search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதா ஆட்சியில் 15 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை- முகுல்வாஸ்னிக்
    X

    பா.ஜனதா ஆட்சியில் 15 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை- முகுல்வாஸ்னிக்

    மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் 15 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முகுஸ்வாஸ்னிக் கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் ஓட்டல் சன்வேயில் நடந்தது.

    அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், புதுவை பொறுப்பாளருமான முகுல்வாஸ்னிக் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் கூட்ட முடிவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கடமையை செய்ய விடாமல் தடுக்கின்றனர். அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்கும், பொறுப்பில் உள்ளவரே இந்த செயலில் ஈடுபடுகின்றனர்.

    மத்தியில் ஆளும் பா.ஜனதா மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தது. ஆனால் அவற்றை நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக உயர் கல்வித்துறைக்கு ஒதுக்க வேண்டிய மத்திய நிதியை குறைத்துள்ளது.


    மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் 15 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். தற்போது வேளாண்மையில் இறக்குமதி அதிகமாகி, ஏற்றுமதி குறைந்துள்ளது. ஒரு சில மத்திய மந்திரிகளின் சர்ச்சை பேச்சுகளால் பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

    இதனால் பலர் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில் பீகாரில் மத்திய மந்திரியின் பேச்சுக்கு, அந்த மாநிலத்தின் முதல்-மந்திரியே கண்டனம் தெரிவித்துள்ளர்.

    இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தலைவரோ, பிரதமரோ கருத்து எதுவும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #BJP  #FarmersSuicide
    Next Story
    ×