என் மலர்
ஈரோடு
- பூங்கொடி மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
- இதில் அவருக்கு தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார்.
பெருந்துறை:
திருப்பூர் மாவட்டம் நீலகண்டபுரம் வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி பூங்கொடி (வயது 55).
இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி தீபாவளி அன்று ஈரோட்டில் உள்ள அவர்க ளது உறவினரை பார்ப்பத ற்காக தனது மகன் கவுதம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
மோட்டார் சைக்கிளை கவுதம் ஓட்டி வந்தார். பூங்கொடி பின் பகுதியில் அமர்ந்து கொண்டு வந்தார்.
இதை தொடர்ந்து அவர்கள் பெருந்துறை அடுத்த ஊத்துக்குளி- விஜயமங்கலம் ரோட்டில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது பூங்கொடி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார். இதை கண்டு அவரது மகன் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேலும் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி நாளை நடக்கிறது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
சென்னிமலை:
சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி நாளை (வெள்ளிக்கிழமை) செயல்படுத்தப்பட வுள்ளதால் பெருந்துறை கோட்டத்தை ேசர்ந்த சென்னிமலை நகர் பகுதி முழுவதும்,
பூங்கா நகர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமரபுரி, சக்தி நகர், பெரியார் நகர், நாமக்கல் பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சி பாளையம், திப்பம் பாளையம், அம்மாபாளையம்,
அசோகபுரம், புதுப்பாளையம், இராமலிங்கபுரம், ஓரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம், வெப்பிலி, கே.ஜி.வலசு, பசுவப்பட்டி,
முருங்கத்தொழுவு ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்கிற விபரம் பொதுமக்களுக்கு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
- வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- 8 பவுன் நகைகள் காணாமல் போனது.
பெருந்துறை:
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் ராேஜஸ் (வயது 36). இவர் பெருந்துறை பவானி ரோடு நாராயணா லே அவுட் பகுதியில் குடும்பத்துடன் தங்கி வசித்து வருகிறார்.
மேலும் அவர் பெருந்துறை பழைய பஸ் நிலையம் பகுதியில் பைப் மோட்டார் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடுவதற்காக அவரது சொந்த ஊரான தர்மபுரி மாவட்டம் கடத்தூர் சென்று விட்டார்.
இதை தொடர்ந்து அவர் நேற்று வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 3 பவுன், 2 நெக்லஸ்கள், 2 தங்க மோதிரங்கள், கம்மல்கள் உள்பட 8 பவுன் நகைகள் காணாமல் போனதும், இதை யாரோ மர்ம ஆசாமிகள் திருடி சென்றதும் தெரிய வந்தது.
இது குறித்து ராஜேஸ் பெருந்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை திருடி சென்றது யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படு த்தி உள்ளது.
- நின்று கொண்டிருந்த ஒரு நபரை போலீசார் விசாரித்தனர்.
- கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானி போலீசார் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என தீவிர ரோந்து பணியில் ஈடுப ட்டனர். அப்போது பவானி புது பஸ் ஸ்டாண்டு, பவானி ஆற்று பகுதி அருகே அனும தியின்றி மது விற்றுக்கொண்டிருந்த பவானி சொக்காரம்மன் காடு பகுதியை சேர்ந்த ஆண்டியப்பன் மகன் வெற்றிவேல் (வயது 37), பவானி திருவள்ளுவர் நகரை சேர்ந்த பழனிசாமி மகன் சுரேஷ் (40) ஆகி யோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீ சார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் அந்தியூர் போலீசார் அந்தியூர்-பவானி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் அவர் அந்தியூர் காமராஜர் சாலையை சேர்ந்த பூவாணன் மகன் செல்வன் (63) என்பதும், அவர் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.மேலும் போலீசார் அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
- அணைக்கு வினாடிக்கு 1,956 கன அடியாக நீர்வரத்து கொண்டிருக்கிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 74.99 அடியாக உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1,956 கன அடியாக நீர்வரத்து கொண்டிருக்கிறது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1800 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதேப்போல் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 29.81 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 5.90 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.53 அடியாகவும் உள்ளது.
- கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- குடிநீர் திட்டப்பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் பகுத்தம்பாளையம், உப்புப்பள்ளம் பகுதியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் செயல்படும் காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலையத்தினை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக கலெக்டர் சத்தியமங்கலம் வட்டம், பகுத்தம்பாளையம் பகுதியில் செயல்படும் அரசு தோட்டக்கலை பண்ணையை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் இந்த பண்ணை 10 ஹெக்டேர் மொத்த பரப்பளவு கொண்டது. ஐந்தரை ஹெக்டேர் பரப்பளவில் மா, கொய்யா, மாதுளை பழ மரதாய் செடிகள் மற்றும் அடர்நடவு செய்யப்பட்டுள்ளன.
