என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சர்தாரை கைது செய்தனர்.
    • போலீசார் கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு வில்லரசம்பட்டி செங்கோடம்பாளையத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 40). இவர் பைனான்ஸ் மற்றும் விவசாயம் செய்து வருகிறார். இவரது சகோதரர் சிவசங்கர் (44). ராதா கிருஷ்ணனிடம் ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்தவர் திண்டல் மேடு பகுதியை சேர்ந்தவர் சர்தார் (44).

    இந்நிலையில் சம்பவத்தன்று ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான வில்லரசம்பட்டியில் உள்ள தோட்டத்தில் சர்தார் மற்றும் அவரது மகன் சபீர் மற்றும் நண்பர்கள் சிலர் பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சிவசங்கர், சர்தாரிடம் வாய்தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    சிவசங்கருடன் இருந்த ஈரோடு காரப்பாறையை சேர்ந்த ராஜேஷ் மகன் சந்தோஷ் பாண்டி (35) என்பவர் சர்தார் மோட்டார் சைக்கிளை கீழே தள்ளி விட்டுள்ளார். இதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த சர்தார் மகன் சபீர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அது கைகலப்பாக மாறியது. அப்போது அங்கு வந்த ராதாகிருஷ்ணனை பீர் பாட்டில் மற்றும் கட்டையால் தாக்கி உள்ளார்.

    இதில் பலத்த காயமடைந்த ராதாகிருஷ்ணன் ஈரோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தகராறு முடிந்த பிறகு சந்தோஷ்பாண்டி தனது மோட்டார் சைக்கிளில் பழையபாளையம் அருகே சென்ற போது சர்தார், அவரது மகன் சபீர் மற்றும் நண்பர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் வழிமறித்து, சந்தோஷ் பாண்டியை பீர் பாட்டில் மற்றும் கட்டையால் தலையில் சரமாரியாக தாக்கினர்.

    இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த சந்தோஷ் பாண்டி ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இதுகுறித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சர்தாரை கைது செய்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சந்தோஷ் பாண்டி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர்.

    மேலும் இவ்வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருக்கும் சபீர் மற்றும் 10-க்கும் மேற்பட்ட கும்பலை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் உயிரிழந்த சந்தோஷ்பாண்டியின் பிரேத பரிசோதனை இன்று பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் நடைபெறுகிறது. இதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனை வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சிறிது நேரத்தில் அவர் வீட்டில் இருந்து தீ மளமளவென பிடித்து எரிந்தது.
    • தீ விபத்து நடந்த போது வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த சாலைப்புதூர் பகுதியில் குடியிருப்பவர் கிருஷ்ணன் (70). இவர் திருவிழா பந்தல் அமைக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு கிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று விட்டார்.

    அப்போது அவர் வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் அவர் வீட்டில் இருந்து தீ மளமளவென பிடித்து எரிந்தது.

    கிருஷ்ணன் வீட்டில் தீப்பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் கொடுமுடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    எனினும் இந்த விபத்தில் வீடு தீப்பிடித்து சேதம் அடைந்தது. வீட்டில் பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ. 2 லட்சம் ரொக்க பணம் தீயில் எரிந்து சேதம் அடைந்தது. இது தவிர வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள், வீட்டு சமையல் அறையில் இருந்த சாமான் பாத்திரங்கள் வீட்டிலிருந்த கட்டில், பீரோக்கள் எரிந்து சேதம் அடைந்தன.

    நல்ல வேலையாக தீ விபத்து நடந்த போது வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

    • திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் உள்ள மரத்தில் பயங்கரமாக மோதியது.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த உத்தாண்டியூர் ஆலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குணா என்கிற தேவராஜ் (30) சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் வேல்(25) பிட்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. குணா , பிரகாஷ் வேல் இருவரும் நண்பர்கள்.

    இந்நிலையில் குணா, பிரகாஷ் வேல் இருவரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். பவானிசாகர் அடுத்த சிங்க ராயன் மேடு வனப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளனர். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் உள்ள மரத்தில் பயங்கரமாக மோதியது.

    இதில் குணா மற்றும் பிரகாஷ் வேல் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் குணா மற்றும் பிரகாஷ் வேல் இருவரும் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடினர். அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பவானிசாகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இருவரையும் பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே குணா மற்றும் பிரகாஷ் வேல் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவில் தான் சத்தியமங்கலம் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அதற்குள் நேற்று நடந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வெடி விபத்தில் காயமடைந்து பாலாஜி இறந்தது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்க லம் அருகே உள்ள அர்ஜூன காலனியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 41). இவருக்கு சொந்த ஊர் கும்பகோணம் ஆகும்.

    திருப்பூரில் கட்டிட வேலை பார்த்து வந்தார். அப்போது விஜயா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் பாலாஜி மனைவியுடன் விஜயமங்கலத்தில் தங்கி இருந்தார்.

    பாலாஜிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. கடந்த 2 வருடமாக வீட்டுக்கு வராமல் விஜயமங்கலம் பகுதியில் உள்ள கடைகளில் குப்பை எடுத்து வரும் வேலை பார்த்து கொண்டு அங்கேயே தங்கி வந்துள்ளார்.

    இந்நிலையில் பாலாஜி நேற்று தீபாவளி அன்று காலை ஒரு டீக்கடை அருகே இறந்து கிடப்பதாக தகவல் வந்தது. அவரது இடது காது மற்றும் மூக்கிலும் ரத்தம் வந்துள்ளது. அவரது உடல் அருகே பட்டாசு வெடித்து சிதறி கிடந்தன. இது குறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் பாலாஜி மது போதையில் அணுகுண்டு வெடியை வெடித்துள்ளார். அப்போது வெடி விபத்தில் காயமடைந்து பாலாஜி இறந்தது தெரிய வந்தது.

    பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடும் மக்களின் உள்ளம் நிச்சயமாக நல் உள்ளம் தான்.
    • 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நேற்று தீபாவளி பண்டிகைக்கு வெடி என்பது அறவே வெடிக்காமல் தீபாவளி கொண்டாடினர்.

    சென்னிமலை:

    தீபாவளி என்றாலே அனைவரது நினைவிலும் முன் நிற்பது பட்டாசு தான். தீபாவளி பட்டாசுகள் பல கோடிகள் வரை விற்கப்படுகின்றன. கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை எதற்காக கரியாக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் உண்டு.

    ஆனால் பணம் போனால் போகிறது என்று ரோடு நிறைய குப்பைகள் நிறைய பட்டாசுகளை வெடிப்பவர்களும் ஒரு ரகம். தனக்கென இல்லாமல் மற்றவர்களுக்குக்காக தனது மகிழ்ச்சியை தியாகம் செய்து வாழும் மக்களை காண்பதே அரிது.

    மனிதர்களுக்கு உதவிடும் தன்மையே இருந்து கொண்டிருக்கிறது என்று அனைவரும் நினைக்கும் இந்த வேளையில் 5 அறிவு உயிரினங்களை கூட தொல்லை செய்யக்கூடாது என்று பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடும் மக்களின் உள்ளம் நிச்சயமாக நல் உள்ளம் தான்.

    அப்படி நல் உள்ளம் படைத்தவர்கள் சென்னிமலை அடுத்துள்ள வடமுகம் வெள்ளோடு கிராம பஞ்சாயத்து உட்பட்ட வி.மேட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம், தச்சன்கரை வழி, செம்மாண்டாம்பாளையம், மீனாட்சிபுரம், புங்கம்பாடி, கொங்கு நகர், கருங்கங்காட்டு வலசு ஆகிய கிராமங்களில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நேற்று தீபாவளி பண்டிகைக்கு வெடி என்பது அறவே வெடிக்காமல் தீபாவளி கொண்டாடினர்.

