search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "is stuck in"

    • இன்று காலையில் இருந்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
    • எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாநகரமே ஸ்தம்பித்தது.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் ரோடு, மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோட்டி ல் உள்ள ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    குறிப்பாக பன்னீர்செ ல்வம் பார்க் பகுதியில் சாலையின் இருபுறம் 100-க்கும் மேற்பட்ட ஜவுளி க்கடைகள் உள்ளன. இன்று காலையில் இருந்து கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.

    இதே போல் பேன்சி கடைகள், நகை கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. எங்கு திரும்பினாலும் மக்கள் கூட்டமே காணப்ப ட்டது. இதனால் இந்த பகுதியில் இன்று காலையிலிருந்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் வழியாக மணிக்கூ ண்டு மூலம் ஈரோடு பஸ் நிலையத்திற்கு வாகனங்கள் சென்று வருகிறது. இந்த பகுதியில் சாலையின் இருப்புறம் ஜவுளி கடைகள் உள்ளதால் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இதனால் இந்த பகுதியில் வாகனங்கள் கடந்து செல்ல நீண்ட நேரம் ஆனது. இதேபோல் ஆர்.கே.வி.ரோடு, மேட்டூர் ரோடு, கே.வி.என்.ரோடு, பெருந்துறை சாலையிலும் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்கில் இருந்து கலெக்டர் அலுவலகத்தை கடக்க ஏறக்குறைய 30 நிமிடங்கள் ஆனது. எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாநகரமே ஸ்தம்பித்தது.

    ஆங்காங்கே போக்குவரத்து போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×