என் மலர்
ஈரோடு
ஈரோடு:
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தங்கமணி (வயது 70) என்பவர் உடல் நலக்குறைவால் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த மூதாட்டி இறந்தார். அவரது பெயர் மட்டும் தெரிய வந்துள்ளது. ஆனால் எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற மற்ற விவரங்கள் தெரியவில்லை. அவரது உடல் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி பிரேத கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் உள்ளன. இந்த சிறுத்தைகள் அவ்வப்போது ரோட்டை கடந்து செல்லும். மேலும் வனப்பகுதியில் உள்ள குட்டைகளில் தண்ணீர் குடித்தபடி செல்லும். அதே சமயம் இப்போது அடர்ந்த காட்டுக்குள் திரியும் சிறுத்தைகள் ஊருக்குள் புகும் சம்பவம் தொடர் கதையாகி விட்டது.
தாளவாடி, ஆசனூர் மற்றும் தலமலை, பண்ணாரி, கேர்மாளம் போன்ற வனப்பகுதிகளிலிருந்து நள்ளிரவில் ஊருக்குள் புகும் சிறுத்தைகள் ஆடு மாடு மற்றும் நாய்களையும் வேட்டையாடி கொன்று குவித்து வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் ஈரோடு மாவட்டம் ஆசனூர் பகுதியில் உள்ள பங்களா வீட்டுக்குள் ஒரு சிறுத்தை சர்வ சாதாரணமாக புகுந்தது. அந்த சிறுத்தை பங்களா போர்டிகோ முன் நிறுத்தப்பட்டுள்ள கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மத்தியியில் காட்டுக்குள் எப்படி பதுங்கி மெதுவாக போவது போல் பதுங்கியபடி சென்று பங்களா வாசலில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த கருப்பு கலர் நாய் மீது பாய்ந்து அதன் கழுத்து பகுதியை கவ்வியது.
சுதாரித்த அந்த நாய் திமிறி சிறுத்தையிடமிருந்து தப்பி வெளியே ஓடியது. அந்த சிறுத்தையும் அந்த நாயை விரட்டியபடி பாய்ந்து ஓடியது.
இந்த மெய் சிலிர்க்கும் காட்சிகள் அந்த பங்களா முன் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சி வாட்ஸ்-அப்பில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து சத்தியமங்கலம் வனப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘முன்பெல்லாம் சிறுத்தை மற்றும் புலி போன்ற விலங்குகள் எல்லாம் ஊருக்குள் வருவது கிடையாது. இப்போது மிகவும் சாதாரணமாகிவிட்டது. இதனால் நாங்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளோம். ஆகவே புலி, சிறுத்தை பேன்ற கொடிய விலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூண்டுகள் வைத்து அதனை பிடிக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை 33.3 கன அடி கொள்ளளவு கொண்டது. வடகிழக்கு பருவ மழையை நம்பி அணை நிரம்பும். தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருகிறது
இந்நிலையில் 18 அடியாக இருந்த நீர்மட்டம் 26 அடி உயர்ந்துள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 514 கன அடியாக வந்துகொண்டிருக்கிறது. மழையின் அளவு 75 மி.மீ. பொழிந்து உள்ளது. இது விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம், நீர் நிலைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
சத்தியமங்கலம், பவானி சாகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், பவானிசாகர் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் நீலகிரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையொட்டி பாசனத்துக்கும் குடிநீருக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இன்று காலை பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 95.88 அடியாக இருந்தது. 25.617 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3578 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அரக்கன் கோட்டை, காளிங்கராயன், கீழ்பவானி வாய்க்கால்களில் பாசனத்துக்கு 2100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நம்பியூர் அருகே உள்ள வேம்பாண்டாம் பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் புதிய கலை அரங்கம், வாழ்நாள் சாதனையாளர், பள்ளி ஆண்டு விழா என முப்பெரும் விழா நடந்தது.
பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பலமுரளி வரவேற்றார்.

சந்திரயான்-2 நிலவுக்கு அனுப்பியதில் சில சறுக்கல்கள் ஏற்பட்டு முழுமையான வெற்றி கிடைக்கவில்லை. இது நிரந்தரம் இல்லை. சில சறுக்கல்கள் வரத்தான் செய்யும். தொடர் முயற்சி வெற்றியை கொடுக்கும்.
நான் அரசு பள்ளியில் படித்ததால் தான் இந்த உயரத்துக்கு வர முடிந்தது. என்னால் சுயமாக சிந்திக்க முடிந்தது. அப்போது போதிய வசதிகள் இல்லை. இன்றைய மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதனால் வாழ்க்கையில் முன்னேறலாம்.
