search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mukul wasnik"

    • அதானிக்காக ஜனநாயகத்தை பிரதமர் நரேந்திர மோடி அழிக்க தயாராகிவிட்டார்.
    • நாட்டின் ஜனநாயகத்துக்கும், கருத்து சுதந்திரத்துக்கும் மிகப்பெரிய ஆபத்து வந்துள்ளது.

    சென்னை :

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத், காங்கிரஸ் எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், டாக்டர் செல்லக்குமார், விஷ்ணு பிரசாத், விஜய் வசந்த், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் 'பா.ஜ.க.வின் ஜனநாயக படுகொலை' என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட புத்தகத்தை முகுல் வாஸ்னிக் வெளியிட்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அதானியின் முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி உரையாற்றி 9 நாட்களுக்கு பின்னர் அவர் மீதான அவதூறு வழக்கு உயிர்ப்பிக்கப்பட்டது. பிரதமரை எதிர்த்து கேள்வி கேட்டதால் பின் தங்கிய வகுப்பினரை ராகுல்காந்தி குறிவைப்பதாக பா.ஜ.க.வினர் பொய் கட்டுக்கதையை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்திய ஒருவரால் எப்படி குறிப்பிட்ட சமூகத்தை குறிவைக்க முடியும்.

    குஜராத் கோர்ட்டு தீர்ப்பளித்த 24 மணி நேரத்தில் ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து மின்னல் வேகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு 30 நாட்கள் நீதிபதி கால அவகாசம் அளித்தும் தகுதிநீக்கம் செய்வதில் அவசரம் காட்டியது ஏன்? ராகுல்காந்தியை பார்த்து பா.ஜ.க. அஞ்சுவது ஏன்?

    அதானிக்காக ஜனநாயகத்தை பிரதமர் நரேந்திர மோடி அழிக்க தயாராகிவிட்டார். தற்போது நாட்டின் ஜனநாயகத்துக்கும், கருத்து சுதந்திரத்துக்கும் மிகப்பெரிய ஆபத்து வந்துள்ளது. இதனை பாதுகாக்க இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி அனைத்தையும் செய்யும்.

    திருடர்களையும், முறைகேடு செய்தவர்களையும் அம்பலப்படுத்திய ராகுல்காந்தியை மோடி அரசு குறி வைக்கிறது. இதைக்கண்டு ராகுல்காந்தியோ, காங்கிரஸ் கட்சியோ அஞ்சப்போவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்காக தமிழக காங்கிரசில் முகுல்வாஸ்னிக் தலைமையில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. #congress #parliamentelection #mukulwasnik

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியில் ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் பணிக்குழு, பிரசார குழு, விளம்பர குழு, ஊடக தொடர்பு குழு மற்றும் நிர்வாக குழுக்களை அமைக்கும்படி ராகுல் காந்தி உத்தரவிட்டு இருந்தார். அதன்படி தமிழகத்திலும் இந்தகுழுக்களை அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சஞ்சய் தத் முன்னிலையில் கடந்த வாரம் நடந்தது.

    ஆனால் ஒருமித்த முடிவு எதுவும் எடுக்கப்படாததால் டெல்லியில் முகுல்வாஸ்னிக் தலைமையில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் குழுக்களுக்கான பட்டியல் தயாராகி இருக்கிறது.

    ஒருங்கிணைப்பு குழு முகுல்வாஸ்னிக் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் குமரிஅனந்தன், இளங்கோவன், மற்றும் ப.சிதம்பரம், தங்கபாலு, கிருஷ்ணசாமி, சுதர்சன நாச்சியப்பன், தனுஷ்கோடி ஆதித்தன், மாணிக் தாகூர் உள்பட 10 பேர் பெயர் இடம் பெற்றுள்ளது.

    தேர்தல் பணிக்குழுவில் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த 10 பேர் மற்றும் அகில இந்திய செயலாளர்கள் செல்லக்குமார், சி.டி.மெய்யப்பன், நடிகை குஷ்பு, ஆரூண், பீட்டர் அல்போன்ஸ், யசோதா, கோபிநாத் உள்பட 20 பேர் பெயர் இடம் பெற்றுள்ளது.