எலுமிச்சை, நாவல் மாதிரி தோட்டங்களும், பசுமை குடில் சாகுபடி மற்றும் நிழல் வளை கூடாரங்களில் மா ஒட்டு செடிகள், பாக்கு நாற்றுகள், கொய்யாப் பதியன்கள், மாதுளை பதியன்கள், சீதா, எலுமிச்சை, புளி, நாவல், பப்பாளி, முருங்கை மர க்கன்றுகளும் பயிரிட ப்பட்டுள்ளதை அவர் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து பவானிசாகர் ஊராட்சி ஒன்றி யத்திற்கு ட்பட்ட தொப்பம்பாளையம் ஊராட்சி டோடாம்பாளை யம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், குழுந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.90.15 லட்சம் மதிப்பீட்டில் 6 வகுப்பறைகள் கட்ட ப்பட்டுவருவதையும், பவானிசாகர் பேரூராட்சி க்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.12.16 கோடி மதிப்பீட்டில் அமைக்க ப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகளை யும், புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.520.70 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர் திட்டப்பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
தலைமை நீரேற்று நிலையம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், மாதம்பாளையம் ஊராட்சி, மாதம்பாளையத்தில், மகளிர் திட்டத்தின் சார்பில் ரூ.10 லட்சம் வங்கி நேரடி கடன் பெற்று சோப்பு, சேம்பு மற்றும் நாப்கின் ஆகிய பொருட்களை தயார் செய்யும் வேம்பு மகளிர் சுய உதவிக்குழுவின் செயல்பாடுகள், மாதம்பாளையம் பகுதியில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் மானாவாரி வேளாண்மை மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.30,000 மானிய உதவியுடன் சுமார் 2.70 ஏக்கர் பரப்பள வில் ஒருங்கிணைந்த பண்ணை யம் அமைக்க ப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார்.
நொச்சிக்கோட்டை ஊராட்சி, நொச்சி க்கோட்டையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.10 லட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம் அமைக்கப்பட்டுள்ளதையும்,
நல்லூர் ஊராட்சி, நேரு நகர் பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலைஉறுதிதி ட்டத்தின் கீழ் ரூ.23.35 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்கப்பட்டு வருவதையும் மற்றும் அதே பகுதியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.18.45 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட ப்பட்டு வருவதையும் என பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகள் மற்றும் புன்செய் புளியம்பட்டி நகராட்சி மற்றும் பவானிசாகர் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ள ப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற் கொண்டார்.
- பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
- பொங்கல் வைத்து ஆடு, கோழி, பலி கொடுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.
சென்னிமலை:
சென்னிமலையை அடுத்துள்ள முருங்கத்தொழுவு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேர்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வந்தது. நவம்பர் 8-ந் தேதி இரவு கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது.
அன்று முதல் இரவு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜைகளும் நடந்தது. கடந்த 14-ந் தேதி இரவு கிராம சாந்தி நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து அம்மன்கோவில்புதூர், வாய்கால்மேடு பகுதி மக்கள் வந்து வழிபாடு நடந்தினர்.
நேற்று இரவு புதன்கிழமை காவிரி சென்று தீர்த்தம் கொண்டு வந்து இரவு 8.30 மணிக்கு மாரியம்மனுக்கு தீர்த்த அபிஷேக ஆராதனை நடந்தது.
அதைத்தொடந்து இரவு கொமாரபாளையம், பனங்காட்டுபுதூர் மக்கள் காவடி எடுத்து வந்து மாரியம்மனை வழிபட்டனர். அதன் பின்பு இரவு 12 மணி அளவில் காளிக்காவலசு, முருங்கத்தொழுவு ஊர் பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து மாவிளக்கு பூஜை நடத்தினர்.
தொடர்ந்து இன்று காலை 7.20 மணிக்கு உற்சவ அம்மைக்கு மகா அபிஷே கமும், அதன் பின்பு காலை 8.10 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதை தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழி, பலி கொடுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.
மாலை 3.30 மணிக்கு குழந்தைகள் சேற்று வேஷம் இட்டு மாரியம்மனுக்கு காணிக்கை செலுத்துவர். மாலை 5:20 மணிக்கு தேர் நிலை சேரும். இரவு மலர் அலங்காரத்தில் மாரியம்மன் திருவீதி உலா காட்சி நடக்கும்.