வாய்ப்புகள் கிடைக்காமல் பலர் வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள். வருங்காலத்தில் தாய்நாட்டில் தாய், தந்தை முன்பு சாதனைகள் உருவாக்க முடியும். அதற்கான சூழல் உருவாகி வருகிறது. யாரும் பிறக்கும்போது அறிவாளிகளாக பிறப்பது இல்லை. சரியான வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்பவர்கள் உயர்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு, நாராயணவலசு, திருமால் நகரைச் சேர்ந்தவர் பொன்சங்கர் (வயது 22). இவர் ஒரு பிரட் கம்பெனியில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு பொன்சங்கர் தனது குடும்பத்தினருடன் ஈரோடு ஈ.வி.என் ரோடு அருகே குடியிருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த பொன்சங்கர் திடீரென தூக்கு மாட்டிக்கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பொன் சங்கர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பொன் சங்கர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை. இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டி.என்.பாளையம் அடுத்த குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அணை நிரம்பியது.
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த டி.என்.பாளையம் வனசரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் கொங்கர்பாளையம் கிராம பகுதியில் அமைந்துள்ளது குண்டேரிப்பள்ளம் அணை.
42 அடி உயரம் கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் வாயிலாக 3000 ஏக்கர் விவசாய நிலங்களும் மறைமுக பாசனமாக 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
அணையின் நீர்பிடிப்பு மலைப்பகுதிகளான, குன்றி, விளாங்கோம்பை, மல்லியம்மன் துர்க்கம், கம்மனூர், கடம்பூர் போன்ற பகுதிகளில் பெய்த மழையால் நள்ளிரவு 2 மணியில் இருந்து குண்டேரிப்பள்ளம் அணைக்கு சுமார் 3000 கனஅடி அளவில் நீர்வரத்து வந்தது.
மலைபகுதிகளில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில், ஒரே நாள் இரவில் அணையின் நீர்மட்டம் 13 அடி உயர்ந்து அணை நிரம்பியுள்ளது.
இந்நிலையில் இன்று காலை 6 மணியில் இருந்து சுமார் 6 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து வந்துள்ள நிலையில் அணை நிரம்பி வழிகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் 6 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப் பட்டு வருகிறது.
இந்த உபரிநீரானது பள்ளத்தூர், வாணிப்புத்தூர் போன்ற கிராம பகுதிகளின் வாய்க்கால் வழியாக காவேரி ஆற்றில் சென்று சேருகிறது.
இந்நிலையில், வாணிப்புத்தூர், கொங்கர்பாளையம், பள்ளத்தூர் போன்ற கிராம புறங்களில் வருவாய் துறை சார்பில் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்டோரா போடப்பட்டு வருகிறது.
குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பி வெளியேறும் தண்ணீரால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு கோட்டை பழனிமலை கவுண்டர் வீதியை சேர்ந்தவர் குணசேகர் (வயது56). இவரது மனைவி சந்திரிக்கா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
குணசேகருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். இவர்கள் 3 பேருக்கும் சொந்தமான விடுதி ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள மேட்டூர் ரோட்டில் உள்ளது.
குணசேகர் எப்பவும் நடைபயிற்சி செல்வது வழக்கம். ஆனால் நேற்று நடைபயிற்சி செல்லாமல் நேராக விடுதிக்கு வந்து உள்ளார். விடுதியில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று பார்வையிட்டு பின்னர் மூன்றாவது மாடியிலிருந்து மொட்டை மாடிக்கு சென்ற குணசேகர் திடீரென அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். குணசேகர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை.
இந்நிலையில் குணசேகர் மொட்டை மாடிக்கு செல்வதும் தொடர்ந்து இரு முறை மொட்டை மாடியில் உள்ள சுவற்றில் ஏறி கீழே குதிக்க முயல்வதும் பின்னர் கீழே இறங்கி வருவதும் பின்னர் மீண்டும் மூன்றாவது முறையாக மொட்டை மாடி சுவற்றில் ஏறி தலைகீழாக குதிப்பதும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த காட்சியை பார்ப்பதற்கு பதபதைக்கும் வகையில் உள்ளது.
இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக அணை பகுதியான பவானிசாகர், குண்டேரி பள்ளம், வரட்டுப்பள்ளம், பெரும்பள்ளம், கொடிவேரி ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நேற்று பெய்த பலத்த மழையால் குண்டேரிப்பள்ளம் அணை ஒரே நாளில் 13 அடி உயர்ந்து நிரம்பியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பெரும்பள்ளம் அணை பகுதியில் 65 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இதைப்போன்று சத்தியமங்கலம், தாளவாடி, கொடிவேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.
