என் மலர்
ஈரோடு
விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோடு மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. மேலும் காய்கறி மார்க்கெட்டுகளும் அடைக்கப்பட்டிருந்தது.
ஈரோடு வ.உ.சி. பெரிய மார்க்கெட், சத்தியமங்கலம் பூ மார்க்கெட், பெருந்துறை தினசரி காய்கறி மார்க்கெட் ஆகியவை அடைக்கப்பட்டிருந்தது.
கோபிசெட்டிபாளையம், சென்னிமலை, பெருந்துறை, புஞ்சை புளியம்பட்டி, கவுந்தப்பாடி, நம்பியூர், ஆப்பக்கூடல், பவானி, கொடுமுடி, சத்தியமங்கலம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஒருசில டீ கடைகள் மட்டுமே திறந்திருந்தது. ஈரோடு மாநகரில் ஒருசில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
புஞ்சை புளியம்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை.
ஈரோட்டில் புகழ்பெற்ற கனி மார்க்கெட் ஜவுளி சந்தை வழக்கம்போல் செயல்பட்டது. ஆனாலும் வெளிமாநில வியாபாரிகள், பொதுமக்கள் கூட்டம் இன்றி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் வழக்கம்போல் அனைத்து பஸ்களும் ஓடியது. ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களும் வழக்கம்போல் இயங்கியது. போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ரெயில் நிலையம், பஸ் நிலையம், மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் 5 போலீஸ் சப்- டிவிஷன்களில் 40 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இதில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிந்து வருகின்றனர்.
சட்ட ஒழுங்கை காக்கவும், குற்ற சம்பவங்களை தடுக்கவும் 24 மணி நேரமும் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் சோதனைசாவடிகள், வாகன தணிக்கை என்று 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பணி முடிந்து சோர்வடையும் போலீசாருக்கு போலீஸ் நிலையத்திலேயே ஓய்வு எடுக்க ஓய்வறை உள்ளது. ஆனால் போதிய வசதி இல்லாததால் ஓய்வெடுப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையத்திலும் பெட் வசதியுடன் கூடிய படுக்கை வசதி ஏற்படுத்த உத்தரவிட்டார். இதன்படி கட்டில், பெட்டுடன் கூடிய படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து எஸ்.பி.தங்கதுரை கூறும் போது, மாவட்டத்தில் போலீசார் ஓய்வு எடுக்க அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கட்டில் உடன் கூடிய படுக்கை வசதி ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த படுக்கை வசதி போலீஸ் நிலையங்களுக்கு தகுந்தாற் போல் மாறுபடும்.
பணி முடிந்து வரும் போலீசார் இரவு ரோந்து முடிந்து வரும் போலீசார் சில மணி நேரம் ஓய்வெடுக்க பயன்படுத்தி கொள்ளலாம். பணி நேரத்தில் தலைவலி, உடல்வலி ஏற்பட்டால் தாங்கள் பணிபுரியும் போலீஸ் நிலையத்திலேயே அதிகாரிகளிடம் அனுமதி பெற்று சிறிது நேரம் ஓய்வெடுத்து கொள்ளலாம்.
தற்போது மாவட்டம் முழுவதும் 21 போலீஸ் நிலையங்களில் இந்த கட்டில் உடன் கூடிய படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. பின்னர் படிபடியாக மற்ற போலீஸ் நிலையத்துக்கும் இந்த வசதி செய்து கொடுக்கப்படும் என்றார்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் கர்நாடக எல்லையான கர்கேகண்டியிலிருந்து பர்கூர் வரும் கர்நாடகா -அந்தியூர் பிரதான சாலையில் இரண்டு கரடிகள் சர்வசாதாரணமாக நள்ளிரவில் சாலையில் உலா வந்தது.
அப்போது அந்த வழியே வந்த சரக்கு வாகனத்தை கண்டவுடன் சரக்கு வாகனத்தின் முன்னால் சுமார் அரை கிலோமீட்டர் தூரம் சாலையிலேயே ஓடி வனப்பகுதிக்குள் கரடிகள் நுழைந்தது. 2 கரடிகளும் வனப்பகுதிக்குள் நுழையும் காட்சியினை பர்கூர் பகுதியைச் சேர்ந்த சரக்கு வாகன ஓட்டுனர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் நள்ளிரவில் வனவிலங்குகள் அடிக்கடி சாலையில் சுற்றித் திரிவதால் இருசக்கர வாகனத்தில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். மேலும் சரக்கு வாகன ஓட்டுனர்களும் மிகவும் கவனமாக வாகனத்தை இயக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
பவானிசாகரில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக அலுவலக வளாகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பவானிசாகர் அணையில் ஏலம் எடுத்த ஒப்பந்ததாரர்கள் மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகிறார்கள். இவர்களுக்காக கடந்த ஆண்டு புதிய அலுவலக கட்டிடம் துறை சார்பில் கட்டி கொடுக்கப்பட்டது.
இதனால் மீன் வளர்ச்சி கழக அலுவலக வளாகம் இருந்த பழைய கட்டிடம் குடோனாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் பவானிசாகர் அணையில் மீன் பிடிப்பதற்காக டெண்டர் எடுத்துள்ள ஒப்பந்ததாரர்களின் கியாஸ் சிலிண்டர்கள், தெர்மோகோல் பெட்டிகள், மூன்று இருசக்கர வாகனங்கள், மற்றும் படகின் உதிரிபாகங்கள், மீன் வளர்ச்சி கழக அலுவலகத்தின் பழைய பர்னிச்சர்கள் போட்டு வைக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் இந்த குடோனில் வைக்கப்பட்டிருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த அலுவலக வளாகத்தில் 12-க்கும் மேற்பட்ட கியாஸ் சிலிண்டர்கள் இருந்த நிலையில், அதில் உள்ள 4 சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த 4 கியாஸ் சிலிண்டர்களும் வெடித்ததால் குடோன் முழுவதும் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் குடோன் முழுவதும் எரிந்து அதில் வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசம் ஆனது. இதுகுறித்து பவானிசாகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, மான், புலி, கரடி, சிறுத்தை உள்படட பல்வேறு காட்டு விலங்குகள் வசித்து வருகின்றன.
வனப்பகுதியில் உள்ள யானைகள் உணவு தேடி சாலைகளில் சுற்றி திரிகிறது. அவை தண்ணீருக்காக ரோட்டை அடிக்கடி கடந்து செல்கிறது.
சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி வனப் பகுதியிலும் தினமும் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என வனத்துறை எச்சரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பண்ணாரி வனப்பகுதியில் திம்பம் மலைப்பகுதி செல்லும் சாலையில் ஒற்றை யானை உணவு தேடி வந்தது. அந்த யானை திடீரென அந்த பகுதியிலேயே நின்று கொண்டிருந்தது. இதை கண்டு அந்த வழியாக வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து நீண்ட நேரம் காத்திருந்தனர்.
யானையின் அருகே இரு சக்கர ஒன்று வாகனம் வந்தது. இதை கண்ட அந்த யானை திடீரென இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபரை துரத்தியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் வாகனத்தை வேகமாக ஓட்டி கொண்டு சென்று உயிர் தப்பினார்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, ஒற்றை யானை மிகவும் ஆக்ரோஷமாக சுற்றித் திரிகின்றன. இதனால் வனப்பகுதிக்குள் ஒற்றை யானையை கண்டால் வாகனங்கள் நீண்ட தூரம் தள்ளி நிறுத்துங்கள். யானை அருகே செல்ல வேண்டாம். யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்ற பிறகே அந்த பகுதியை கடந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.