நாளை மதியம் மஞ்சள் நீர் உற்சவத்துடன் 15 நாள் விழா நிறைவு பெறுகிறது. முருங்கத்தொழுவு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேரோட்டத்தை தொடர்ந்து முருங்கத்தொழுவு சுற்று பகுதியில்உள்ள 14-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
- மயிலா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு கொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே நாமக்கல்பாளையம் ரோடு எம்.ஜி.ஆர். நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ரெங்க சாமி (வயது 42). இவரது மனைவி மயிலா (38). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
மயிலா கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மிகுந்த மனவேதனை அடைந்த மயிலா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு கொண்டார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் மயிலாவை மீட்டு சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மயிலா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் இதுகுறித்து அவரது கணவர் ரெங்கசாமி சென்னிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடு த்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கொரோனா தொற்றினால் இறந்த உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கும் நிதியுதவி வழங்கப்பட உள்ளது.
- ஈரோடு ஒருங்கிணைந்த தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
ஈரோடு:
தமிழகம் முழுவதும் தி.மு.க.வில் உள்ள மூத்த உறுப்பினர்கள், நிர்வாகிகளை கவரப்படுத்தும் வகையில் பொற்கிழி விருது வழங்கும் நிகழ்ச்சி மாவட்டந்தோறும் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் தி.மு.க. ஈரோடு தெற்கு, வடக்கு ஆகிய ஒருங்கிணைந்த மாவட்ட மூத்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பொற்கிழி விருது வழங்கும் நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள சரளை பகுதியில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
இவ்விழாவில் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் சிறப்பு திட்ட அமலாக்க துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 2,500 மூத்த தி.மு.க. நிர்வாகிகளுக்கு பொற்கிழிகளை வழங்கி கவுரவிக்கிறார்.
இதேபோல கொரோனா தொற்றினால் இறந்த உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கும் நிதியுதவி வழங்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து ஈரோடு ஒருங்கிணைந்த தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
- வேப்ப மரத்தில் இருந்து வடிந்த பாலை பாத்திரத்தில் பிடித்து பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.
- வேப்பமரத்தில் பால் வடியும் செய்தி காட்டுத்தீ போல் வேகமாக பரவியது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே தொட்டம்பாளையம் கிராமத்தில் பவானி ஆற்றங்கரை ஒட்டி வேப்பமரம் ஒன்று உள்ளது. இந்த வேப்பமரத்தில் நேற்று காலை முதல் மரக்கிளையில் இருந்து வெள்ளை நிறத்தில் பால் சுரந்து சொட்டு சொட்டாக கீழே விழுந்து கொண்டே இருக்கிறது.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள் வேப்பமரத்தில் பால் வடிவதை பார்த்து ஆச்சரியமடைந்தனர். இதையடுத்து வேப்ப மரத்தின் அடிப்பகுதியில் சுத்தம் செய்து மரத்தை தண்ணீர் ஊற்றி கழுவி மஞ்சள் துணி சுற்றி, பூ, குங்குமம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
மேலும் வேப்ப மரத்தில் இருந்து வடிந்த பாலை பாத்திரத்தில் பிடித்து பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கினர். வேப்பமரத்தில் பால் வடியும் செய்தி காட்டுத்தீ போல் வேகமாக பரவியது.
இதையடுத்து பவானிசாகர் சுற்று வட்டார பகுதிகளான பசுவ பாளையம், அய்யன்சாலை, எரங்காட்டூர், ராஜநகர் போன்ற பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் பால் வடியும் வேப்ப மரத்திற்கு சென்று வழிபட்டு வருகின்றனர். இன்றும் அந்த வேப்ப மரத்தில் இருந்து பால் வடிந்து வருவதால் மக்கள் பயபக்தியுடன் வழிபட்டு வருகின்றனர்.
- சசிகலா அரசியலுக்கு வருவது குறித்து அவர்தான் அறிவிக்க வேண்டும்.
- நாங்கள் எடப்பாடி பழனிசாமியுடன் இணைவதற்காக தூதுவிடுவதாக கூறுவது, ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.
ஈரோடு:
ஈரோட்டில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை தொடர்பான மேல்முறையீட்டு மனு நாளை (அதாவது இன்று) விசாரணைக்கு வருகிறது. அதன் முடிவு நீதிபதிகள் கையில் உள்ளது. எனக்கு ஜோதிடம் தெரியாது. நீதிபதிகள் தீர்ப்பு வழங்குவார்கள் பொறுத்திருந்து பாருங்கள். நாங்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் சேர்வதாக கூறி வருவது முற்றிலும் தவறு. அதுபோன்ற எண்ணமும் இல்லை, வாய்ப்பும் இல்லை. நான் ஏற்கனவே கட்சி ஒன்றுபட்டால்தான் வெற்றி அடைய முடியும் என்று சொல்லிவிட்டேன். அதை அவர்கள் கேட்பதாக இல்லை. அவர்கள் பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டார்கள். எங்கள் நிலை பற்றி, தேர்தல் அறிவித்ததும் நல்ல முடிவை வெளியிடுவோம். தற்போது டி.டி.வி.தினகரனுடன் இணைந்து தேர்தல் பணிகளை செய்து வருகிறோம்.
