என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் தரிசன பெருவிழா கடந்த ஜூலை 1-ந் தேதி தொடங்கி 48 நாட்கள் நடைபெற்றது.
ஜூலை 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை சயன கோலத்திலும், ஆகஸ்டு 1-ந் தேதி முதல் 17-ந் தேதி அதிகாலை வரை நின்ற கோலத்திலும் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளித்த அத்திவரதரை தரிசிக்க தமிழகம் முழுவதும் இருந்து மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சீபுரத்துக்கு திரண்டனர்.
அவ்வாறு திரண்டபக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசித்து மகிழ்ந்தனர். காஞ்சீபுரத்தில் தினந்தோறும் திரண்ட லட்சக்கணக்கான பக்தர்களால் நகரம் முழுவதும் மக்கள் தலைகளாக காட்சி அளித்தது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி போயினர். எனினும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கூட்டத்தை ஒழுங்குபடுத்தியதால் அத்திவரதர் தரிசன விழா சிறப்பாக முடிந்தது.
அத்திவரதர் வைபவத்துக்காக பிரத்யேகமாக கோவிலின் உள்ளே 18 தற்காலிக உண்டியல் வைக்கப்பட்டு இருந்தன. நேற்றுவரை 18 உண்டியல்களில் 13 உண்டியல்கள் எண்ணப்பட்டன. இதில் ரூ.9.90 கோடி பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 5 உண்டியல்கள் எண்ணப்பட உள்ளது.
வைக்கப்பட்ட 18 உண்டியல்கள் 3 சுற்று என்ற அளவில் சுமார் 50 முறை எண்ணப்பட்டதாக கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் தெரிவித்தார். மேலும் பக்தர்களால் 164 கிராம் தங்கம் மற்றும் 4959 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது.
பெருங்களத்தூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பீர்க்கங்கரணை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 சரக்கு ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 1,338 கிலோ எடையுள்ள குட்கா இருந்தது.
இதையடுத்து ஆட்டோவில் இருந்த பிரகாஷ், நூர்முகமது, பவுன்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். விசாரணையில் பீர்க்கங்கரணை சேர்ந்த முனிசாமி என்பவர் குட்காவை குடோனில் பதுக்கி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
பெருங்குடி கல்லுகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (20). சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த துரைப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராஜின் நண்பரிடம் விசாரித்தனர். அவர் கூறும் போது, ஜெயராஜ் ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்தார்.
நேற்று தனது காதலை அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். ஆனால் காதலை அப்பெண் ஏற்காததால் அவர் மனம் வேதனையில் இருந்தார்.
இதனால் தூக்கு போட்டு தற்கொலை செய்ததாக நண்பர் போலீசில் தெரிவித்தார்.
ஆலந்தூர்:
தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பார்வையாளர் முகுல் வாஸ்னிக் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராஜீவ் காந்தி நாட்டின் வளர்ச்சிக்காக சிறப்பான திட்டங்களை கொண்டுவந்தவர். ராஜீவ் காந்தி. பஞ்சாயத்து ராஜ், கல்வி கொள்கை மற்றும் தகவல் தொடர்பு புரட்சி ஆகியவற்றின் மூலம் நாட்டில் மலர்ச்சியை ஏற்படுத்தினார்.
நாடுமுழுவதும் அவரது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டிலும் ராஜீவ் காந்தி பிறந்தநாள் காங்கிரஸ் சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
முத்தலாக் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளிலும் வாக்கு வங்கியை குறிவைத்தே மோடியின் பா.ஜனதா அரசு செயல்படுகிறது. இதற்கு அமித் ஷா உறுதுணையாக இருக்கிறார்.
2014 முதல் பிரிவினை வாதத்தை ஊக்குவித்து அதன்மூலம் வாக்குகளை பெறுவதில் பா.ஜனதா முழுமையாக ஈடுபடுகிறது. காங்கிரஸ் என்றும் நாட்டின் ஒற்றுமைக்காகவே குரல் கொடுத்து வருகிறது. அதன் அடிப்படையிலேயே பா.ஜனதாவின் தவறான திட்டங்களை எதிர்க்கிறது.