    இப்படிதான் கடந்த 19 ஆண்டுகளுக்கு மேலாக தீபாவளியை இந்த கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்கு காரணம் இங்கு அமைந்துள்ள பறவைகள் சரணாலயம் தான். இந்த வெள்ளோடு மேட்டுப்பாளையம் பறவைகள் சரணாலயத்தில் பல்வேறு பறவைகள் தங்கி உள்ளது.

    அவ்வப்போது வெளிநாட்டு பறவைகளும் வந்து செல்லும். அமைதியை தேடி வரும் இங்கு வரும் பறவைகளுக்கு வெடி தொந்தரவாக இருக்க கூடாது என்பதற்காக இந்த பறவைகள் சரணாலயத்தை சுற்றி உள்ள கிராமங்களில் இன்றும் தீபாவளிக்கு பட்டாசு வெடி வெடிப்பதை மக்கள் தியாகம் செய்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர். ஆனால் வெள்ளோடு சுற்று வட்டார பகுதி மக்கள் மட்டும் புத்தாடை அணிந்து இனிப்பு வழங்கி பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடினர்.

    சிறுவர்கள் மகிழ்ச்சிக்காக கம்பி மத்தாப்பூ, தரைச க்கரம், புஸ்வானம் போன்ற பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ந்தனர். இப்பகுதியில் பட்டாசு வெடிக்க கூடாது என வனத்துறை சார்பாக கிராம மக்களுக்கு வேண்டு கோளும் விடப்பட்டுருந்தது.

    • 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சத்தியமங்கலம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மற்றொருவர் மருத்துவமனை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.

    2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    காரில் பயணித்த அனைவரும் மது போதையில் இருந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • அயலூர் அருகே சூதாட்டம் நடைபெறுவதாக சிறுவலூர் போலீசாருக்கு தகவல் கிடை த்தது.
    • சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 2 சேவல்கள் மற்றும் ஆயிரத்து 200 ரூபாய் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அயலூர் அருகே சூதாட்டம் நடைபெறுவதாக சிறுவலூர் போலீசாருக்கு தகவல் கிடை த்தது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீ சார் அங்கு சேவல்கள் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த லிங்கசாமி மகன் ஜெகதீசன் (வயது 31),

    மேட்டூர் பகுதியைச் சேர்ந்த முனுசாமி மகன் சசிகுமார் (28), கோபிசெட்டிபாளை யம் வெள்ளப்பாளையம் சண்முகம் மகன் அபிஷேக் (23),

    அந்தியூர் இளங்கோமணி மகன் கார்த்தி, அவிநாசி குமாரசாமி மகன் சேதுபதி (21), மொடச்சூர் வேதநாயகம் மகன் சிவக்குமார் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 2 சேவல்கள் மற்றும் ஆயிரத்து 200 ரூபாய் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • முருகன் என்பவர் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பர்கூர் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா செடி வளர்ப்பதாக பர்கூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது அந்தியூர் அடுத்த பர்கூர் கொங்காடை பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பது தெரிய வந்தது.

    மேலும் அதே பகுதியை சேர்ந்த தாசன் மகன் முருகன் என்ற சின்னமுத்து என்பவர் கஞ்சா செடி வளர்ப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்று காலையில் இருந்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
    • எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாநகரமே ஸ்தம்பித்தது.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் ரோடு, மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோட்டி ல் உள்ள ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    குறிப்பாக பன்னீர்செ ல்வம் பார்க் பகுதியில் சாலையின் இருபுறம் 100-க்கும் மேற்பட்ட ஜவுளி க்கடைகள் உள்ளன. இன்று காலையில் இருந்து கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.

