பிரிண்டிங் பட்டறை உரிமையாளர் தூக்குபோட்டு தற்கொலை

கணேசன் மரச்சட்டத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சூரம்ப ட்டி போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரிண்டிங் பட்டறை உரிமையாளர் தூக்குபோட்டு தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு சூரம்பட்டிவலசு, பட்டேல் வீதியை சேர்ந்தவர் கணேசன் (37). இவர் பிரிண்டிங் பட்டறை வைத்து நடத்தி வந்தார். கடந்த சில மாதங்களாக சரிவர வேலை இல்லாததால் வெளியில் கடன் வாங்கி தொழில் செய்து வந்துள்ளார்.

ஆனால் கடன் தொகை யை திருப்பி செலுத்தாததால் கடன்காரர்கள் வீடு தேடிவந்து கேட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் இவரது மனைவி சரண்யா கடந்த ஒரு மாதகாலமாக தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அவ்வ ப்போது வந்து கணவரை பார்த்து சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ த்தன்று பிரிண்டிங் பட்டறை யில் தனியாக இரு ந்த கணேசன் மரச்சட்டத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொ ண்டார்.

இது குறித்து சூரம்ப ட்டி போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com