கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 74.98 அடி யாக உயர்ந்துள்ளது.வினாடிக்கு 1,957 கனஅடியாக நீர் வரத்து கொண்டிருக்கிறது.
கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதார மாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பவானி சாகர் அணையின் நீர்மட்ட மும் உயர்ந்து வருகிறது.

இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 74.98 அடி யாக உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1,957 கனஅடியாக நீர் வரத்து கொண்டிருக்கிறது.

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1800 கனஅடியாக நீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று மீண்டும் 2000 கனஅடியாக நீர் அதிகரித்து திறந்து விடப்பட்டு வருகிறது.

இதேப்போல் குண்டேரி ப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 31.35 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 5.87 அடியாகவும், வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 29.53 அடியாகவும் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com