தி.மு.க-காங்கிரஸ் உறவு வலுவாகவே இருக்கிறது. எங்கள் கூட்டணி சிறந்த கூட்டணியாக இருந்து வருகிறது. காஷ்மீர் விவகாரத்தில் கைதானவர்களை விடுதலை செய்ய கோரி தி.மு.க. சார்பில் வருகிற 22-ந்தேதி டெல்லியில் எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
காஷ்மீர் விவகாரத்தில் மக்கள் மனநிலைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. பா.ஜனதா தவறான தகவல்களை மக்களுக்கு தெரிவித்து வருகிறது. டெல்லியில் நடை பெறும் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலந்தூர்:
சென்னை சர்வதேச விமான நிலைய புறப்பாடு பகுதியில் உள்ள இருக்கையில் ஒரு பை இருந்தது. நீண்ட நேரமாக அதை எடுக்க யாரும் வரவில்லை. ஒலி பெருக்கியில் அறிவிப்பு செய்யப்பட்டது என்றாலும் பயன் இல்லை.
இதையடுத்து மத்திய தொழிற்படை போலீசார் மோப்பநாய் மற்றும் வெடி குண்டு சோதனை கருவிகளுடன் அங்கு சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சோதனையில் அந்த பையில் பழைய துணிகள் இருந்தது தெரிய வந்தது. அதன்பிறகே போலீசாரும், அங்கு இருந்தவர்களும் கடும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
அதன் பின்னர் 30 பட்டாச்சாரியார்கள் ‘கோவிந்தா’, ‘கோவிந்தா’ என்று பக்தி கோஷங்களை எழுப்பியபடி அத்திவரதரை சுமந்து சென்றனர். நள்ளிரவு 12¾ மணியளவில் அனந்தசரஸ் திருக்குளத்தில் உள்ள மண்டபத்தில் அத்திவரதர் சிலை சயனநிலையில் வைக்கப்பட்டது. அத்திவரதர் சிலையை சுற்றி கருங்கல்லால் ஆன 16 நாகர் சிலைகள் வைக்கப்பட்டன.
அத்திவரதரை குளத்தில் உள்ள மண்டபத்தில் வைக்கும்போது காஞ்சீபுரத்தில் பலத்த மழை பெய்தது. மழை நேற்று காலை வரை நீடித்தது. அத்திவரதர் சிலையை இந்த குளத்தில் இருந்து எடுப்பதற்கு முன்னர் அதில் உள்ள தண்ணீர் அருகில் உள்ள பொற்றாமரை குளத்திற்கு மாற்றப்பட்டது. அந்த தண்ணீரும் தற்போது குழாய் மூலம் அனந்தசரஸ் குளத்தில் விடப்படுகிறது குளத்தை சுற்றிலும் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு மாத காலம் போலீசார் கோவில் குளத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
அத்திவரதர் தரிசனத்தையொட்டி மூலவர் வரதராஜபெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் அத்திவரதர் தரிசனம் முடிவடைந்ததையடுத்து நேற்று முதல் பக்தர்கள் வரதராஜபெருமாளை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வரதராஜபெருமாளை தரிசித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ரெயில்வே ஸ்டேஷன் தெருவில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று அதிகாலையில் ஒரு சிறுவன், ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்து, ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொண்டிருந்தான்.
அப்போது அந்த வழியாக நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தவர்கள், இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று, பொதுமக்கள் உதவியுடன் ஏ.டி.எம். மையத்தில் எந்திரத்தை உடைத்து கொண்டிருந்த சிறுவனை கையும் களவுமாக மடக்கிப்பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.
அதில் அவர், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து அதில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அந்த சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து, அவனை கைது செய்தனர்.
நடைபயிற்சியில் ஈடுபட்டவர்கள் போலீசாருக்கு உரிய நேரத்தில் தகவல் கொடுத்ததால் ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள லட்சக்கணக்கான பணம் கொள்ளை போகாமல் தடுக்கப்பட்டது.