சசிகலா அரசியலுக்கு வருவது குறித்து அவர்தான் அறிவிக்க வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தபோது பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கேட்டதற்காகவும், எங்கள் ஓட்டுகள் சிதறக்கூடாது என்பதற்காகவும் நாங்களும், டி.டி.வி.தினகரன் கட்சி வேட்பாளர்களும் வாபஸ் பெற்றோம். இரட்டை இலை சின்னத்தை கோர்ட்டு அவர்களுக்கு வழங்கியது. எனினும் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி பழனிசாமி தோற்கடிக்கப்படுகிறார். கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டை. அங்கேயே தோற்கிறார்கள்.
கடந்த 1989-ம் ஆண்டு ஜெயலலிதா சேவல் சின்னத்தில் தனியாக நின்றபோது, ஈரோடு மாவட்டம் கோபி உள்பட 5 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றார். அந்தளவு புகழ்பெற்ற ஈரோடு மாவட்டத்தில் இரட்டை இலை சின்னம் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்படுகிறது என்றால் நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் எப்படி இருக்க வேண்டும், செயல்பட வேண்டும் என மக்கள் நினைக்கிறார்களோ, அப்படி செயல்படுவோம். நாங்கள் எடப்பாடி பழனிசாமியுடன் இணைவதற்காக தூதுவிடுவதாக கூறுவது, ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.
தற்போது தனித்து நிற்பதாக கூறி வரும் எடப்படி பழனிசாமியால், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியாது. தன்னை கூட்டணிக்கு வரும்படி எடப்பாடி பழனிசாமி அழைத்ததாக சீமான் கூறியுள்ளார். சீமான் பொய் சொல்ல மாட்டார் என நினைக்கிறேன். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மோசமாக உள்ளது.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
- போலீசாருக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே தாக்குதல் ஏற்பட்டது.
- மாவோயிஸ்ட்டுகள் ஆயுதங்களை போட்டு விட்டு தப்பி சென்றனர்.
அந்தியூர்:
கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் இரட்டி உட்பிரிவு வரம்பு கரிகோட்டகரி அடுத்த அய்யன்குன்னு அருகே உறுப்பும்குட்டி பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருப்பதாக அந்த மாநில போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் கேரளா மாநில போலீசார், மாவோயிஸ்ட்டு தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் கோடர் குழுவினர் அந்த பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது போலீசாருக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே தாக்குதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் மாவோயிஸ்ட்டுகள் ஆயுதங்களை போட்டு விட்டு தப்பி சென்றனர். அவர்களுடம் இருந்து 3 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த தாக்குதலில் ஈடுபட்டது தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்தோஷ், வசந்த் ரமேஷ், கேரளாவைச் சேர்ந்த சோமன் மற்றும் மனோஜ் ஆசிக் கர்நாடகாவை சேர்ந்த ஜிஷா மற்றும் விக்ரம் கவுடா என தெரிய வந்தது.
இதையடுத்து தப்பி சென்ற மாவோயிஸ்ட்டுகளை பிடிக்க கேரளா போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தப்பி சென்றவர்கள் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தமிழக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தமிழக எல்லை பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் வழியாக கர்நாடகாவுக்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது. இதனால் இரு மாநில எல்லை பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் வரட்டு பள்ளம் அணை அருகே வனத்துறை சோதனைசாவடியும், பர்கூர் அருகே ஒரு சோதனை சாவடியும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனைசாவடி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் கர்நாடகா மாநிலத்துக்கு சென்று வருகிறது. போலீசாரும் சோதனை சாவடிகளில் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பர்கூர் சோதனை சாவடி வழியாக கேரளாவில் இருந்து தப்பி சென்ற மாவோயிஸ்டுகள் தப்பி செல்ல வாய்ப்பு உள்ளதால் இந்த சோதனை சாவடியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
அதன்படி பர்கூர் சோதனை சாவடியில் சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக இரவு முழுவதும் சோதனையை தீவிர படுத்தி அந்த வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்து விசாரணை நடத்திய பிறகே அனுப்பி வைக்கிறார்கள்.
மேலும் தலைமறைவான மாவோயிஸ்டுகளின் புகைப்படங்களை வைத்தும் கண்காணித்து வருகிறார்கள்.