ஆனால் இதே நேரத்தில் ஈரோடு மாநகர் பகுதியில் வெயில் கொளுத்தி வருகிறது. கடும் வெப்பத்தாலும் புழுக்கத்தாலும் மக்கள் அவதி அடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம், கோவிந்தம் பாளையம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் வரதராஜன்(வயது 32). திருப்பூரில் பனியன் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார்.
தனது நண்பர்கள் 4 பேருடன் பெருந்துறையை அடுத்துள்ள துடுப்பதி பாலக்கரை, ராக்கியாவலசு பகுதியில் உள்ள எல்பீபி வாய்க்காலின் பாலத்தின் அருகே குளித்து கொண்டிருந்தபோது திடீரென தண்ணீரில் மூழ்கி இழுத்துச்செல்லப்பட்டார். அவருடன் இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்று முடியாமல் போகவே, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வாய்க்காலில் இறங்கி தேடி பார்த்து சற்று தொலைவில் இறந்த நிலையில் தண்ணீருக்குள் கிடந்த வரதராஜனை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.
இறந்து போன வரதராஜனுக்கு திருமணமாகி திலகவதி என்ற மனைவியும், சூர்யா என்ற 5 வயது மகளும் உள்ளனர்.
சித்தோடு:
கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் சுற்றுலா வேன் மூலம் கன்னியாகுமரி, ராமேஸ்வரம், பழனி போன்ற பகுதிகளுக்கு சென்றுவிட்டு கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டு இருந்துள்ளனர்.
இந்நிலையில் வேன் சேலம், கோவை பைபாஸ் ரோட்டில் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகில் உள்ள பச்சைப்பாளிமேடு என்ற பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக டயர் வெடித்துள்ளது. இதில், ரோட்டின் இடது பக்கம் உள்ள இரும்பு தடுப்பின் மீது மோதி வண்டி நின்றது.
இது குறித்து தகவல் அறிந்த சித்தோடு போலீசார் சம்பவ இடம் சென்று காயம் ஏற்பட்டவர்களை மீட்டு ஈரோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதில் கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த சின்னசாமி மகன் கோவிந்தராஜ் (வயது 32) பரிதாபமாக இறந்தார். மேலும் 3 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு கோட்டை பகுதி பழனிமலை 2-வது வீதியை சேர்ந்தவர் குணசேகர் (வயது 55). இவருக்கு மனைவியும் 2-மகள்களும் உள்ளனர்.
ஒரு மகளுக்கு திருமணமாகிவிட்டது. இன்னொரு மகள் கல்லூரியில் படித்து வருகிறார்.
குணசேகருக்கு சொந்தமாக ஈரோடு பஸ் நிலையம் அருகே மேட்டூர் ரோட்டில் 3-மாடியுடன் கொண்ட ஈஸ்வரன் என்ற லாட்ஜ் (தங்கும் விடுதி) உள்ளது.
3 மாடிகளுடன் மொட்டை மாடியுடன் இந்த லாட்ஜ் உள்ளது. இதன் உரிமையாளரான குணசேகர் தினமும் காலை வாக்கிங் போய்விட்டு லாட்ஜிக்கு வந்து சிறிது நேரம் அமர்ந்து விட்டு செல்வார். அப்போது லாட்ஜ் அறைகளை சுற்றி பார்ப்பார். ஏதாவது பணிகள் இருப்பின் ஊழியர்களிடம் கூறிவிட்டு செல்வார்.
அதே போல் இன்று காலை 7.30 மணிக்கு குணசேகர் வாக்கிங் போய்விட்டு தனது லாட்ஜிக்கு சென்றார். வழக்கம் போல் ஒவ்வொரு அறையாக பார்த்து விட்டு 3-மாடியிலும் ஏறி மொட்டை மாடிக்கு சென்றார்.
பிறகு திடீரென மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவரது தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியது. இடது கால் முறிந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். லாட்ஜ் ஊழியர்களும் கதறி அழுதபடி ஓடினர். அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இது குறித்து தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலிசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடநத்தினர்.
தற்கொலை செய்து கொண்ட லாட்ஜ் உரிமையாளர் குணசேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடன் தொல்லையா? அல்லது குடும்ப தகராறில் தற்கொலை செய்தாரா? என்று தெரியவில்லை.
தற்கொலை செய்த குணசேகரின் அண்ணன் பெயர் ஈஸ்வரன். 2-வது அண்ணன் பழனிசாமி. இவர்கள் 3 பேரும் இந்த லாட்ஜை நிர்வகித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