மேலும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது சிறுவன் மட்டும்தானா? அல்லது வேறு யாராவது உடந்தையா? எனவும் அவர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என்பதை அறிய ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த சம்பவம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்துக்குள் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் அத்திவரதர் வைபவம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் அங்குள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஜூலை 31-ந்தேதி வரை சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர், பின்னர் ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் நிறைவு நாள் வரை நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் அத்திவரதர்.
வாழ்க்கையில் அபூர்வமாக கிடைக்கும் தரிசனம் என்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், கேரளா, மராட்டியம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து அத்திவரதரை தரிசித்தனர்.

நேற்று வரை அத்திவரதரை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் பக்தர்கள் தரிசனம் நிறைவடைந்ததையொட்டி, அன்று இரவே கோவில் கிழக்கு ராஜ கோபுரம் மூடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் மீண்டும் வைக்கப்படும் 48-ம் நாளான நேற்று வி.ஐ.பி. பக்தர்கள் உள்பட எவரும் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படவில்லை. காலை பட்டாச்சாரியார்கள் அத்திவரதருக்கு காவி மற்றும் ரோஜா நிற பட்டாடை அணிவித்து, பூஜை செய்தனர். இதையடுத்து ஆகம விதிப்படி, விசேஷ பூஜைகள் செய்யப்பட்டன.
நேற்று அதிகாலை அத்திவரதருக்கு பரிகார பூஜைகள் தொடங்கியது. அடுத்த 40 ஆண்டுகளுக்கு சிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அத்திவரதருக்கு 60 கிலோ மூலிகை தைலம் பூசப்பட்டது. சாம்பிராணி தைலம் உள்ளிட்ட மூலிகை திரவியங்கள் அத்திவரதர் சிலைக்கு பூசப்பட்டது. இந்த 60 கிலோ மூலிகையில் சந்தானாதி தைலம் கலந்துள்ளது. இதில், குங்குமப்பூ, வெட்டிவேர், நொச்சிவேர், சாம்பிராணி, ஏலம், சாதிக்காய், லவங்கம் உள்ளிட்டவை கலந்து இருந்தன.

முன்னதாக, நேற்று மாலை 4 மணி அளவில் அத்திவரருக்கு 48 வகையான நைவேத்தியங்களை பட்டாச்சாரியார்கள் படைத்து கற்பூர தீபாராதனை காட்டினார்கள். பிறகு காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அத்திவரதரை காண அவர் இருக்கும் இடமான வசந்த மண்டபத்திற்கு வந்தார். அப்போது, வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி கொடுத்து விடைகொடுத்தார். பிறகு வரதராஜ பெருமாளுக்கு கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என்று பக்தி கோஷமிட்டனர்.
பிறகு அத்திவரதருக்கு மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை தைலக்காப்பை கோவை பட்டாச்சாரியார்கள் தடவினார்கள். பிறகு அத்திவரதர் வெண் பட்டு அணிவித்து வெள்ளி அணிவிக்கப்பட்டு வசந்த மண்டபத்தில் இருந்து கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் சயன கோலத்தில் நேற்று நள்ளிரவு வைக்கப்பட்டார். அனந்தசரஸ் குளத்தில் ஜலவாசம் செய்யும் அத்திவரர், 40 ஆண்டுகளுக்கு 2059-ம் ஆண்டு மீண்டும் அருள்பாலிக்க வருவார்.
கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்துக்குள் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் அத்திவரதர் வைபவம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் அங்குள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஜூலை 31-ந்தேதி வரை சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர், பின்னர் கடந்த 1-ந்தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளித்தார்.
வாழ்க்கையில் அபூர்வமாக கிடைக்கும் தரிசனம் என்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், கேரளா, மராட்டியம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து அத்திவரதரை தரிசித்தனர். அத்திவரதரை சயன கோலத்தில் 43 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அப்படி தரிசனம் செய்தவர்களில் பலர், அவர் நின்ற கோலத்தில் அருள்பாலித்த போதும் அவரை தரிசிப்பதற்காக வந்தனர். பொதுதரிசன வரிசையில் பல மணி நேரம் காத்து நின்று மக்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், கலையுலகைச் சேர்ந்தவர்கள் என ஏராளமான முக்கிய பிரமுகர்களும் வந்து அத்திவரதரை தரிசித்தனர்.
