மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பெண் பலி

பூங்கொடி மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார்.
மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பெண் பலி
Published on

பெருந்துறை:

திருப்பூர் மாவட்டம் நீலகண்டபுரம் வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி பூங்கொடி (வயது 55).

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி தீபாவளி அன்று ஈரோட்டில் உள்ள அவர்க ளது உறவினரை பார்ப்பத ற்காக தனது மகன் கவுதம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

மோட்டார் சைக்கிளை கவுதம் ஓட்டி வந்தார். பூங்கொடி பின் பகுதியில் அமர்ந்து கொண்டு வந்தார்.

இதை தொடர்ந்து அவர்கள் பெருந்துறை அடுத்த ஊத்துக்குளி- விஜயமங்கலம் ரோட்டில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.

அப்போது பூங்கொடி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார். இதை கண்டு அவரது மகன் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலும் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com