என் மலர்tooltip icon

    ஈரோடு

    • மின்சாரம் தாக்கியதில் பழனிச்சாமி கீழே தூக்கி வீசப்பட்டார்.
    • உடலில் படுகாயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    டி.என்.பாளையம், நவ. 18-

    டி.என்.பாளையம் கொங்கு நகரை சேர்ந்தவர் பழனி ச்சாமி (55). இவர் டி.என்.பாளையம் துணை மின் நிலை யத்தில் லைன் இன்சார்ஜ் ஆக பணி புரிந்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு டி.என்.பாளையம் பகுதியில் மின்சாரம் தடைபட்டு உள்ளது.

    இந்த மின் தடையை நீக்க பழனிச்சாமி டி.என்.பாளையம் துணை மின் நிலைய டிரா ன்ஸ்பார்மரில் (மின்மா ற்றி) வேலை செய்து கொண்டி ருந்தார்.

    அப்போது டிரான்ஸ்பா ர்மரில் இருந்து எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் பழனிச்சாமி கீழே தூக்கி வீசப்பட்டார்.

    இதனை கண்ட அருகில் இருந்த மின் ஊழியர்கள் உடனே பழனிச்சாமியை மீட்டு 108 ஆன்புலன்சு மூலம் முதலுதவி சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    தற்போது உயிருக்கு ஆபத்து இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் மின்சாரம் தாக்கியதில் பழனிச்சாமிக்கு உடலில் படுகாயங்கள் ஏற்பட்டு உள்ளதால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காட்டு யானை வாழை மரங்களை முறித்து சேதப்படுத்தியது.
    • யானைகள் ஊருக்குள் வராமல் இருக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காகவும், தண்ணீருக்காகவும் வன எல்லையில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது.

    இந்நிலையில் கள்ளிப்பட்டி அருகே உள்ள பெருமுகை கிராம வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை ஒன்று சஞ்சீவராயன் குளம் அருகே மணி என்பவரது விவசாய தோட்டத்திற்குள் புகுந்தது.

    சுமார் 1½ ஏக்கரில் கரும்பு விளைவித்து இருந்த விவசாய தோட்டத்தில் புகுந்த காட்டு யானை 50-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை முறித்து சேதப்படுத்தியது.

    வாழை மரங்களை யானை சேதப்படுத்துவதை அறிந்த கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், சத்த மிட்டவாறும் யானையை வனபகுதிக்குள் விரட்டி யதாக கூறப்படுகிறது.

    அப்போது யானை வனப்பகுதியை யொட்டிய குடியிருப்பு வழியாக சென்று மீண்டும் வனப்பகு திக்குள் சென்று மறைந்தது.

    அடிக்கடி யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் அந்தியூர் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்த அந்தியூர் வனத்துறையினர் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தும், யானைகள் ஊருக்குள் வராமல் இருக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • செப்டிக் டேங்க் கிளினிக் லாரி ஒன்று கழிவு நீரை கொட்ட வந்துள்ளது.
    • போலீசார் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி லாரியை மீட்டு வந்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை ஒன்றியம், கம்புளியம்பட்டி கிராமத்தில், நாகப்பகவுண்டன்பாளையம்புதூர் செல்லும் சாலையின் ஓரத்தில் தனியாருக்கு சொந்தமான செப்டிக் டேங்க் கிளினிக் லாரி ஒன்று கழிவு நீரை கொட்ட வந்துள்ளது.

    இதை அவ்வழியாக சென்ற கிராமத்து மக்கள் சிலர் பார்த்து லாரியை பிடித்து வைத்து விட்டு பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி லாரியை மீட்டு வந்தனர்.

    • சோதனையில் முக்கிய ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.
    • வரி ஏய்ப்பு அடிப்படையில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் டவுன் பகுதியில் வாசவி என்ற பெயரில் தங்க, வெள்ளி நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் பிரபு காந்த் (45). இவர் நகைக்கடையுடன் நண்பர்களுடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மதியம் கோவையில் இருந்து 3 கார்களில் வருமான வரித்துறையினர் வந்தனர். சத்தியமங்கலம் டவுன் பகுதியில் உள்ள நகைக்கடைக்கு திடீரென சென்று ஷட்டரை மூடி சோதனையில் ஈடுபட்டனர். இதேப்போல் வெள்ளி கடை மற்றும் உரிமையாளர் வீடு, அவரது நண்பர்கள் வீடுகளிலும் ஒரே நேரத்தில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் கடையின் போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கடையில் உள்ளவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் வெளியே உள்ளவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    கடையின் ஒவ்வொரு பகுதியாக சென்று வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மதியம் 2 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 12 மணி வரை கிட்டத்தட்ட 10 மணி நேரம் வரை தொடர்ந்து சோதனை நடந்தது.