முதல் 4 நாட்கள் கூட்டம் ஓரளவுதான் இருந்தது. அதன் பின்னர் தினமும் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. விடுமுறை நாட்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. அதிகபட்சமாக 5 லட்சம் பேர் வரை ஒரு நாளில் தரிசனம் செய்து இருக்கின்றனர்.
தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்ததால் காஞ்சீபுரம் நகரமே விழாக்கோலம் பூண்டது. விடுமுறை நாட்களில் கட்டுக்கடங்காத பக்தர்கள் திரண்டனர். இதனால் போலீசார் பக்தர்களை பகுதி பகுதியாக பிரித்து தரிசனத்துக்கு அனுப்பினார்கள்.

கடைசி மற்றும் 47-வது நாளான நேற்று அத்திவரதருக்கு ரோஜா மற்றும் மஞ்சள் நிற பட்டாடை உடுத்தி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலை 5.45 மணிக்கு நடை திறக்கப்பட்டு கடைசி நாள் தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு அத்திவரதர் அருள்பாலித்தார்.
கடைசி நாளான நேற்றும் அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக காலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் திணறினார்கள்.
முக்கிய பிரமுகர்களுக்கான தரிசனம் நேற்று முன்தினத்தோடு முடிவுக்கு வந்ததால், நேற்று பொது தரிசனம் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வந்த பக்தர்கள், குறிப்பிட்ட இடத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு சுமார் 5 கி.மீ. தூரம் நடந்து சென்று நீண்ட வரிசையில் 9 மணி நேரம் காத்து நின்று அத்திவரதரை தரிசித்தனர்.
கடைசி நாளான நேற்று இரவு 9 மணி வரை சுமார் 4 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இரவு 9 மணி அளவில் ராஜகோபுர வாசல் மூடப்பட்டது. அப்போது கோவில் வளாகத்திற்குள் காத்திருந்த பத்தர்கள் மட்டும் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். இரவில் நீண்ட நேரம் தரிசனம் நீடித்தது. அதன்பின்னர் நேற்று இரவுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவடைந்தது.
நேற்று வரை அத்திவரதரை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று (சனிக்கிழமை) அதிகாலை அத்திவரதருக்கு பரிகார பூஜை தொடங்குகிறது. அடுத்த 40 ஆண்டுகளுக்கு சிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சாம்பிராணி தைலம் உள்ளிட்ட மூலிகை திரவியங்கள் அத்திவரதர் சிலைக்கு பூசப்படுகிறது.
இன்று இரவு 10 மணியில் இருந்து 12 மணிக்குள் அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்துக்குள் வைக்கப்படுகிறது. குளத்தில் உள்ள அத்திவரதர் மண்டபத்தின் கீழ் உள்ள அறையில் அத்திவரதர் சிலை வைக்கப்படும். அதன்பிறகு குளத்தில் வழக்கம்போல் நீர் நிரப்பப்படும்.
அனந்தசரஸ் குளத்தில் ஜலவாசம் செய்யும் அத்திவரர், 40 ஆண்டுகளுக்கு 2059-ம் ஆண்டு மீண்டும் அருள்பாலிக்க வருவார்.
அத்திவரதர் தரிசனத்துக்காக மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் திட்டக்குடியில் இருந்து கோயம்பேடு வந்த தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் புறப்பட தயாராக நின்று கொண்டிருந்தது.
அந்த பஸ்சில் வெங்கடாசலம் (39) என்பவர் கண்டக்டராக இருந்தார். புறப்படுவதற்கு முன்பு பஸ்சின் பின்புறம் ரோட்டில் நின்றபடி பயணிகளை அழைத்துக்கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கண்டக்டர் வெங்கடாசலம் தோளில் தொங்கிக் கொண்டிருந்த பணப்பையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மாயமாகினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடாசலம் இதுகுறித்து தாம்பரம் போலீசில் புகார் செய்தார். அதில் கொள்ளையர்கள் பறித்துச்சென்ற பணப்பையில் ரூ.10 ஆயிரம் இருந்ததாக தெரிவித்துள்ளார்.






