என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பலியானவர்களை காணலாம்
மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலி
- திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் உள்ள மரத்தில் பயங்கரமாக மோதியது.
- போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த உத்தாண்டியூர் ஆலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குணா என்கிற தேவராஜ் (30) சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் வேல்(25) பிட்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. குணா , பிரகாஷ் வேல் இருவரும் நண்பர்கள்.
இந்நிலையில் குணா, பிரகாஷ் வேல் இருவரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். பவானிசாகர் அடுத்த சிங்க ராயன் மேடு வனப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளனர். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் உள்ள மரத்தில் பயங்கரமாக மோதியது.
இதில் குணா மற்றும் பிரகாஷ் வேல் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் குணா மற்றும் பிரகாஷ் வேல் இருவரும் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடினர். அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பவானிசாகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இருவரையும் பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே குணா மற்றும் பிரகாஷ் வேல் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவில் தான் சத்தியமங்கலம் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அதற்குள் நேற்று நடந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