    பின்னர் வருமானவரித்துறையினர் சோதனை முடித்துக் கொண்டு கிளம்பி சென்றனர். வரி ஏய்ப்பு அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    எனினும் இந்த சோதனை குறித்து வருமான வரித்துறையினர் முழுமையான தகவல் தெரிவிக்கவில்லை. சோதனையில் முக்கிய ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்தும் தகவல் வெளியாகவில்லை. ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய இந்த சோதனை சத்தியமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாப்பாத்தி அப்பகுதியில் 5 செம்மறி ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறார்.
    • மற்ற விலங்குகள் ஏதாவது கடித்துள்ளதா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே சென்னம்பட்டி சனி சந்தை பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணன் மனைவி பாப்பாத்தி (50). இவர் அப்பகுதியில் கீத்துப் பின்னும் தொழில் செய்து கொண்டு 5 செம்மறி ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மாலை செம்மறியாடுகளை தனது வீட்டு அருகே உள்ள கொட்டகையில் கட்டி வைத்துள்ளார். தொடர்ந்து இன்று அதிகாலை ஆட்டுக்கொட்டைக்குச் சென்று பார்த்த பொழுது 4 செம்மறி ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்து குதறி இறந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனப்பகுதி அருகில் உள்ளதால் வனவிலங்குகள் ஏதேனும் கடித்துள்ளதா? அல்லது மற்ற விலங்குகள் ஏதாவது கடித்துள்ளதா? என்பது குறித்தும் வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    மேலும் இதுகுறித்து வருவாய் துறைக்கும், வெள்ளித்திருப்பூர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார்த்திகை மாத முதல் நாளான இன்று அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
    • ஒரு மண்ட லம் விரதம் இருந்து சபரிம லைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.

    கோபி:

    கேரள மாநிலம் சபரி மலையில் நடைபெறும் மண்டல பூஜை, மகர விள க்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதற்காக ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

    அந்த நாட்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி விரதம் இருந்து சபரிமலை க்கு சென்று ஐயனை தரி சனம் செய்வார்கள்.

    இதை யொட்டி தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்ட ங்களில் கார்த்திகை மாத முதல் நாளான இன்று அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    இதையொட்டி ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கூகலூர் ஐயப்பன் கோவில், கோபி ஐயப்பன் கோவில், பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில், பவளமலை முத்துக்குமார சாமி கோவில், பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோ வில் மற்றும் சுற்று வட்டார கோவில்களில் இன்று அதி காலை முதலே அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    இதே போல் ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள கோவில்களில் 100-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் இன்று காலை முதலே மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    இவர்கள் துளசி மணி அல்லது ருத்ராட்சை மாலை 108 அல்லது 54 மணிகள் கொண்டதாக வாங்கி அவ ற்றுடன் அய்யப்பன் திருவுரு வப்படத்தை இணைத்து அணிந்து கொண்டனர். அத்துடன் துணை மாலை ஒன்றும் அணிந்து கொண்டனர்.

    இதற்குப் பின் மாலை அணிபவர்கள் கார்த்திகை 19-ம் தேதிக்குள் ஏதாவது ஒரு நல்ல நாளில் மாலை அணிந்து கொள்வார்கள். சன்னிதானத்திற்கு செல்லும் தினத்திற்கு முன்பாக குறை ந்தது ஒரு மண்டலம் (41 நாட்கள்) விரதம் இருக்கு ம்படி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொள்வர்.

    ஐயப்ப பக்தர்கள் தின மும் இரு வேலைகளில் குளித்து அய்யப்பன் திரு வுருவப்படத்தை வணங்கி தினமும் ஆலய வழிபாடு மற்றும் பஜனைகளில் கலந்து கொண்டு ஒரு மண்ட லம் விரதம் இருந்து சபரிம லைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.

