ஆடு திருடிய 2 பேர் கைது

கட்டி இருந்த ஆடுகளில் கிடாவை காணவில்லை.போலீசார் மாணிக்கம், விக்னேசை கைது செய்தனர்.
ஆடு திருடிய 2 பேர் கைது
Published on

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் அடுத்த கெஞ்சனூர், புது தோட்டத்தை சேர்ந்தவர் பூவாத்தாள் (57). இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று ஆடுகளை தோட்டத்திற்கு அருகே உள்ள காலியிடத்தில் கட்டி இருந்தார்.

ஒரு மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது கட்டி இருந்த ஆடுகளில் கிடாவை காணவில்லை.

இது குறித்து சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பக்கத்து தோட்டத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் 2 பேர் ஆட்டை திருடி சென்றது பதிவாகி இருந்தது. இதை வைத்து போலீசார் துப்பு துலுக்கினர்.

சத்தியமங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில் பவானிசாகர் அருகே பகுத்தம்பாளை யத்தை சேர்ந்த மாணிக்கம் (31), கெஞ்சனூரை சேர்ந்த அப்புசாமி என தெரிய வந்தது.

இதற்கு உடந்தையாக வடக்குப்பேட்டையை சேர்ந்த விக்னேஷ் (32) என்பவர் இருந்ததும் தெரியவந்தது. போலீசார் மாணிக்கம், விக்னேசை கைது செய்தனர்.

இதில் அப்புசாமி 2 நாட்களுக்கு முன்பு பவானிசாகர் போலீஸ் நிலையத்தில் பதிவாகியிருந்த வழக்கில் ஒன்றில் கைது செய்யப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com