வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

வீட்டில் தனியாக இருந்த செந்தில்குமார் தூக்குபோட்டு கொண்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு பெரிய வலசு ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் செந்தில்குமார். இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். செந்தில்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

இவர் நீண்ட நாட்களாக தனக்கு திருமணம் ஆகவில்லை என மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்த தாக கூறப்படுகிறது. இந்நி லையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த செந்தில்குமார் தூக்கு போட்டுக் கொண்டார்.

இதை அடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செந்தி ல்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் இதுகுறித்து அவரின் சகோதரர் தங்க ராஜ் ஈரோடு வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com