சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

அயலூர் அருகே சூதாட்டம் நடைபெறுவதாக சிறுவலூர் போலீசாருக்கு தகவல் கிடை த்தது. சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 2 சேவல்கள் மற்றும் ஆயிரத்து 200 ரூபாய் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் அயலூர் அருகே சூதாட்டம் நடைபெறுவதாக சிறுவலூர் போலீசாருக்கு தகவல் கிடை த்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீ சார் அங்கு சேவல்கள் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த லிங்கசாமி மகன் ஜெகதீசன் (வயது 31),

மேட்டூர் பகுதியைச் சேர்ந்த முனுசாமி மகன் சசிகுமார் (28), கோபிசெட்டிபாளை யம் வெள்ளப்பாளையம் சண்முகம் மகன் அபிஷேக் (23),

அந்தியூர் இளங்கோமணி மகன் கார்த்தி, அவிநாசி குமாரசாமி மகன் சேதுபதி (21), மொடச்சூர் வேதநாயகம் மகன் சிவக்குமார் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 2 சேவல்கள் மற்றும் ஆயிரத்து 200 ரூபாய் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com