    பிரசார குழு தலைவர் பதவிக்கு இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விளம்பர குழுவுக்கு வசந்தகுமார், தங்கபாலு, ஆகியோரது பெயரும் தகவல் தொடர்பு குழுவுக்கு கோபண்ணா, அழகிரி, விஜய தரணி, ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் 5 பேர் கொண்ட நிர்வாககுழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இது தவிர தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா, விஜயதரணி, அமெரிக்க நாராயணன், எம்.ஜோதி, இதயதுல்லா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, உள்பட 10 பேர் கொண்ட பெயர் பட்டியலும் தயாராகி இருக்கிறது.

    இந்த பெயர் பட்டியல்கள் அனைத்தும் ராகுல் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ராகுல் காந்தி 22-ந்தேதி டெல்லி திரும்புகிறார். அவர் ஒப்புதல் அளித்ததும் அதிகாரப்பூர்வமாக பட்டியல் வெளியாகும். என்று கூறப்படுகிறது. #congress #parliamentelection #mukulwasnik

    ரபேல் விமான ஒப்பந்த ஊழல் குறித்து விசாரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்று, கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் கூறினார். #MukulWasnik
    கோவை:

    பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் போர் விமானம் வாங்குவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்று உள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை குற்றம் சாட்டி வருகின்றன. இந்த ஊழலை கண்டித்து கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது ரபேல் விமானம் வாங்குவதற்காக உலகளாவிய டெண்டர் விடப்பட்டது. இறுதியில் டசால்ட் என்ற பிரான்சு நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 126 விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒவ்வொரு விமானத்தின் விலையும் ரூ.526 கோடியாகும்.

    ஆனால் நரேந்திர மோடி பிரதமரானதும் 126 விமானங்களுக்கு பதிலாக வெறும் 36 விமானங்களை வாங்க ஒப்பந்தம் போட்டார். ஒரு விமானத்தை ரூ.526 கோடிக்கு வாங்குவதற்கு பதில் ரூ.1,670 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

    மன்மோகன் சிங் போட்ட ஒப்பந்தம் மூலம் ரபேல் விமானங்கள் வாங்க ரூ.19 ஆயிரம் கோடி போதும். ஆனால் நரேந்திரமோடி போட்ட ஒப்பந்தம் மூலம் வாங்க வேண்டும் என்றால் ரூ.60 ஆயிரம் கோடி வேண்டும். இதன் மூலம் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் முரண்பாடான தகவல்களை தெரிவித்து வருகிறார்.

    எனவே இந்த ஊழலை விசாரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். அந்த குழு இந்த ஒப்பந்தத்தின் ஒவ்வொரு அம்சம் குறித்தும் விசாரிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் திருநாவுக்கரசர் பேசும்போது, ‘ரபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து இருக்கிறது. தமிழகத்தில் நடப்பது பா.ஜனதாவின் பினாமி ஆட்சி. இதனால் அவர்கள் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் உள்ளனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிய மோடி பதவி விலக வேண்டும்’ என்று கூறினார். #MukulWasnik
    மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் 15 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முகுஸ்வாஸ்னிக் கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் ஓட்டல் சன்வேயில் நடந்தது.

    அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், புதுவை பொறுப்பாளருமான முகுல்வாஸ்னிக் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் கூட்ட முடிவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கடமையை செய்ய விடாமல் தடுக்கின்றனர். அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்கும், பொறுப்பில் உள்ளவரே இந்த செயலில் ஈடுபடுகின்றனர்.

    மத்தியில் ஆளும் பா.ஜனதா மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தது. ஆனால் அவற்றை நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக உயர் கல்வித்துறைக்கு ஒதுக்க வேண்டிய மத்திய நிதியை குறைத்துள்ளது.


    மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் 15 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். தற்போது வேளாண்மையில் இறக்குமதி அதிகமாகி, ஏற்றுமதி குறைந்துள்ளது. ஒரு சில மத்திய மந்திரிகளின் சர்ச்சை பேச்சுகளால் பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

    இதனால் பலர் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில் பீகாரில் மத்திய மந்திரியின் பேச்சுக்கு, அந்த மாநிலத்தின் முதல்-மந்திரியே கண்டனம் தெரிவித்துள்ளர்.

    இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தலைவரோ, பிரதமரோ கருத்து எதுவும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #BJP  #FarmersSuicide
    ×