search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட லாட்ஜ் உரிமையாளர் குணசேகர்.
    X
    மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட லாட்ஜ் உரிமையாளர் குணசேகர்.

    ஈரோட்டில் லாட்ஜ் உரிமையாளர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

    ஈரோட்டில் இன்று காலை மாடியில் இருந்து குதித்து லாட்ஜ் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு கோட்டை பகுதி பழனிமலை 2-வது வீதியை சேர்ந்தவர் குணசேகர் (வயது 55). இவருக்கு மனைவியும் 2-மகள்களும் உள்ளனர்.

    ஒரு மகளுக்கு திருமணமாகிவிட்டது. இன்னொரு மகள் கல்லூரியில் படித்து வருகிறார்.

    குணசேகருக்கு சொந்தமாக ஈரோடு பஸ் நிலையம் அருகே மேட்டூர் ரோட்டில் 3-மாடியுடன் கொண்ட ஈஸ்வரன் என்ற லாட்ஜ் (தங்கும் விடுதி) உள்ளது.

    3 மாடிகளுடன் மொட்டை மாடியுடன் இந்த லாட்ஜ் உள்ளது. இதன் உரிமையாளரான குணசேகர் தினமும் காலை வாக்கிங் போய்விட்டு லாட்ஜிக்கு வந்து சிறிது நேரம் அமர்ந்து விட்டு செல்வார். அப்போது லாட்ஜ் அறைகளை சுற்றி பார்ப்பார். ஏதாவது பணிகள் இருப்பின் ஊழியர்களிடம் கூறிவிட்டு செல்வார்.

    அதே போல் இன்று காலை 7.30 மணிக்கு குணசேகர் வாக்கிங் போய்விட்டு தனது லாட்ஜிக்கு சென்றார். வழக்கம் போல் ஒவ்வொரு அறையாக பார்த்து விட்டு 3-மாடியிலும் ஏறி மொட்டை மாடிக்கு சென்றார்.

    பிறகு திடீரென மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவரது தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியது. இடது கால் முறிந்தது.

    இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். லாட்ஜ் ஊழியர்களும் கதறி அழுதபடி ஓடினர். அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலிசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடநத்தினர்.

    தற்கொலை செய்து கொண்ட லாட்ஜ் உரிமையாளர் குணசேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடன் தொல்லையா? அல்லது குடும்ப தகராறில் தற்கொலை செய்தாரா? என்று தெரியவில்லை.

    தற்கொலை செய்த குணசேகரின் அண்ணன் பெயர் ஈஸ்வரன். 2-வது அண்ணன் பழனிசாமி. இவர்கள் 3 பேரும் இந்த லாட்ஜை நிர்வகித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×