search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகுல் வாஸ்னிக்
    X
    முகுல் வாஸ்னிக்

    திமுக-காங்கிரஸ் உறவு வலுவாக இருக்கிறது: முகுல் வாஸ்னிக்

    திமுக, காங்கிரஸ் உறவு வலுவாக இருக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பார்வையாளர் முகுல் வாஸ்னிக் கூறியுள்ளார்.

    ஆலந்தூர்:

    தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பார்வையாளர் முகுல் வாஸ்னிக் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராஜீவ் காந்தி நாட்டின் வளர்ச்சிக்காக சிறப்பான திட்டங்களை கொண்டுவந்தவர். ராஜீவ் காந்தி. பஞ்சாயத்து ராஜ், கல்வி கொள்கை மற்றும் தகவல் தொடர்பு புரட்சி ஆகியவற்றின் மூலம் நாட்டில் மலர்ச்சியை ஏற்படுத்தினார்.

    நாடுமுழுவதும் அவரது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டிலும் ராஜீவ் காந்தி பிறந்தநாள் காங்கிரஸ் சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    முத்தலாக் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளிலும் வாக்கு வங்கியை குறிவைத்தே மோடியின் பா.ஜனதா அரசு செயல்படுகிறது. இதற்கு அமித் ஷா உறுதுணையாக இருக்கிறார்.

    2014 முதல் பிரிவினை வாதத்தை ஊக்குவித்து அதன்மூலம் வாக்குகளை பெறுவதில் பா.ஜனதா முழுமையாக ஈடுபடுகிறது. காங்கிரஸ் என்றும் நாட்டின் ஒற்றுமைக்காகவே குரல் கொடுத்து வருகிறது. அதன் அடிப்படையிலேயே பா.ஜனதாவின் தவறான திட்டங்களை எதிர்க்கிறது.

    தி.மு.க-காங்கிரஸ் உறவு வலுவாகவே இருக்கிறது. எங்கள் கூட்டணி சிறந்த கூட்டணியாக இருந்து வருகிறது. காஷ்மீர் விவகாரத்தில் கைதானவர்களை விடுதலை செய்ய கோரி தி.மு.க. சார்பில் வருகிற 22-ந்தேதி டெல்லியில் எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    காஷ்மீர் விவகாரத்தில் மக்கள் மனநிலைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. பா.ஜனதா தவறான தகவல்களை மக்களுக்கு தெரிவித்து வருகிறது. டெல்லியில் நடை பெறும் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×