    • கணேசன் மரச்சட்டத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சூரம்ப ட்டி போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டிவலசு, பட்டேல் வீதியை சேர்ந்தவர் கணேசன் (37). இவர் பிரிண்டிங் பட்டறை வைத்து நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக சரிவர வேலை இல்லாததால் வெளியில் கடன் வாங்கி தொழில் செய்து வந்துள்ளார்.

    ஆனால் கடன் தொகை யை திருப்பி செலுத்தாததால் கடன்காரர்கள் வீடு தேடிவந்து கேட்டு வந்துள்ளனர்.

    இந்நிலையில் இவரது மனைவி சரண்யா கடந்த ஒரு மாதகாலமாக தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அவ்வ ப்போது வந்து கணவரை பார்த்து சென்று வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று பிரிண்டிங் பட்டறை யில் தனியாக இரு ந்த கணேசன் மரச்சட்டத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொ ண்டார்.

    இது குறித்து சூரம்ப ட்டி போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது.
    • வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாமரத்துபாளை யம் சக்தி நகரை சேர்ந்தவர் தினேஷ் (21). ஆயில் உற்பத்தி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு பணி முடிந்து தனது மோட்டா ர் சைக்கிளில் தினேஷ் வந்து கொண்டிருந்தார்.

    வீரப்பன்ச த்திரம் பகுதியில் வந்து கொ ண்டிருந்தபோது திடீரென சாலையின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் தினேஷ் படுகாயம் அடை ந்தார்.

    பின்னர் அவர் சிகி ச்சைக்காக அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல ப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே தினேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து வீரப்பன்ச த்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் தனியாக இருந்த செந்தில்குமார் தூக்குபோட்டு கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பெரிய வலசு ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் செந்தில்குமார். இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். செந்தில்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

    இவர் நீண்ட நாட்களாக தனக்கு திருமணம் ஆகவில்லை என மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்த தாக கூறப்படுகிறது. இந்நி லையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த செந்தில்குமார் தூக்கு போட்டுக் கொண்டார்.

    இதை அடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செந்தி ல்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் இதுகுறித்து அவரின் சகோதரர் தங்க ராஜ் ஈரோடு வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 74.98 அடி யாக உயர்ந்துள்ளது.
    • வினாடிக்கு 1,957 கனஅடியாக நீர் வரத்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதார மாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பவானி சாகர் அணையின் நீர்மட்ட மும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 74.98 அடி யாக உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1,957 கனஅடியாக நீர் வரத்து கொண்டிருக்கிறது.

    பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1800 கனஅடியாக நீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று மீண்டும் 2000 கனஅடியாக நீர் அதிகரித்து திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதேப்போல் குண்டேரி ப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 31.35 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 5.87 அடியாகவும், வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 29.53 அடியாகவும் உள்ளது.

    • ஒரு காரை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர்.
    • அதில் போதைப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே ஆசனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். அதில் போதைப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

    பின்னர் விசாரணையில் அதில் இருந்த 2 பேர் கோவை மாவட்டம் மேட்டு ப்பாளையம் பழத்தோட்டம் காந்தி தெருவை சேர்ந்த சங்கரன் மகன் சஜீஸ் (வயது 32), கோவை மாவட்டம் சிறுமுகை பள்ளிவாசல் தெரு வேலாயுதம் மகன் பிரகாசம் (38) என்பதும், அவர்கள் விற்பனைக்காக போதைப்பொருட்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

    பின்னர் போலீசார் அவர்கள் இருவரை கைது செய்தனர்.

    மேலும் கடத்தி வரப்பட்ட ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட 566 கிலோ எடை மதிப்புள்ள போதைப்பொ ருட்கள் மற்றும் கார் ஆகிய வற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்தப் போதைப் பொருள்களின் மதிப்பு ரூ.4 லட்சத்து 51 ஆயிரத்து 680 ஆகும். மேலும் ஆசனூர் போலீ சார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ. 83 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.

    பெருந்துறை:

    பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.

    பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2,151 மூட்டைகளில், 1,04,000 கிலோ கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர்.

    இதில் முதல் தரக் கொப்பரை குறைந்த பட்சமாக கிலோ ரூ.77.79-க்கும், அதிகபட்சமாக, ரூ.88.30 -க்கும் விற்பனையானது.

    2-ம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ.30.30-க்கும், அதிகபட்சமாக ரூ.82.99 -க்கும் விற்பனையானது.

    மொத்தம் ரூ. 83 லட்சத்துக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.

    ×