணனை இன்று காலை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். லட்சுமணன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    ×