என் மலர்
ஈரோடு
இ-பாஸ் பெற கொரோனா பரிசோதனை சான்றிதழ் அவசியம் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.
ஈரோடு:
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களால் 2-வது கட்டமாக கொரோனா பரவல் ஏற்பட்டு உள்ளது.
இதன் காரணமாக வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும், இ-பாஸ் கேட்டு விண்ணப்பிப்பதில், உண்மை தன்மை அறியப்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் இ-பாஸ் வாங்குவதற்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் அவசியமாக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறியதாவது:-
பள்ளிபாளையம், குமாரபாளையம், விஜயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு ஏராளமானவர்கள் வேலைக்கு வருகிறார்கள். அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் கடிதத்தை இணைத்து விண்ணப்பித்தால், வேலைக்கான பாஸ் வழங்கப்படும். மேலும், தொழில் சம்பந்தமாகவும், திருமணம், இறப்பு, மருத்துவம் தொடர்பாகவும் பிற மாவட்டங்களில் இருந்து ஈரோட்டுக்கு வர இ-பாஸ் விண்ணப்பித்தால் கொரோனா பரிசோதனை சான்றிதழை கட்டாயம் இணைக்க வேண்டும்.
இதற்காக அந்தந்த மாவட்டங்களில் பி.சி.ஆர். மருத்துவ பரிசோதனை செய்து கொரோனா இல்லை என்று உறுதி அளிக்கப்பட்ட சான்றிதழை விண்ணப்பதாரர்கள் இணைக்க வேண்டும். இதையடுத்து முழுமையான விசாரணைக்கு பிறகே இ-பாஸ் வழங்கப்படும்.
ஈரோடு தலைமை தபால் அலுவலகத்தில் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், 16-ந் தேதி வரை தபால் அலுவலகம் மூடப்பட்டு உள்ளது. இதேபோல் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்பவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. அவர்கள் வீடு, வீடாக சென்று கியாஸ் வினியோகம் செய்வதால், அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது; டிவி மூலமாகவே பாடம் கற்பிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-
தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது; டி.வி. மூலமாகத்தான் பாடத்திட்டம் கற்பிக்கப்படும். பிளஸ்-2வில் எஞ்சிய ஒரு தேர்வை எழுதாத மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது.
12-ம் வகுப்பில் 718 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர். விண்ணப்பிக்காத 34,812 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தால் எழுதலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அரசு பள்ளிகளில் வரும் 13-ந்தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

அந்தியூரில் 1,100 வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தார்கள். ரூ.1½ லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம் போனது.
அந்தியூர்:
அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது.
இந்த ஏலத்துக்கு சென்னம்பட்டி, ஜரத்தல், எண்ணமங்கலம், ஆப்பக்கூடல், அத்தாணி பகுதிகளில் இருந்து விவசாயிகள் 1,100 வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தார்கள்.
இதில் கதலி ஒரு கிலோ ரூ.40-க்கும், நேந்திரம் ரூ.25-க்கும், பூவன் ஒரு தார் ரூ.525-க்கும், செவ்வாழை ரூ.680-க்கும், தேன்வாழை ரூ.640-க்கும், மொந்தன் ரூ.300-க்கும், பச்சை நாடன் ரூ.380-க்கும், ரொபஸ்டா ரூ.400-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1½ லட்சத்துக்கு வாழைத்தார்கள் விற்பனையானது.
அந்தியூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச்சேர்ந்த வியாபாரிகள் போட்டிப்போட்டு வாழைத்தார்களை ஏலம் எடுத்துச்சென்றனர்.

ஈரோடு தலைமை தபால் அலுவலகத்தில் கணவன்-மனைவி உள்பட புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அலுவலகம் மூடப்பட்டதால் மாவட்டம் முழுவதும் தபால் சேவை முடங்கியது.
ஈரோடு:
ஈரோடு காந்திஜிரோட்டில் தலைமை தபால் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் 32 வயது பெண் ஊழியருக்கு கடந்த 2-ந் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தலைமை தபால் அலுவலகம் மூடப்பட்டது. மேலும், 3-ந் தேதி தபால் அலுவலகத்தில் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் தபால் ஊழியர்கள் உள்பட மொத்தம் 212 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த பரிசோதனையின் முடிவு நேற்று வெளியானது. இதில் கணவன்-மனைவி உள்பட 4 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 3 பேர் தபால் பிரிக்கும் பிரிவில் பணியாற்றி உள்ளனர். மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் தலைமை தபால் அலுவலகம் வருகிற 16-ந் தேதி வரை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
தலைமை தபால் அலுவலகம் மூடப்பட்டு உள்ளதால், ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள தபால் சேவை முடங்கியது. ஏற்கனவே கடந்த 6-ந் தேதி முதல் தபால் அலுவலகம் மூடப்பட்டு உள்ளதால் சுமார் ஒரு லட்சம் தபால்கள் வினியோகம் செய்யப்படாமல் தேங்கி கிடக்கிறது. மேலும், 10 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால், தபால் சேவைக்கு மாற்று ஏற்பாடு செய்ய தபால் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதுகுறித்து தபால் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டம் முழுவதும் இருந்து பெறப்படும் தபால்களும், வேறு மாவட்டங்களில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு வரும் தபால்களும் மொத்தமாக ஈரோடு தலைமை தபால் அலுவலகத்துக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து அனைத்து தபால்களும் பிரிக்கப்பட்டு அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். தினமும் சுமார் 20 ஆயிரம் தபால்கள் பிரித்து அனுப்பப்படும்.