    இதே போல் பேன்சி கடைகள், நகை கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. எங்கு திரும்பினாலும் மக்கள் கூட்டமே காணப்ப ட்டது. இதனால் இந்த பகுதியில் இன்று காலையிலிருந்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் வழியாக மணிக்கூ ண்டு மூலம் ஈரோடு பஸ் நிலையத்திற்கு வாகனங்கள் சென்று வருகிறது. இந்த பகுதியில் சாலையின் இருப்புறம் ஜவுளி கடைகள் உள்ளதால் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இதனால் இந்த பகுதியில் வாகனங்கள் கடந்து செல்ல நீண்ட நேரம் ஆனது. இதேபோல் ஆர்.கே.வி.ரோடு, மேட்டூர் ரோடு, கே.வி.என்.ரோடு, பெருந்துறை சாலையிலும் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்கில் இருந்து கலெக்டர் அலுவலகத்தை கடக்க ஏறக்குறைய 30 நிமிடங்கள் ஆனது. எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாநகரமே ஸ்தம்பித்தது.

    ஆங்காங்கே போக்குவரத்து போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் மக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
    • ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளதையொட்டி தொடர் விடுமுறை அறிவிக்கப்ப ட்டுள்ளது. தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு மக்கள் குடும்பத்துடன் நேற்று மதியம் முதல் செல்ல தொடங்கியுள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் மக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

    நேற்று மதியம் முதல் ஈரோடு பஸ் நிலையம் மற்றும் ெரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. தீபாவளி முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    முன்பதிவு அனைத்தும் நிரம்பி விட்டதால் சிறப்பு பஸ்களில் மக்கள் இடம் பிடிக்க போட்டா போட்டி போட்டனர்.

    குறிப்பாக நெல்லை, மதுரை, திருச்சி, சென்னை, நாகர்கோவில் போன்ற தொலைதூர ஊருக்கு செல்லும் பஸ்களில் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவியது. இது தவிர சேலம், கோவை, திருப்பூர் பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க ஈரோடு பஸ் நிலையத்தில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    ஈரோடு பஸ் நிலையத்தில் உள்ள புறநகர் காவல் நிலையத்தில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு மக்கள் நடவடி க்கைகளை கண்காணித்து வருகின்றனர்.

    பஸ் நிலை யத்தில் தேவை யில்லாமல் சுற்றி திரிந்த நபர்களை எச்சரித்து அனுப்பி வைத்த னர். இதேபோல் சில குடிமகன்கள் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டனர்.

    அவர்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இன்று காலை முதலே ஈரோடு பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குடும்ப குடும்பமாக மக்கள் சொந்த ஊருக்கு கிளம்பிச் சென்றனர்.

    இதனால் ஈரோடு பஸ் நிலையம் இன்று பரபரப்பாக காட்சியளி க்கப்பட்டது. மேலும் ஈரோடு போலீஸ் சார்பில் பஸ் நிலையத்தில் உயர் கோபுரம் அமைக்கப்பட்டு அங்கு 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இதேபோல் ஈரோடு ெரயில் நிலையத்திலும் மக்கள் கூட்டம் இன்று அதிக அளவில் இருந்தது. பொதுவாக ஈரோடு ெரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.

    தற்போது தொடர் விடு முறை வருவ தால் கடந்த 2 நாட்களாக ஈரோடு ெரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.

    அனைத்து ெரயில்களி லும் முன்பதிவு நிரப்பி விட்டதால் முன்பதிவு இல்லாத பெட்டி களில் பயணிக்க மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    குறிப்பாக மதுரை, நெல்லை, நாகர்கோவில் செல்லும் ெரயில்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சிலர் நின்று கொண்டே பயணித்தனர்.

    ெரயில் நுழைவு பகுதியில் ஈரோடு ெரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி சமயம் என்பதால் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறி யாராவது பட்டாசு கொண்டு செல்கின்றார்களா என்பதை கண்காணிக்கும் வகையில் ெரயில்வே போலீசார் பயணிகளின் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்து அதன் பிறகு அவர்களே உள்ள அனுமதிக்கின்றனர்.

    தறி தொழிலாளர்கள், நெசவுத் தொழிலா ளர்களுக்கு தொடர் விடுமுறை வருவதால் அவர்கள் அனைவரும் குடும்பமாக இன்று ெரயில்களில் கிளம்பி சென்றனர்.

    இதனால் இன்று ஈரோடு ெரயில் நிலையம் பரபரப்பாக காட்சியளிக்கப்பட்டது.

    • கட்டி இருந்த ஆடுகளில் கிடாவை காணவில்லை.
    • போலீசார் மாணிக்கம், விக்னேசை கைது செய்தனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்த கெஞ்சனூர், புது தோட்டத்தை சேர்ந்தவர் பூவாத்தாள் (57). இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று ஆடுகளை தோட்டத்திற்கு அருகே உள்ள காலியிடத்தில் கட்டி இருந்தார்.

    ஒரு மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது கட்டி இருந்த ஆடுகளில் கிடாவை காணவில்லை.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    பக்கத்து தோட்டத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் 2 பேர் ஆட்டை திருடி சென்றது பதிவாகி இருந்தது. இதை வைத்து போலீசார் துப்பு துலுக்கினர்.

    சத்தியமங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில் பவானிசாகர் அருகே பகுத்தம்பாளை யத்தை சேர்ந்த மாணிக்கம் (31), கெஞ்சனூரை சேர்ந்த அப்புசாமி என தெரிய வந்தது.

    இதற்கு உடந்தையாக வடக்குப்பேட்டையை சேர்ந்த விக்னேஷ் (32) என்பவர் இருந்ததும் தெரியவந்தது. போலீசார் மாணிக்கம், விக்னேசை கைது செய்தனர்.

    இதில் அப்புசாமி 2 நாட்களுக்கு முன்பு பவானிசாகர் போலீஸ் நிலையத்தில் பதிவாகியிருந்த வழக்கில் ஒன்றில் கைது செய்யப்பட்டார்.

    • மழை காரணமாக 3 முறை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

    கோபி:

    ஈரோடு மாவட்டத்தில் கட ந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி யில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    நம்பியூரில் கடந்த 4-ந் தேதி இரவு 61 மில்லி மீட்டர், சத்தியமங்கலத்தில் 53 மில்லி மீட்டர் மழை பெய்ததால் நம்பியூர்-அரசூர் சாலையில் தட்டாம்பாளையம் தரைமட்ட பாலம் வெள்ளப்பெருக்கில் மூழ்கி சேதம் அடைந்தது. இத னால் 2 நாட்களாக போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    அதன் பின் தரைமட்ட பாலம் சீரமைத்து 7-ந் தேதி வாகன போக்குவரத்து தொடங்கியது.

    அன்று இரவு சத்தியமங்கலத்தில் 18 மில்லி மீட்டரும், நம்பியூரில் 6 மில்லி மீட்டரும் மழை பெய்ததால் தரைமட்ட பாலம் மீண்டும் மூழ்கி 2-வது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பின்னர் நம்பியூ ரில் 123 மில்லி மீட்டர் மழை பெய்த தால் 3-வது முறையாக தரை மட்ட பாலம் வெள்ள த்தில் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இவ்வாறாக மழை காரணமாக 3 முறை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் தரைமட்ட பாலம் வழியாக குறைந்த அளவு நேற்று மதியம் மழை நீர் சென்றதால் நெடு ஞ்சாலை துறை சார்பில் மீண்டும் பாதை சீரமைக்கும் பணி முடிந்து தரைமட்ட பாலம் வழியாக இலகு ரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

    கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என நெடுஞ்சாலைத்துறை சார்பாக போர்டு வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இதனையடுத்து இலகுரக வாகனங்கள் மட்டுமே அந்த வழியாக சென்று வருகிறது.

    ×