இந்தநிலையில் தபால் அலுவலகம் மூடப்பட்டு உள்ளதால், மற்ற மாவட்டங்களில் இருந்து ஈரோட்டுக்கு வர வேண்டிய தபால்களும் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. மேலும், வெளி மாவட்டங்களுக்கும் தபால் அனுப்ப முடியாத நிலை உள்ளது. எனவே ஈரோடு மாவட்டத்துக்கான தபால்களை சேலம் அல்லது கோவை அலுவலகத்தில் வைத்து பிரித்து அனுப்பி வைக்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். எனவே தபால் சேவையை அளிப்பதற்காக மாற்று ஏற்பாடு பற்றி விரைவில் முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக சுகாதாரத்துறை சார்பில் நேற்று மாலை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் ஈரோடு மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் நேற்று முன்தினம் நிலவரப்படி 288 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 2 பேர் வேறு மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இதனால் நேற்றைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 286 ஆனது. இதில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 196 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையே ஈரோடு பெரியார்நகரில் 3 பேரும், ராஜாஜிபுரத்தில் 4 பேரும் கொரோனா தொற்று காரணமாக நேற்று பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களது பாதிப்பு விவரம் இன்று (புதன்கிழமை) வெளியாகும் பட்டியலில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடம்பூர் அருகே ஊருக்குள் புகுந்த யானை கூட்டத்தை பொதுமக்கள் பட்டாசு வெடித்து விரட்டினார்கள்.
டி.என்.பாளையம்:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தி, பவானிசாகர், தாளவாடி, தலமலை, ஆசனூர், கேர்மாளம், டி.என்.பாளையம், கடம்பூர், விளாமுண்டி, ஜீர்கள்ளி என 10 வனச்சரகங்கள் உள்ளன.
இந்த வனப்பகுதிகளில் யானை, மான், சிறுத்தை, புலி, காட்டெருமை என ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன. இதில் யானைகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுவது வாடிக்கையாகி வருகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை கடம்பூரை அடுத்த கானக்குந்தூர் வனப்பகுதியில் இருந்து 10-க்கும் மேற்பட்ட யானைகள் வெளியேறி அருகே உள்ள ஊருக்குள் புகுந்தது. பின்னர் ஒரு விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்ய தொடங்கின. உடனே அப்பகுதி மக்கள் ஒன்று கூடி பட்டாசு வெடித்தும், தகர டப்பாக்களை தட்டி ஒலி எழுப்பியும் யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினார்கள். மேலும் யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் இருக்க வனத்துறையினர் அகழி அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
பவானிசாகர்:
பவானிசாகர் அணைக்கு அதன் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் வருகிறது. நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 362 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 447 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் கொள்ளளவு 81.19 அடியாக உள்ளது. அணையில் இருந்து ஆற்றுக்கு வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

ஈரோட்டில், கடந்த மாதத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 7 ஆயிரத்து 685 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாநகர் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த கோரியும், சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து போக்குவரத்து போலீசார் ஈரோடு மாநகர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அப்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. குறிப்பாக ஈரோட்டில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த ரோட்டில் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்தல், செல்போன் பேசியபடி வாகனங்கள் ஓட்டி வருபவர்கள், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த மாதம் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய பல்வேறு வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
அதிக பாரம் ஏற்றி வந்தவர்கள் 12 பேர். சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி வந்தவர்கள் 20 பேர். செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியவர்கள் 101 பேர். ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டிவந்தவர்கள் 3 ஆயிரத்து 719 பேர். ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் 651 பேர் உள்பட மொத்தம் 7 ஆயிரத்து 685 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வாகன ஓட்டிகளிடம் இருந்து மொத்தம் ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் அபராதமும் வசூலிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு எல்லை மாரியம்மன் கோவில் அருகில் குண்டும் -குழியுமான ரோட்டை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு எல்லை மாரியம்மன் கோவில் அருகில் சத்திரோடு, பவானி ரோடு, நேதாஜி ரோடு ஆகிய ரோடுகள் சந்திக்கும் இடத்தில் குண்டும் -குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் மிகவும் சிரமப்படுகிறார்கள். சில நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயங்களுடன் செல்வதையும் காணமுடிகிறது. எனவே குண்டும் -குழியுமாக காணப்படும் ரோட்டை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் எல்லை மாரியம்மன் கோவில் முன்பு செல்லும் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியில்லாமல் பல மாதங்களாக தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் போது மூக்கை பிடித்தபடி செல்லவேண்டிய அவல நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சாக்கடை கால்வாயில் ஏற்பட்டு உள்ள அடைப்பை நீக்கி கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புஞ்சைபுளியம்பட்டி அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புஞ்சைபுளியம்பட்டி:
புஞ்சைபுளியம்பட்டியில் நேற்று முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி தலைமையில் போலீசார் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். குரும்பபாளையம் பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு ஒருவர் மது விற்பனை செய்து கொண்டிருந்ததை போலீசார் கண்டனர். உடனே அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அவர் அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி (வயது 49) என்பதும், அந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கி வந்து விற்பனை செய்ததும்,’ தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மூர்த்தியை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 104 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னிமலை அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே உள்ள ராசாப்பாளையம், புள்ளாங்காட்டை சேர்ந்தவர் சாமிநாதன். விவசாயி. இவருடைய மகள் அம்பிகா (வயது 23). பட்டதாரி பெண்ணான இவருக்கு சமீபத்தில் மொடக்குறிச்சியை சேர்ந்த ஒருவருடன் திருமணம் செய்ய உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி இரவு விஷ மாத்திரை தின்று அம்பிகா மயங்கி விழுந்து உள்ளார். இதை கண்டதும் அவருடைய பெற்றோர், அம்பிகாவை மீட்டு சென்னிமலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். இதுபற்றி அறிந்ததும் அம்பிகாவின் உடலை சென்னிமலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்பிகா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

சித்தோடு அருகே துணி பதனிடும் ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
பவானி:
இந்தநிலையில் அந்த ஆலையில் வைத்திருந்த எண்ணெய் பேரல்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து துணி பதனிடும் எந்திரங்களுக்கும் தீ பரவியது. மேலும், துணி பேல்களிலும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அங்கு வேலை செய்து கொண்டிருந்த 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடோடி வந்து உயிர்தப்பினார்கள்.
இதுகுறித்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ பயங்கரமாக எரிந்து கொண்டு இருந்ததால், தீயை கட்டுக்குள் கொண்டு வர சிரமம் ஏற்பட்டது. தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். ஆலையில் உள்ள எண்ணெய் கொதிகலன் மீது தண்ணீரை அடித்து குளிர்வித்ததால், அது வெடிக்காமல் பாதுகாக்கப்பட்டது. இதனால் மிகப்பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சுமார் 2 மணிநேரம் போராடி தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பவானி அருகே சித்தோடு கொங்கம்பாளையத்தில் பழனிசாமி என்பவருக்கு சொந்தமான துணி பதனிடும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் நேற்று காலையில் வழக்கம்போல் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த ஆலையில் திடீரென மின் வினியோகம் தடைபட்டு உள்ளது. பின்னர் மீண்டும் மின் வினியோகம் செய்யப்பட்டது.
இந்தநிலையில் அந்த ஆலையில் வைத்திருந்த எண்ணெய் பேரல்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து துணி பதனிடும் எந்திரங்களுக்கும் தீ பரவியது. மேலும், துணி பேல்களிலும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அங்கு வேலை செய்து கொண்டிருந்த 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடோடி வந்து உயிர்தப்பினார்கள்.
இதுகுறித்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ பயங்கரமாக எரிந்து கொண்டு இருந்ததால், தீயை கட்டுக்குள் கொண்டு வர சிரமம் ஏற்பட்டது. தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். ஆலையில் உள்ள எண்ணெய் கொதிகலன் மீது தண்ணீரை அடித்து குளிர்வித்ததால், அது வெடிக்காமல் பாதுகாக்கப்பட்டது. இதனால் மிகப்பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சுமார் 2 மணிநேரம் போராடி தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திம்பம் மலைப்பாதையில் ரோட்டில் படுத்து கிடந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்ற பின்னர் வாகனங்கள் சென்றன.
ஈரோடு:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி, ஜீர்கள்ளி, தலமலை, ஆசனூர், கேர்மாளம், கடம்பூர், டி.என்.பாளையம், சத்தியமங்கலம், விளாமுண்டி, பவானிசாகர் என மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
மேலும் சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம், ஆசனூர் வழியாக திண்டுக்கல்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. வனவிலங்குகள் இந்த சாலையை அடிக்கடி கடப்பது வழக்கம். மேலும் திம்பம் மலைப்பாதையில் புலி தாக்கி பலர் இறந்து உள்ளனர். இதனால் திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்ல வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர்.
இந்தநிலையில் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு காரில் 2 பேர் சென்று கொண்டிருந்தனர். திம்பம் மலைப்பாதையின் 27-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது ரோட்டோரத்தில் சிறுத்தை படுத்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் தங்கள் காரை சிறிது தூரத்தில் நிறுத்தினர். பின்னர் காரில் இருந்தபடி ரோட்டில் படுத்து கிடந்த சிறுத்தையை அவர்கள் தங்களுடைய செல்போனில் படம் பிடித்தனர்.
ரோட்டில் சிறுத்தை படுத்து கிடந்த தகவல் அறிந்ததும் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் அப்படியே நின்றன. ரோட்டில் சிறிது நேரம் படுத்துக்கிடந்த சிறுத்தை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. இதைத்தொடர்ந்து வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன.